Wednesday, January 21
Shadow

ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பாண்ட் நிகழ்வில் கமல் ஹாசன்: “பிராந்தியம் புதிய தேசியம்… கதை சொல்லலின் பொற்காலம் இது!”

ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பாண்ட் நிகழ்வில் கமல் ஹாசன்: “பிராந்தியம் புதிய தேசியம்… கதை சொல்லலின் பொற்காலம் இது!”

சென்னை:
ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பாண்ட் நிகழ்வில் கலந்து கொண்ட உள்நாட்டு சினிமாவின் பெருமை திரு. கமல் ஹாசன், இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறையின் வரலாற்று திருப்பத்தை உணர்த்தும் வகையில் முக்கிய உரையாற்றினார்.

தமிழ்நாடு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எம். பி. சாமிநாதன், ஜியோ ஸ்டார் தலைமைத்துவ குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில், “இன்று கதை சொல்லல் எந்த திரை, எந்த மொழி, எந்த எல்லைக்கும் உட்பட்டது அல்ல; பார்வையாளர்களே புதிய தளம்,” என அவர் கூறினார்.

“பார்வையாளர்களே மாற்றத்தை உருவாக்குகிறார்கள்”

டிஜிட்டல் உலகம் வேகமாக விரிவடைகிறது, இளம் பார்வையாளர்கள் வரம்பற்ற ஆர்வத்துடன் உள்ளனர், இதனால் ஒவ்வொரு நல்ல கதை—தேசியத்தைத் தாண்டி உலகத்தைச் சென்றடைவதாக கமல் ஹாசன் வலியுறுத்தினார்.
“காந்தாரா, த்ரிஷ்யம், பாகுபலி, புஷ்பா… இவை இந்திய சினிமா மட்டுமல்ல; கலாச்சார நிகழ்வுகள். தமிழில் ‘விக்ரம்’, ‘அமரன்’—பட்ஜெட்டால் அல்ல… நேர்மையால் பயணித்த படங்கள்,” என்றார்.

தமிழ்நாடு–ஜியோ ஸ்டார் இணைப்பு: ₹12,000 கோடி மதிப்புள்ள MoU

தமிழ்நாடு அரசு மற்றும் ஜியோ ஸ்டார் இடையே கையெழுத்தான ‘சவுத் அன்பாண்ட்’ திட்டம் தென்னிந்திய கதை சொல்லலை உலகளாவிய உயரத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய முயற்சி எனவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கே 4,000 கோடிக்கும் மேல் முதலீடு ஒதுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

படைப்பாற்றல் சூழல் – கல்வியிலிருந்தே கட்டமைக்க வேண்டும்

இந்திய முழுவதும் உள்ள கல்லூரிகளில் எழுதுதல், ஒளிப்பதிவு, தொகுப்பு, ஒலி, அனிமேஷன் மற்றும் VFX போன்ற துறைகளில் ஜியோ முன்னோடி பயிற்சி திட்டங்களை தொடங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்தார்.
“கருவிகள் இருக்கின்றன… ஊக்கமும் இருக்கிறது… இளைஞர்களுக்கு வாய்ப்புகளை கட்டமைத்தாலே படைப்பாற்றல் பொருளாதாரம் உயர்வடையும்,” என்றார்.

“பிராந்தியம் புதிய தேசியம்… இனம் புதிய சர்வதேசம்”

மதுரை, மலப்புரம், மாண்டியா, மசிலிபட்டினம் போன்ற ஊர்களில் பிறக்கும் கதைகள் இனி ‘பிராந்திய சினிமா’ அல்ல; அவை தேசிய கலாச்சார நிகழ்வுகள் என அவர் கூறினார்.

படைப்பாளிகளுக்கான அழைப்பு

“இது கதை சொல்லிகளின் பொற்காலம். கருவிகள் உங்கள் கையில். அனுமதி தேவையில்லை. தைரியம் மட்டும் போதும்,” என படைப்பாளிகளை உற்சாகப்படுத்தினார்.
தமிழ்நாடு படைப்பாற்றலின் தலைநகரமாக திகழும் நேரம் இது என்றும், தமிழிலிருந்து உலக அரங்கில் ஒலிக்கும் கதைகளை உருவாக்க வேண்டிய தருணம் இது என்றும் கமல் ஹாசன் வலியுறுத்தினார்.

At the Jio Hotstar South Unbound Event, Kamal Haasan Says: “Regional is the new national… this is the golden era of storytelling!”

Chennai:
Speaking at the Jio Hotstar South Unbound event, Indian cinema icon Mr. Kamal Haasan delivered a powerful address highlighting a historic turning point in India’s media and entertainment industry.

In the presence of Tamil Nadu Deputy Chief Minister Mr. Udhayanidhi Stalin, Minister Mr. M. P. Saminathan, and the senior leadership of Jio Star, he said:
“Today, storytelling is not confined to any screen, device or language. The audience themselves have become the platform.”

“The audience is driving the transformation”

Mr. Kamal Haasan emphasized that with the rapidly expanding digital universe and an incredibly curious young audience, every strong story now travels beyond borders.

“Kantara, Drishyam, Baahubali, Pushpa… these are not just films; they are cultural phenomena.
In Tamil, Vikram and Amaran proved that it is not budget but truth and rooted storytelling that truly travel,” he said.

Tamil Nadu–Jio Star Deal: MoU worth ₹12,000 crore

He announced that the Memorandum of Understanding signed between the Tamil Nadu Government and Jio Star under the South Unbound initiative is a major step toward taking South Indian storytelling to global heights.
Over the next five years, Tamil Nadu alone will receive investments exceeding ₹4,000 crore, he noted.

Creative ecosystem must be built through education

Mr. Haasan urged Jio to partner with colleges across India to introduce advanced training in writing, cinematography, editing, sound, animation and VFX.
“We have the tools and the inspiration. If we build opportunities for our youth, the creative economy will flourish,” he said.

“Regional is the new national… identity is the new international”

Stories originating from places like Madurai, Malappuram, Mandya or Masulipatnam are no longer ‘regional cinema’; they have become national cultural moments.

A call to creators

“This is the golden age for storytellers.
The tools are in your hands. You don’t need permission.
Only courage makes the difference,” he urged, encouraging creators to take bold steps.

He added that this is the moment for Tamil Nadu to lead the country with creative strength, and to craft stories from Tamil that stand tall on the global stage.