Thursday, October 22
Shadow

Author: admin

சென்னை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பை “திட்டம் போட்டு திருடுற கூட்டம்” களவாடிவிட்டனர்

சென்னை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பை “திட்டம் போட்டு திருடுற கூட்டம்” களவாடிவிட்டனர்

Latest News
தமிழக ரசிகர்கள் மத்தியில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படம் 'டூ மூவிபஃஃப்ஸ்' மற்றும் 'அக்ராஸ் பிலிம்ஸ்' தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சுதர் இயக்கி வரும் "திட்டம் போட்டு திருடுற கூட்டம்". 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போலவே, சென்னை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பை கலை இயக்குனர் ரெமியன் அழகாக தன்னுடைய மனதில் களவாடி, சென்னை அருங்காட்சியகம் போலவே ஒரு பிரம்மாண்ட அரங்கத்தை நுங்கம்பாக்கத்தில் அமைத்து இருக்கிறார். எப்படிப்பட்ட வடிவமைப்பையும் கனகச்சிதமாக படப்பிடிப்பு களத்தில் உருவாக்கி தரும் கலை இயக்குனர் ரெமியன், 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்' உள்ளிட்ட படங்களுக்கு சிறப்பான பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. கயல்' சந்திரன் - சாட்னா டைட்டஸ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இந்த "திட்டம் போட்டு திருடுற கூட்டம்" படத்தின் இ...
‘குளோபல் பீஸ் சாங் அவார்ட்ஸுக்கு’ தேர்ந்தெடுக்க பட்டுள்ள   இளம் இசையமைப்பாளர்கள்  விஷால் – ஆதித்யா மற்றும் ஷங்கர் எஹசான்

‘குளோபல் பீஸ் சாங் அவார்ட்ஸுக்கு’ தேர்ந்தெடுக்க பட்டுள்ள இளம் இசையமைப்பாளர்கள் விஷால் – ஆதித்யா மற்றும் ஷங்கர் எஹசான்

Latest News
சென்னையை சார்ந்த இளம் இசையமைப்பாளர்கள் விஷால் - ஆதித்யா மற்றும் ஷங்கர் எஹசான் ஆகியோர் 'குளோபல் பீஸ் சாங் அவார்ட்ஸுக்கு' தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர் என்று கடந்த ஜூன் 8 ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த கூட்டணியானது தாங்கள் இசையமைத்த 'பலோபாஷா' பாடலுக்கு 'சோசியல் ஸ்டார்' என்னும் விருதை தட்டிச் சென்றுள்ளனர். சாய்சரண் மற்றும் வைஷாலி குரலில் உதயமாகி, மனித உணர்வுகளையும், அன்பு - அமைதி ஆகிய குணங்களையும் உள்ளடக்கி இருக்கும் இந்த 'பாலோபாஷா' பாடலானது தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது மேலும் சிறப்பு. இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால் - ஆதித்யா கூட்டணி மட்டும் தான் இந்த 'குளோபல் பீஸ் சாங் அவார்ட்ஸ்' (GPSA) விழாவில் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 'குளோபல் பீஸ் சாங் அவார்ட்ஸ்' (GPSA) பற்றி: ProjectPeac...
ஆதரவற்ற குழந்தைகளுக்கு ‘கபாலி’ படத்தை திரையிட்டனர் தூத்துக்குடி – நெல்லை மாவட்டங்களின் சார்பில் விளையாட இருக்கும்  ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி

ஆதரவற்ற குழந்தைகளுக்கு ‘கபாலி’ படத்தை திரையிட்டனர் தூத்துக்குடி – நெல்லை மாவட்டங்களின் சார்பில் விளையாட இருக்கும் ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி

Latest News
ஒரு புறம் உலகமே கபாலி படத்தின் வெற்றியை கொண்டாடி கொண்டு இருக்க, மறுபுறம் அந்த கபாலி படத்தை பார்க்க வசதியில்லாமல் பல ஆதரவற்ற குழந்தைகள் ஏங்கி கொண்டு இருக்கின்றனர். அந்த ஆதரவற்றோர்களை மனதில் கொண்டு, அவர்களுக்காக கபாலி படத்தின் ஒரு சிறப்பு காட்சியை ஆல்பர்ட் திரையரங்கில் திரையிட்டார் 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணியின் உரிமையாளர் 'ஆல்பர்ட்' முரளிதரன். 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணியின் இணை உரிமையாளர் டாக்டர் ரவீந்திரன், அனுகிரகா தன்வந்ரி மெடிக்கல் - கல்வி - ஆராய்ச்சி மையத்தின் தளமிங் நிர்வாகி திருமதி சுயம்பு கனி மற்றும் ரவுண்டு டேபிள் தொண்டு நிறுவனத்தின் வினய் கிராந்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்தினர். வருகின்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி - நெல்லை மாவட்டங்களின் சார்பில் விளையாட இருக்கும் 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணியின் அனைத்து வீரர்களும் இந்த சிறப்பு காட்சிய...
தாய்ப்பாசத்தின் உச்சம் தொடும் படமாக உருவாகியுள்ளது ‘வென்று வருவான்’

