Friday, April 12
Shadow

போகன் – திரைவிமர்சனம் வியக்கவைத்தவன் ரசிக்கவைத்தவன் Rank 5/4

ஜெயம்ரவி அரவிந்த்சாமி, ஹன்சிகா , நாசர் பொன்வண்ணன் அக்ஷரா ஜாமிநாகேந்திரபிரசாத் மற்றும் பலர் நடிப்பில் இம்மன் இசையில் சௌந்தராஜன் ஒளிப்பதிவில் லக்ஷ்மன் இயக்கத்தில் வந்து இருக்கும் படம் போகன்

தமிழ் சினிமாவின் மைல்கல் ரிலீஸ் முன்னே நாம் செய்தியை நாம் உங்களுக்கு சொல்லி இருந்தோம் அதை நிருபித்துள்ள படம் என்று தான் சொல்லணும் உலக தரம் தொழில் நுட்பம் கலை உடைகள் இப்படி அதாவது சினிமாவில் உள்ள துறையினரும் ஒரே படத்தில் சிறப்பாக அமைவது என்பது மிகவு கடினம் அந்த அளவுக்கு சிறப்பாக அமைந்த படம் என்று தான் சொல்லணும். புது கதை என்று சொல்லுவதை விட புது திரைகதை வித்தியாசமான திரைகதை எண்ணங்கள் அதற்க்கு இயக்குனரை ஒரு பாராட்டு பாராட்டி விட்டு விமர்சனம் பாப்போம்.

ஜெயம் ரவி அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இதே ஊரில், ராஜ பரம்பரையில் இருந்து வந்த வாரிசான அரவிந்த்சாமி, வாழும் வரை ஜாலியாகவும், ஆடம்பரமாகவும் வாழவேண்டும் என்ற குறிக்கோளோடு சொர்க்கலோக வாழ்க்கை வாழ்கிறார்.

இந்நிலையில், ஒருநாள் அரவிந்த்சாமி ஒரு நகைக்கடையின் முன் தனது காரை நிறுத்துகிறார். காரில் இருந்தபடியே நகைக்கடையின் உள்ளே இருக்கும் பையனை உற்றுப் பார்க்கிறார். அப்போது, அந்த பையன் நகைக்கடைக்குள் இருந்து பணத்தை கொண்டு வந்து இவரது காரில் எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டு, உடனே மயங்கி விழுகிறான்.

இதற்கிடையில், ஜெயம் ரவிக்கும் ஹன்சிகாவுக்கும் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருமண தேதி நெருங்கும் சமயத்தில், வழக்கம்போல், அரவிந்த்சாமி தனது காரை நரேன் வேலை பார்க்கும் வங்கியின் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவரை பார்க்கிறார். அப்போது, நரேன் வங்கி பணத்தை எடுத்துக் கொண்டுவந்து அரவிந்த் சாமியின் காரில் வைத்துவிட்டு மயங்கிப் போகிறார்.

ஆஸ்பத்திரியில் கண்விழித்துப் பார்க்கும்போது வங்கியில் இருந்த பணம் கொள்ளை போனதாக அறிந்து அதிர்ச்சியடைகிறார் நரேன். வங்கிப் பணம் கொள்ளை தொடர்பாக நரேனை போலீஸ் கைது செய்கிறது. இதையடுத்து, ஜெயம் ரவியை திருமணம் செய்ய ஹன்சிகா வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை பகைத்துக்கொண்டு ஜெயம் ரவியின் வீட்டுக்கே வருகிறார் ஹன்சிகா.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், தனது அப்பா நிரபராதி என்பதை நிரூபிக்க ஜெயம் ரவி களத்தில் இறங்குகிறார். அதன்படி, இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட அரவிந்த்சாமியை கண்டுபிடித்து விசாரிக்கிறார். விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, அரவிந்த் சாமி கூடு விட்டு கூடு பாயும் வித்தையை பயன்படுத்தி, ஜெயம் ரவியின் உடம்பில் புகுந்து கொள்கிறார்.

அப்போதிலிருந்து, அரவிந்த் சாமி ஜெயம் ரவியாகவும், ஜெயம் ரவி, அரவிந்த் சாமியாகவும் மாறிவிடுகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஜெயம் ரவி உருவத்தில் இருக்கும் அரவிந்த்சாமி ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார். அரவிந்த் சாமியின் குணாதிசயத்துடன் திரியும் ஜெயம் ரவியின் உடல், அதன்பிறகு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது. இதையெல்லாம், ஜெயம் ரவியின் குணாதிசயத்துடன் ஜெயிலுக்குள் இருக்கும் அரவிந்த்சாமி எப்படி முறியடித்தார்? என்பதே மீதிக்கதை.

