
அர்ஜுன் தாஸ் – அன்னா பென் – யோகிபாபு இணையும் புதிய குடும்ப படம்: பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய தமிழ் திரைப்படம் இன்று காலை பூஜையுடன் இனிதே துவங்கியது. இந்த படத்தை எழுதி இயக்குவது, அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்.
இளம் தலைமுறை நட்சத்திரங்களான அர்ஜுன் தாஸ், மலையாளத்தின் பிரபல நடிகை அன்னா பென், நகைச்சுவை உலகின் ரசிகர்கள் விரும்பும் யோகிபாபு, மேலும் வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நால்வரையும் மையமாகக் கொண்டு உருவாகும் கதையில், குடும்பம், உறவுகள், உணர்வுகள் ஆகியவை நவீன களத்துடன் கலவி பெறுகின்றன.
கமர்ஷியல் அம்சங்களும் குடும்ப பார்வையாளர்களையும் சமமாக கவரும் வகையில் இந்த படத்தை ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக ஹரிஷ் துரைராஜ் உருவாக்குகிறார்.
பூஜையைத் தொடர்ந்து, சென்னை, மங்களூர், மும்பை ஆகிய நகரங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.
தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து வரும் ஷான் ரோல்டன் இப்படத்தின் இசையை வடிவமைக்கிறார்.
படத்தின் தலைப்பு மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் விரைவில் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
—
தொழில்நுட்ப குழு
இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ். A
இசை: ஷான் ரோல்டன்
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: Action சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்

Arjun Das – Anna Ben – Yogi Babu starrer family entertainer begins with a traditional pooja ceremony
The new Tamil film produced by Power House Pictures commenced today with a traditional pooja ceremony. The film is written and directed by debut filmmaker Harish Durairaj.
Leading young actor Arjun Das, acclaimed Malayalam actress Anna Ben, popular comedian Yogi Babu, and senior actress Vadivukkarasi play the principal roles. Revolving around these four characters, the story explores relationships, emotions and family dynamics in a refreshing contemporary backdrop.
Director Harish Durairaj shapes this project as a complete family entertainer, blending engaging commercial elements with content that appeals to audiences of all age groups.
Following the pooja, the team has planned a single stretch of shooting across Chennai, Mangaluru and Mumbai.
Music for the film is composed by Shaaan Rahman, known for delivering consistently successful soundtracks.
The title and other key announcements about the film will be officially revealed soon by the production house.
Technical Crew
Director: Harish Durairaj
Producer: Power House Pictures
Cinematography: Aravind Viswanathan
Editing: Arul Moses A
Music: Shaan Rahman
Art Direction: Raj Kamal
Costume Design: Nawa Rambo Rajkumar
Stunts: Action Santosh
Public Relations: Yuvaraj
