
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி, ஆர்யாவின் The Show people நிறுவனங்கள் அதிக பெருட் செலவில் தயாரிக்கும் படம் “ கடம்பன்
ஆரியா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கேத்தரின் தெரஸா நடிக்கிறார். மற்றும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், எத்திராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கடம்பன் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான ஆர்யா படமாக உருவாகி உள்ளது. ஆர்யா இப்படத்திற்காக தனது உடம்பை வருத்தி கடம்பனாகவே வாழ்ந்திருக்கிறார். இன்றைய நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களால் நம் உயிரான காட்டு வளம் அழிக்கப்படுவதை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் படம். காட்டின் வளர்ச்சியே அந்த நாட்டின் வளர்ச்சி என்பார்கள். அப்படிப்பட்ட காட்டை அழித்துக்கொண்டிருக்கிறோம். அதன் விளைவுகள் என்னென்ன என்பதை விரிவாக சொல்லும் படம் தான் கடம்பன். படம் இம்மாதம் 14 ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று உலகமுழுவதும் வெளியாகிறது. மஞ்சப்பை படத்தை போலவே இந்த கடம்பனும் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்றார் இயக்குனர் ராகவா
இந்த படம் அதிகமாக பாங்காக் காடுகளில் அதிகமாக படபிடிப்பு நடத்தியுள்ளனர். அதிக பிரமாண்ட முறையில் இந்த படத்தை எடுத்துள்ளனர் அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் அதிக யானை காட்சிகள் உள்ளது இதனால் குழந்தைகளையும் இந்த படம் அதிகம் கவரும் இந்த படம் அடுத்த மாதம் சித்திரை முதல் நாள் அதாவது ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகிறது .