Sunday, September 8
Shadow

Blog

மா.கா.பா. ஆனந்த்வுடன் நடிக்க  நோ சொன்ன அமலாபால்

மா.கா.பா. ஆனந்த்வுடன் நடிக்க நோ சொன்ன அமலாபால்

Latest News
சிவகார்த்திகேயனுக்கு பிறகு விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த். கழுகு கிருஷ்ணாவுடன் இணைந்து அவர் நடித்த வானவராயன் வல்லவராயன் படம் வெற்றி பெற்றது. ஆனால் அதையடுத்து அவர் சிங்கிள் ஹீரோவாக நடித்து வெளியான நவரச திலகம், அட்டி போன்ற படங்கள் தோல்விப்படங்களாகி விட்டன. இருப்பினும், மா.கா.பாவின் கைவசம் கடலை, மாணிக், பஞ்சு மிட்டாய் ஆகிய படங்கள் உள்ளன. மேலும், தற்போது மா.கா.பாவின் சம்பளமும் 20 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், அவர் நடிக்கும் புதிய படமொன்றில் நாயகியாக நடிக்க அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால், திருமணத்திற்கு பிறகும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் அமலாபால், அந்த படத்தின் கதையைகூட கேட்காமல் ஹீரோ மா.கா.பா. ஆனந்த் என்பதை கேட்டதுமே நோ சொல்லி விட்டாராம். ஆனபோதும், அவருக்கு இணையாக இன்னொரு முன்னணி நடி கையை தனது புதிய படத்திற்கு புக் ...
கணேஷ் பிரசாத்தின் ‘எனது இந்தியா’ என்னும் மியூசிக் வீடியோ ஒன்றரை லட்சம் பார்வையாளர்களை எட்டி இருக்கிறது…

கணேஷ் பிரசாத்தின் ‘எனது இந்தியா’ என்னும் மியூசிக் வீடியோ ஒன்றரை லட்சம் பார்வையாளர்களை எட்டி இருக்கிறது…

Latest News
"அசோக சக்கரம் பறக்குதடா, காணும் கண்களை பறிக்குதடா...." என்ற 'எனது இந்தியா' மியூசிக் வீடியோவின்  வரிகளை  கேட்கும் போது, நம்மை அறியாமலேயே நம் உடம்பில் ஒருவித நாட்டுப்பற்று குடிக்கொள்கிறது. கணேஷ் பிரசாத்தின் 'எனது இந்தியா'  என்னும் இந்த பாடலானது, நம் இந்தியா 70 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைத்ததை முன்னிட்டு, கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. தற்போது இந்த மியூசிக் வீடியோவானது ஒன்றரை லட்சம் பார்வையாளர்களை  'யூடூப்பில்' எட்டி உள்ளது. வெகு குறைந்த நாட்களிலேயே இவ்வளவு பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை இந்த  'எனது இந்தியா' பாடல் திரட்டி இருப்பது முற்றிலும் சிறப்பு.     டாக்டர் எஸ் செல்வமுத்து மற்றும் மஞ்சுநாத் தயாரிப்பில் உருவாகிய 'எனது இந்தியா' மியூசிக் வீடியோவிற்கு பாடல் வரிகள் எழுதி இயக்கி இருக்கிறார் ஏ.ஆர். பரத் குமார். மஸ்தான் மற்றும் கேதரின் நாட்டுப்பற்று ...
“தல 57” படத்தின்ட டைட்டில் கசிந்துள்ளது

