
தனுஷ் நாசர் ரஜினியை தொடர்ந்து ஹாலிவுட் போகும் தமிழ் நடிகர் என்ற பெருமையை கொடுக்கிறார் அரவிந்த் சாமி தனுஷ்க்கு கிடைத்தும் அந்த வாய்ப்பை இன்னும் பயன்படுத்தாமல் தமிழ் தான் முக்கியம் என்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார் . என்பது குறிப்பிடத்தக்கது.
சும்மா ஹாலிவுட் ஹீரோ மாதிரி பளபளன்னு இருக்கார் என்று அரவிந்த்சாமி ஹீரோவாக நடித்த காலத்தில் நிறைய கமெண்ட்கள் வந்தன. ஆனால் அப்போதிருந்த தகவல் தொடர்பு குறைபாடு ஹாலிவுட்டுக்கு அவரை செல்ல விடாமல் தடுத்துவிட்டது.
இப்போது அந்த வாய்ப்பு வந்து கதவை தட்டியிருக்கிறது. தனி ஒருவனில் ஹீரோவையே டாமினேட் பண்ணியவர் அடுத்து நடித்த டியர் டாட் ஹிந்தி படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.
இப்போது போகன் படத்தில் நடித்துவரும் அரவிந்த்சாமியை ஒரு ஹாலிவுட் படத்தில் ஹீரோவாக நடிக்க அழைத்திருக்கிறார்.
இதற்காகவே லண்டனுக்கு சென்று ஸ்பெஷல் பயிற்சிகள் மூலம் உடம்பைக் குறைக்கவிருக்கிறார்.