தொடர் தோல்வியில் துவண்டு இருந்த ஆர்யாவுக்கு அறுதல் வெற்றியாக ‘பெங்களுர் நாட்கள்’ படம் அமைந்தது படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா, ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கும் கடம்பன் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக தன் உடம்பை வருத்தி இருக்கிறார் மெலிந்து அழகா இருந்த ஆர்யாவை கட்டு மஸ்தான உடல்வாகு ஏற்ற சொன்ன இயக்குனர்ராகவன் இதற்காக தன் விடா முயர்சியால் உடல் எடையை ஏற்றி சும்மா அர்நால்ட் மாதிரி உடம்பை ஏற்றி உள்ளார் காரணம் கதைக்கு அப்படி தேவையாம்
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து இவர் நடிக்கும் படத்தை அமீர் இயக்கவுள்ளார்.
இப்படத்துக்கு சந்தன தேவன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 6-ம் திகதி மதுரையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது.
அமீரின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார். மேலும் நயன்தாரா இதில் கதாநாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது.