Saturday, February 8
Shadow

மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ள மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை இன்று ஒன்இந்தியாவின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் இயக்குநர் பாரதிராஜா.

பெண் காவலர்களின் அவலங்களைச் சொல்லும் மிக மிக அவசரம் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸால் ட்விட்டரில் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அந்தப் படத்தின் முதல் அசையும் போஸ்டரை இன்று பாரதிராஜா அவரது அலுவலகத்தில் வைத்து வெளியிட்டார்.

ஒன்இந்தியா தமிழின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் இந்தப் போஸ்டரை அவர் வெளியிட்டார்.

தயாரிப்பாளராக அமைதிப்படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பாலபரணி ஒளிப்பதிவு செய்ய, ஜெகன் கதை வசனம் எழுதியுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா, ஈ ராமதாஸ், முத்துராமன், ஹரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர்.

Leave a Reply