மதுவை விட்டு வாழ முடியுமா? – நகைச்சுவை வழியில் சமூகத்தின் கசப்பான உண்மையை பேசும் ‘நல்லபடம்
மதுவை விட்டு வாழ முடியுமா? – நகைச்சுவை வழியில் சமூகத்தின் கசப்பான உண்மையை பேசும் ‘நல்லபடம்’
செப்டம்பர் 18-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது
சென்னை:
மது அருந்துவது தனிமனிதனின் பழக்கமா, குடும்பத்தை பாதிக்கும் பிரச்சினையா அல்லது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் ஒரு சவாலா? இந்தக் கேள்வியை சீரியஸான பிரச்சாரமாக அல்லாமல், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் மற்றும் வணிகரீதியான பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரசிகர்களிடம் கொண்டு செல்லும் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘நல்லபடம்’.
C. பிரபுராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் டாக்டர் A. ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
மது இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாத அளவுக்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞர் குமரன் தான் இப்படத்தின் மையக்...