“தல 57” படத்தின்ட டைட்டில் கசிந்துள்ளது

Latest News
உலக சினிமா ரசிகர்கள் எல்லோரும் எதிர் பார்க்கும் படம் என்றால் அது "தல 57" இந்த படத்தின் டைட்டில் என்ன டிசர் பாடல்கள் எப்ப வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இந்த சூழ்நிலையில் தல 57 டைட்டில் கசிந்துள்ளது .  சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியா நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘துருவன்’ என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. இந்த டைட்டிலுக்கு அஜித் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இப்படத்திற்கு துருவன் என்று பெயர் வைக்க படக்குழு யோசனையில் உள்ளதாம்,விரைவில் அறவிப்பு வெளியாகும் என்று நம்ம தகுந்த வட்டரங்கள் தெரிவிக்கிறது. மேலும் துருவன் என்பது விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணம் ஆகியவற்றில் உள்ள ஒரு முக்கிய கேரக்டர் ஆகும். அதுமட்டுமின்றி துருவன்’ என்றாலே வெற்றி மேல்...
புலனாய்வு பத்திரிக்கையாளராக நடிக்கும்  ரித்திகா சிங்

புலனாய்வு பத்திரிக்கையாளராக நடிக்கும் ரித்திகா சிங்

Shooting Spot News & Gallerys
இறுதி சுற்று படத்துக்கு பிறகு ரித்திகா சிங் நடிக்கும் படம்ல் விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை பல படங்கள் வாய்ப்பு வந்தாலும் நல்ல கதையை தேர்வு செய்து நடிக்கிறார் .விஷால்  நடித்த மருது படத்திற்கு பிறகு கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என்.அன்பு செழியன் தயாரிக்கும் படம் ஆண்டவன் கட்டளை. காக்கா முட்டை மணிகண்டன் இயக்குகிறார். காக்காமுட்டை, குற்றமே தண்டனை படங்களுக்கு பிறகு மணிகண்டன் இயக்கும் பக்கா கமர்ஷியல் படம். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார், கே.இசை அமைக்கிறார். விஜய் சேதுபதி ஹீரோ. ஐ.டி.துறையில் பணியாற்றுபவராக நடிக்கிறார். இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கணையாக நடித்த ரித்திகா சிங் இதில் துணிச்சலான ஒரு பத்திரிகை நிருபராக நடிக்கிறார். ஒரு மிகப்பெரிய குற்றத்தை துப்பறிந்து கண்டுபிடிக்கிற புலனாய்வு பத்திரிக்கையாளராக நடித்துள்ளார். பிளாக் காமெடி வகையிலான படம். விஜய்சேதுபதி, ரித்தி...
‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இரண்டாவது பாடல் பூட்டானில் வெளியிடப்பட்டது

‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இரண்டாவது பாடல் பூட்டானில் வெளியிடப்பட்டது

Latest News
சினிமா வரலாற்றில் புதியதொரு சாதனையை படைக்க சிங்கப்பூரை நோக்கி தரை வழியே காரில் பயணித்து கொண்டிருக்கின்றனர், 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் குழுவினர். கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடிகர் சூர்யா கொடி அசைத்து ஆரம்பித்து வைத்த இந்த நெடுந்தூர 'சென்னை 2 சிங்கப்பூர்' பயணமானது  ஏறக்குறைய பதினொன்று நாட்களுக்கு பிறகு  தற்போது பூட்டானை கடந்துள்ளது. அவர்கள் திட்டத்தின் படி தங்கள் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் 'போடா..." எனப்படும்  இரண்டாவது பாடலை பூட்டானில் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.ஜே.பாலாஜி, அபிஷேக்கின் குரலில் உருவாகி இருக்கும் இந்த 'போடா...' பாடலுக்கு  சிக்காந்தர் மற்றும் அன்புகனி ஆகியோர் வரிகள் எழுதி இருப்பது மேலும் சிறப்பு. பூட்டானின் எல்லை பகுதி ஆரம்பமானதும், அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரி ஜிப்ரானையும் அவரது குழுவினரையும் மேற்கொண்டு பயணிக...
70 வயது நிரம்பிய நடிகரை தேடும் தேசிய விருது இயக்குனர் மணிகண்டன்

