Saturday, March 22
Shadow

பைரவா வெளியீட்டில் ஒரு சிறிய மாற்றம்!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பைரவா ஆடியோ ரிலீஸில் ஒரு சிறிய மாற்றம்!அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் புதிய படம் பைரவா. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக திருநெல்வேலி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து இப்படத்தின் டப்பிங் பணிகளும் முழு வீச்சாக நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் முன்பு கிருஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது டிசம்பர் முதல் வாரத்திலேயே இப்படத்தின் டீசர் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Leave a Reply