தாய்ப்பாசத்தின் உச்சம் தொடும் படமாக உருவாகியுள்ளது ‘வென்று வருவான்’

Latest News
புதுமுக நாயகன் வீரபாரதி .சமீரா, எலிஸபெத் , ராஜாராணி பாண்டியன், காதல் சுகுமார் . நெல்லை சிவா.வையாபுரி . கிரேன் மனோகர் நடித்துள்ள படம் தான் 'வென்று வருவான்'. இப் படத்தை எழுதி இயக்கி தன் ரியாலிட்டி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார் விஜேந்திரன். படம் பற்றி அவர் கூறும்போது "இது ஒரு கிராமத்துக்கதை.செய்யாத 8 கொலைகளுக்கு நாயகன் மீது கொலைப்பழி விழுகிறது. தூக்கு மேடை வரை போகிறான். அதற்குள் தான் தன் தாய் பாடும் ஒரு பாடலை இறுதி விருப்பமாகக் கேட்க விரும்புகிறான். அவனது தாய் வரவழைக்கப் படுகிறாள்.அவள் அந்த ஊரில் நல்லதோ கெட்டதோ எந்த நிகழ்வாக இருந்தாலும். பாட்டுப்பாடும் பழக்கம் உள்ளவள். அவளோ அப்போது .உடல் நலிவுற்று கண் பார்வையும் இழந்து இருக்கிறாள். இருந்தாலும் தன் மகனின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு பாடலைப் பாடுகிறாள். அது கேட்பவர்களின் செவியில் விழுந்து இதயம் உருக்கும் பாடல் .அவள் பாடிய பின...
வில்லன் நடிகர்களைக் கூட வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்ய வேண்டுமா  -நடிகர்ஆர்யன்

வில்லன் நடிகர்களைக் கூட வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்ய வேண்டுமா -நடிகர்ஆர்யன்

Latest News
கஸ்தூரிராஜா மூலம் 'ட்ரீம்ஸ்' படத்தில் அறிமுகமான ஆர்யன், விஜய்யுடன் 'திருப்பாச்சி' யில் பான்பராக் ரவியாக நடித்தபிறகு பான்பராக் ரவி என்கிற அந்தப் பெயரே ஒட்டிக் கொண்டு விட்டது. எங்கே போனாலும்அந்தப் பெயர் சொல்லியே அழைக்கிறார்களாம். இனி ஆர்யனுடன் பேசுவோம்! கொஞ்சம் முன்கதை..? நடிப்பு மீதுள்ள காதலில் நாடகங்களில் நடித்து வந்தேன். லெஜண்ட் ஆர்ட்டிஸ்ட் ப்ளே தியேட்டர்ஸில் நிறைய நடித்தேன்.அவற்றில் 'எட்டு திருடர்கள்', 'ஜீசஸ் க்ரைஸ்ட்' முக்கியமானவை ,பல முறை அரங்கேற்றப் பட்டவை. இன்று என்னை 'பான்பராக்ரவி' என்கிறார்கள். ஒரு வில்லனாகவே பார்க்கிறார்கள்.ஆனால் நான் ஜீசஸாக.- ஏசு கிறிஸ்துவாக நடித்தவன். 'ஜீசஸ் க்ரைஸ்ட்' என்கிற அந்த நாடகத்தைப் பார்த்தவர்கள் அச்சு அசலாக என் தோற்றம் ஏசு கிறிஸ்துவைப் போலவே இருப்பதாகக் கூறுவார்கள். இப்படி இருந்த நான், கஸ்தூரிராஜா சாரால் ட்ரீம்ஸ்' படத்தில் அறிமுகமானேன். அதன் வெ...
அமெரிக்காவில் நடிகர் விக்ரமின் மோசமான நடவடிக்கை