70 வயது நிரம்பிய நடிகரை தேடும் தேசிய விருது இயக்குனர் மணிகண்டன்

Latest News
"கலப்பையின் உழைப்பே அகப்பையில் சோறு..." என்ற கருத்தை  நாம் யாரும் என்றுமே மறந்து விட கூடாது. என்ன தான் தமிழ் ரசிகர்கள் சினிமாவில்  காதல், அதிரடி, நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் ஆகிய குணங்களை விரும்பினாலும், சமூதாய அக்கறை கொண்ட திரைப்படங்களுக்கு மட்டும் அவர்களிடம் என்றுமே நல்ல வரவேற்பு உண்டு. இயக்குனர் மணிகண்டன் இயக்கிய 'காக்கா முட்டை' திரைப்படமே அதற்கு சிறந்த உதாரணம். காக்க முட்டை படத்தை  தொடர்ந்து 'குற்றமே தண்டனை' மற்றும் 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களை இயக்கி இருக்கும் இயக்குனர் மணிகண்டன், தற்போது தன்னுடைய அடுத்த படைப்பான  'கடைசி விவசாயி' படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்க இருக்கிறார். 'ஈரோஸ் இன்டர்நேஷனல்' தயாரிக்க இருக்கும் இந்த 'கடைசி விவசாயி' படத்தில்  70 வயது நிரம்பிய முதியவர் தான் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த வேடத்திற்கு கனக்கட்சிதமாக பொருந்தும...
டப்பிங் வேலையை ஆரம்பித்த ஷங்கரின் 2.O படகுழுவினர்

டப்பிங் வேலையை ஆரம்பித்த ஷங்கரின் 2.O படகுழுவினர்

Latest News
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும் படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது. அமெரிக்க ஓய்வுக்கு பிறகு ரஜினி எப்ப மீண்டும் படபிடிப்புக்கு வருவார் என்று ரசிகர்கள் காத்திருகின்றனர். ரஜினி அக்சய் பாகம் இன்னும் கொஞ்சமே தான் இருக்கிறதாம் . ஆனாலும் படபிடிப்பு மிகவும் ஜருறாய் சென்னியில் நடந்து வருகிறதாம் . தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி ஐ படத்தில் எமி ஜாக்சனுக்கு டப்பிங் கொடுத்த ரவீனா ரவிதான் இந்த படத்திலும் எமிக்கு டப்பிங் கொடுக்கவுள்ளாராம். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....
அக்கா,தம்பி உறவுகளின் அழுத்தத்தை சொல்லும் “கொஞ்சம் கொஞ்சம் “

அக்கா,தம்பி உறவுகளின் அழுத்தத்தை சொல்லும் “கொஞ்சம் கொஞ்சம் “

Latest News
கொஞ்சம் கொஞ்சம் திரைப்படத்தின் இயக்குனர் உதய் சங்கரன் கூறும்போது,இப்படத்தில் அக்கா,தம்பி உறவுகளும்,கதாநாயகன் தன் வாழ்வில் சந்திக்கிற பிரச்சனைகளும்,இறுதியில் அவனுக்கு கிடைக்கின்ற தீர்வும் தான் கதை கரு. அக்கா திலகவதியாக பிரியா மோஹன்,தம்பி திருநாவுக்கரசாக கோகுல் இருவரும் அறிமுகம் ஆகிறார்கள். திலகவதி போல இருக்க வேண்டும் என்று திருநாவுக்கரசை நிறைய மாதங்கள் தேடி,கடைசியாக நண்பரின் மூலமாக கோவையில் உள்ள கோகுல் அறிமுகமானார். கோகுலை சேர்ந்தவர்கள் யாரும் சினிமா துறையில் இல்லை. கோகுல் இப்படத்திற்காக நடிப்பு,நடனம் கற்று கொண்டார். கோகுல், பிரியாவை பார்க்கும் போது அவர்கள் நிஜமாகவே ஒரு அம்மாவின் குழந்தைகளை போல இருக்கிறார்கள் என படக்குழுவினர்கள் பாராட்டினார்கள். கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் ஆற்றலை நான் என் குருநாதர் தேசிய விருது பெற்ற லோகிதாஸ் அவர்களிடம் கற்றுக்கொண்டேன். இரண்டு அறிமுக நாயகர்களின் ...