தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை பிரபல ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பைரவா படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
ஸ்ரீ கிரீன் நிறுவனம் வரும் வாரம் ரிலீஸ் ஆகும் ஆண்டவன் கட்டளை படத்தையும் இவர்கள் th