நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது !
இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவும், தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகருமான சூர்யா கூட்டணியில் உருவான “நந்தா, பிதாமகன்” என இரு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை குவித்ததுடன், உலக அளவில் பெரும் பாரட்டுக்களை பெற்றது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் உற்சாகம் கொள்ள வைத்ததுடன், படம் மீது பெரும் ஆவலை தூண்டியது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பரபரப்பாக...