
இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் ஹாலிவுட் படங்களுக்கு புதிய தரநிலையை அமைத்த ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’
2025 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் இந்திய திரையரங்குகளில் வெளியான ஹாலிவுட் திரைப்படங்களில், அதிக கவனத்தை ஈர்த்து தொடர்ந்து ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்து வருவது இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படமே.
விடுமுறை சீசனை முன்னிட்டு பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு படங்கள் வெளியானாலும், அவற்றை எல்லாம் பின்தள்ளி ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. முதல் வாரத்தின் சிறப்பான வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது வார இறுதியிலும் வசூலில் குறைவு இல்லாமல் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்து ரசிக்கக் கூடிய திரைப்படமாக ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, அதன் பிரம்மாண்டமான காட்சியமைப்பு, தொழில்நுட்பத் தரம் மற்றும் உணர்ச்சிகரமான கதை சொல்லல் அனைத்து வயதினரையும் ஈர்த்துள்ளதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய முழுவதும் ரசிகர்களுடன் வலுவான உணர்வுப் பிணைப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படம், இதுவரை ரூ.130 கோடிக்கு மேல் வசூலித்து குறிப்பிடத்தக்க சாதனையை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியான ஹாலிவுட் திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றிப் படமாக ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் திரையரங்குகளின் வருகையை அதிகரித்த இந்த படம், இந்திய சந்தையில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கான புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளதாக திரைப்பட வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Avatar: Fire and Ash Emerges as the Biggest Hollywood Film of 2025 in India, Dominates Christmas Holiday Season
James Cameron’s Avatar: Fire and Ash has firmly established itself as the biggest Hollywood release of 2025 in India, delivering an extraordinary box office performance and reaffirming the franchise’s unmatched appeal with Indian audiences.
Over Christmas Day, the film continued its phenomenal run, outperforming all new releases and maintaining a commanding lead at the box office gearing for a promising second weekend. The sustained momentum highlights not just a strong opening, but exceptional word of mouth across markets.
During the Christmas holiday season, Avatar: Fire and Ash has emerged as the number one choice for family audiences, drawing audiences across age groups to cinemas and reinforcing its status as the ultimate festive big-screen spectacle.
So far, the film has grossed over ₹130 crore at the Indian box office, a milestone that underscores its massive reach, scale and emotional connect with audiences nationwide.
With its continued dominance and holiday seasons pull, Avatar: Fire and Ash stands tall as a defining cinematic success of the year, setting new benchmarks for Hollywood releases in India.