அமெரிக்காவில் நடிகர் விக்ரமின் மோசமான நடவடிக்கை

Shooting Spot News & Gallerys
அமெரிக்கா வாழ் தமிழர்கள் சார்பாக, ஒவ்வொரு வருடமும் புகழ் பெட்ரா தமிழர்களை, பெரும்பாலும் நடிகர்களை அமெரிக்காவிற்கு அழைக்க படுவார்கள்.இங்கு இந்திய சுதந்திரத்தினத்திற்காக, நியூயார்க்கில் இந்தியா தினம் என்று ஒரு ஊர்வலம் நடக்கும். அதில் தமிழர்கள் பிரதிநிதியாக இந்த நடிகர்களை வாகனங்கள் மேல் நிறுத்தி அழைத்து செல்வார்கள். அதன்படி இந்த வருடம் அழைத்து வரப்பட்டவர் திமிர்பிடித்த நடிகர் விக்ரம். டாக்டர். பிரகாஷ் எம் ஸ்வாமி இங்குள்ள தமிழர் சங்கத்தின் தலைவர் ஆவர். அவர் பத்திரிக்கை துறையில் மிக நீண்ட அனுபவம் கொண்டவர். எப்போதும் புன்னகையை முகத்தில் வைத்திருப்பவர். எல்லோரிடமும் அன்பாக பழகுபவர். என்னை போன்ற மிக சாதாரணமான ஆட்களிடம் கூட மிக நட்புடன் இருப்பவர். அவரே கடுப்பாகி, வெறுப்புடன் ஒரு பதிவு போட்டிருக்கிறார் என்றால், இந்த விக்ரம், எல்லைகளை தாண்டி வெகு அப்பால் சென்றிருக்க வேண்டும். டாக்டர் ஸ்வாமி தன் மு...
சிவகார்த்திகேயனின் ரெமோ தலைப்பு ரங்கநாதன் என்கிற மோகனாவாக மாற்றமா?

சிவகார்த்திகேயனின் ரெமோ தலைப்பு ரங்கநாதன் என்கிற மோகனாவாக மாற்றமா?

Latest News
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் "ரெமோ" இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொடு இருக்கிறது இந்த நேரத்தில் படத்தின் தலைப்பு மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு வந்துள்ளனர். ரெமோ என்பது ஆங்கில பெயர் என்பதனால் இப் படத்துக்கு வரிவிலக்கு கிடையாது என்று கூறிவிட்டனர் இதனால் ரங்கநாதன் என்கிற மோகனா என்று மாற்ற திட்டமிட்டுள்ளனர்.என்று செய்திகள் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்க படுகிறது இதை பற்றி தயாரிப்பாளரும் ஹீரோ சிவகார்த்திகேயன் இல்லை என்று மறுகின்றனர். சிவகார்த்திகேயன் இந்த தலைப்பும் நல்ல இருக்கிறது இருக்கு ஆனால் மாற்றும்எண்ணம் எதுவும் இல்லை என்றும் சொல்கிறாராம்.ஆக்க பொறுத்த நம்ம ஆற பொருக்க மாட்டோமா என்ன இன்னும் ஒரு மாதம் தானே ...
செவாலிய விருதை ரசிகர்களுக்கு  அர்ப்பணிக்கிறேன்: கமல்

செவாலிய விருதை ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: கமல்

Latest News
நடிகர் கமலஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செவாலிய விருதை பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக கமலஹாசனுக்கு செவாலியே விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசனுக்கு 1997ம் ஆண்டு செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள படங்களில் நடிப்பாற்றலை கமல் வெள்ளியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அரசிடம் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும், மாநில அரசிடம் கலைமாமணி விருதையும் பெற்றவர் கமலஹாசனுக்கு என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 3 முறையும், பிலிம்பேர் விருதை 19 முறையும் கமல் பெற்றுள்ளார். செவாலிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து கமலஹாசனுக்கு வாழ்த்துகள் குவிந்...
உலகநாயகன் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு செவாலியர் விருது நடிகர் சங்கம் வாழ்த்து

உலகநாயகன் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு செவாலியர் விருது நடிகர் சங்கம் வாழ்த்து

Latest News
பிரான்ஸ் அரசாங்கத்தின் மிக உயர்ந்த விருதான செவாலியர் விருதை மறைந்த நடிப்பு ஆசான் நடிகர் திலகம் டாக்டர் திரு.சிவாஜிகணேசன் அவர்களுக்கு கொடுத்து கௌரவித்தது.அதே போல் இன்று எங்கள் சகோதரர் உலக நாயகன் டாக்டர் திரு .கமல்ஹாசன் அவர்களுக்கு செவாலியர் விருதினை பிரான்ஸ் அரசாங்கம்அறிவித்துள்ளதை தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் பாராட்டப்பட்ட திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு அதே செவாலியர் விருது கிடைத்திருப்பது சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சந்தோசத்தை கொடுத்துள்ளது. செவாலியர் விருது பெற்ற நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு பெரும் விழா எடுத்து சிறப்பித்தது போல் , திரு. கமல்ஹாசன் அவர்களுக்கும் மாபெரும் விழா எடுக்க விரும்புகிறோம்.இது அவரை நேரில் சந்தித்த பிறகு முடிவாகும். செவாலியர் வி...