Tuesday, April 22
Shadow

தமிழ் மாணவர்களை குடிகாரர்கள் என்று பேசிய ஆர்யா கொத்தித்து எழுந்த மாணவர்கள்

ஆர்யா பொதுவாக எப்பவும் பொது நிகழ்வுகளில் தன் நெருங்கிய நண்பர்களை வம்புக்கு இழுத்து விட்டு குளிர் காய்வார் ஆனால் சமீப காலமாக அவருக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை எதாவது ஒரு வம்பை தன் ட்விட்டர் மூலம் வாங்கி வருகிறார் இப்பவும் அப்படிதான் மாணவர்களை குடிகாரர்கள் என்று வர்ணித்துள்ளார் .

நடிகர் ஆர்யாவும் விஷாலும் ஜல்லிக்கட்டு பத்தி ஒரு பதிவு செய்தார்கள். அதில் ஜல்லிக்கட்டுன்னா என்ன? என்று நக்கலாக கேட்டு இருந்தார் ஆர்யா. அதற்கு பயங்கர எதிர்ப்புகள் வந்த போதிலும், தமிழ் உணர்வோடு விளையாடாதீங்க என்று கமெண்டுகள் கொடுக்கப்பட்டன.

அதன்பின், ஜல்லிக்கட்டு விஸ்வரூபம் எடுத்து, இத்தனை பெரிய போராட்டமாக மாறியது. அதை எதிர்பார்க்காத ஆர்யா, அப்படியே திரும்பி, நான் சொன்னதை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று பதிவிட்டார். அதை ஏற்றுக்கொள்ள இளைஞர்கள் ரெடியாக இல்லை.

அதன் பின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு இயக்குனர் அமீரோடு கலந்துகொண்டார். அவர் கலந்துகொண்டதை எதிர்த்ததினால் வெளியேறினார்.

இந்நிலையில், அமீரின் இயக்கத்தில் சந்தனதேவன் என்ற மாடுபிடி வீரன் படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வந்தது. அதையும் இளைஞர்கள் ஏற்கமாட்டோம் என்று சொல்லி வருகின்றனர்.

இதெல்லாம், போன மாசம். இப்போ என்ன தெரியுமா?

இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தால், அந்நிய நாட்டு குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் என்ற ஒரு உறுதி எழுந்தது. அதனை ஒரு கல்லூரி செயல்படுத்தியது.
c2_s_1axaaeyxvh
அந்த செய்திக்கு ஆர்யா,’அப்படியே பாரின் லிக்கர்களை கூட பிரெஷ் ஜூஸ், ஸ்மூத்தி மூலம் மாற்றிவிட்டால் நல்லா இருக்கும்” என பதிவு செய்தார்.

மாணவர்கள் குடிகாரர்கள் என்று சொல்வது போல அவர் பதிவிட்டு இருக்கிறார் என்றும், அப்போ ஜல்லிக்கட்டு, இப்போ மாணவர்கள் குடிகாரர்களா, நீ திருந்தவே மாட்டியா, ஆர்யா?என்றும், இந்த பதிவினை பலரும் கண்டித்து இருக்கிறார்கள்.
173b6c93-a785-4431-9cfa-78c6f24cbb21
இந்த 9 நாள் போராட்டத்தில், மெரினா குப்பையில், ஒரு காலி மது பாட்டில் கூட இல்லை என்பதை பாராட்டி வருகிறார்கள்.

Leave a Reply