Thursday, January 15
Shadow

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர்: படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர்: படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமாண்டிக் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. கதாநாயகர்களாக அசோக் செல்வன் மற்றும் நிமிஷா சஜயன் நடித்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே ஆரம்பத்திலிருந்தே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தரமான வெற்றிப் படங்களை வழங்கிய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனலுடன் இணைந்து இந்தப் பிரம்மாண்ட படத்தை தயாரித்துள்ளது. தயாரிப்பாளர்களாக ஐசரி கணேஷ் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து இப்படத்தை முன்னெடுத்துள்ளனர்.

அசோக் செல்வனின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், ரொமாண்டிக் திரில்லர் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கதையின் தன்மையை கருத்தில் கொண்டு, பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் மணிகண்டன் ஆனந்தன், புதிய பார்வையுடன் கதையை திரையில் கொண்டு வந்துள்ளார்.

இசையமைப்பாளராக ‘சித்தா’, ‘கனா’ போன்ற படங்களின் வெற்றிப் பாடல்களால் அறியப்பட்ட திபு நினன் தாமஸ், ஒளிப்பதிவாளராக புஷ்பராஜ் சந்தோஷ், படத்தொகுப்பாளராக ‘டியூட்’, ‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொகுத்த பரத் விக்ரமன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
மேலும் கலை இயக்குநர் மகேந்திரன், பாடலாசிரியர் மோகன் ராஜன், தேசிய விருது பெற்ற ஒப்பனைக் கலைஞர் பட்டணம் ரஷீத், ஒலி வடிவமைப்பாளர் உதயகுமார் (Sound Vibe Studios) மற்றும் நடன இயக்குநர் அசார் ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது பின்னணி பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த ரொமாண்டிக் திரில்லர் படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Ashok Selvan – Nimisha Sajayan’s Romantic Thriller Wraps Up Shooting

The shooting of the upcoming romantic thriller starring Ashok Selvan and Nimisha Sajayan has been successfully completed. The film is jointly produced by Million Dollar Studios and VELS Film International and has already generated strong anticipation among audiences.

Following the success of acclaimed films such as Good Night, Lover, and Tourist Family, Million Dollar Studios has teamed up with VELS Film International for this large-scale project. The film is produced by Ishari Ganesh and Yuvaraj Ganesan.

Marking one of the most expensive productions in Ashok Selvan’s career, the film is crafted as a romantic thriller with a distinct visual tone. In line with the narrative, a majority of the scenes were shot during night schedules. The film is directed by debutant Manikandan Anandan, who brings a fresh perspective to the genre.

The technical team features composer Thibu Ninan Thomas, known for his hit songs in Chithha and Kana; cinematographer Pushparaj Santhosh; editor Bharath Vikraman, acclaimed for his work in Dude, Good Night, and Tourist Family; art director Mahendran; lyricist Mohan Rajan; National Award–winning makeup artist Pattnam Rasheed; sound designer Udhayakumar (Sound Vibe Studios); and choreographer Azar.

With principal photography now completed, post-production work is progressing at full swing. The film’s title, first-look poster, and further details are expected to be officially announced soon. Made on a lavish scale, the film has significantly heightened expectations among fans and cinema enthusiasts.