ஆர்யா யார் பக்கபலமும் இல்லாமல் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நல்ல வெற்றியும் கிடைத்தது ஆனால் அதை தக்க வைக்காமல் விட்டுவிட்டார் என்று தான் சொல்லணும் ஆர்யா தனிப்பட்ட முறையில் மிகவும் நல்லவர் ஆனால் கடவுள் நல்லவங்களை தான் சோதிப்பார் .
ஆர்யா மீது ஆயிரம் முணுமுணுப்புகள் இருந்தாலும், அடிப்படையில் நட்புக்கு கை கொடுக்கிற நல்லவர் என்பார்கள் இன்டஸ்ட்ரியில். ரிலீஸ் நேரத்தில் அவர் விட்டுக் கொடுத்த சம்பள பாக்கியை மொத்தமாக சேர்த்தால், ரஜினியை வைத்தே படம் எடுத்துவிடலாம். அந்தளவுக்கு விட்டுக் கொடுத்தே கெட்டுப்போனவர் அவர்.
ஜீவா, விஷால், சிம்பு என்று யார் அழைத்தாலும், ஒரு சீனில் தலை காட்டிவிட்டு போகிற அளவுக்கு ஈகோ பார்க்காத ரப்பர் மனுஷன் என்றெல்லாம் கொண்டாடுகிறது இன்டஸ்ட்ரி. நல்லவன் போகிற பாதையில்தான் நெருஞ்சி முள்ளும் கருவை முள்ளும் விரவிக்கிடக்கும். சமயம் பார்த்து பொசுக்கென்று குத்தும். அப்படியொரு துரதிருஷ்டம் இப்போது ஆர்யாவுக்கு.
அவரது கடைசி நேரப் படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மார்க்கெட் சரசரவென சரிந்து அதல பாதாளத்திற்கு வந்துவிட்டது. முன்பெல்லாம் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தவர், இப்போது எங்கும் தலைகாட்டுவதில்லை. இந்த நிலையில்தான் விஷால் ஹீரோவாக நடிக்கும் இரும்புத் திரை படத்தில் ஆர்யாவுக்கு வில்லன் வேடம் தரப்பட்டுள்ளது.
நண்பன் விஷாலுக்காக ஒப்புக் கொண்டாரா, அல்லது வர்ற படத்தை விட வேண்டாம் என்று ஒப்புக் கொண்டாரா… அது அந்த ஆர்யாவுக்கே வெளிச்சம்!