நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர்கள் விளக்கம்
நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர்கள் விளக்கம்
நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
40 வயது மதிக்கத்தக்க பெண் தாக்கல் செய்த வழக்கில், 'அந்த தேதியில் துபாயில் நடிகர் ஒரு கும்பலுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்' என ...