தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே படத்தில் பாக்கியிருப்பதாகவும் அதுவும் வரும் அக்டோபர் 22-ம் தேதி சுவிட்சர்லாந்தில் படமாக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடனமாடவுள்ளார்.