படத்தின் முக்கிய பலம் என்றால் அது திரை கதை தான் என்பதை நாம் முதலிலே கூறினோம் திரை கதை தான் படத்தின் மிக பலம் அடுத்து இந்த படத்துக்கு அமைந்த ஹீரோ மற்றும் வில்லன் இந்த இருவரும் இல்லாமல் இந்த படத்தை வேறு யார் நடித்து இருந்தாலும் இந்த படம் நினைத்து பார்க்க முடியவில்லை அம்த அளவுக்கு ஜெயம்ரவி மற்றும் அரவிந்த்சாமி இந்த இருவரின் நடிப்பும் ஸ்டைலும் குறிப்பாக அரவிந்த்சாமி தான் படத்தின் முக்கிய பலம் யோவ் நீ எல்லாம் எங்கே பொய் இருந்திங்க இவ்வளு நாளா தமிழ் சினிமா உங்களை எல்லாம் எப்படி விட்டு வைத்தது என்று தெரியவில்லை அடேங்கப்பா என்ன ஒரு ஸ்டைல் நடிப்பு இப்படியும் ஒரு வில்லனா என்று யோசிக்கவைக்கும் அழகு முகம் சாக்லேட் முகம் இந்த முகத்தில் இப்படி ஒரு வில்லத்தனம் அருமை நீங்கள் எல்லாம் இங்க இருக்கவேண்டிய ஆளே இல்லை ஹாலிவுட் இருக்கவேண்டிய நடிகன் சிறப்பு

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் எல்லா தகுதியும் உள்ள ஹீரோ மிக சிறந்த நடிகன் அற்புதமான நடிப்பு சாமி உனக்கு தீனி போட முடியாது நீ எவ்வளவு போட்டாலும் சாபிடுவா அதாவது நடிப்பா என்ன ஒரு நடிகன் வில்லனாகவும் சரி ஹீரோவாகவும் சரி ரஜினிகாந்த் மாதிரி எந்த பாத்திரமும் செய்வேன் என்று நிருபித்துள்ளார் ஜெயம் ரவி முதலில் அசிஸ்டெண்ட் கமிஷனராக ஹீரோவா வரும்போது அவரது ஸ்டைல் அரவிந்த்சாமி ஆவி இவரின் உடலில் பாய்ந்ததும் வில்லனாக மாறும் ஜெயம் ரவி அய்யோ என்ன ஒரு வில்லத்தனம் அந்நியன் விக்ரம் எல்லாம் பொய் ஜெயம்ரவி என்று ரசிக்கவைதுள்ளர். அதே போல காதலி காட்சிகளில் சும்மா செமகிக் எத்தியுள்ளார் .

ஹன்சிகா இது வரை அழகு பொம்மையாக வந்த ஹன்சிகா இந்த பத்திதான் நல்ல நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் என்று சொல்லணும் முதல் காட்சியிலே நம்மை சும்மா ரியல் குடிகாரிகுட இப்படி நடிக்க முடியாது அந்த அளவுக்கு ஒரு சிறப்பான நடிப்பு என்று தான் சொல்லணும் அதே போல் கிளைமாக்ஸ் காட்சியில் அரவிந்த்சாமி ஆவி இவர் உடம்பில் மாறும் போது ஜெயம் ரவியை கட்டியால் குத்தும் இடத்திலும் சரி ஜெயம் ரவியை மிரட்டும் போதும் அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .

அதே போல படத்தில் வரும் மற்ற நட்சித்திரங்கள் எல்லோரும் அவர்களின் பங்கை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர். நாசர் பொன்வண்ணன் அக்ஷரா ஜாமிநாகேந்திரபிரசாத் அடுகளம் நரேன் எல்லோருமே அற்புதமான நடிப்பை வெளி படுத்தியுள்ளனர். என்று தான் சொல்லணும் .

படத்தின் முக்கிய பலம் இம்மான் இசை அருமையான பாடல்கள் அருமையான பின்னணி இசை இம்மானின் வெற்றி மகுடம் என்று தான் சொல்லணும் ஒரு மிக சிறந்த இசை குத்து பாடலும் சரி மேலோடியும் இரண்டும் சேர்ந்த ஒரு கலவையான சுவையான தேன் பயுவது போல பாடல்கள் சபாஷ் இம்மான்

இயக்குனர் லக்ஷ்மன் தமிழுக்கு கிடைத்த பெருமை என்று சொல்லலாம் கமர்சியலில் ஒரு கலைனயணம் மிகுந்த திறமையான சிறந்த இயக்குனர் என்று தான் சொல்லணும் இரண்டாவது படம் இரண்டாவது வெற்றி சூப்பர் மிகவும் ஆபத்தான கதை கத்தி மேல் நடப்பது போல அதை மிகவும் சிறப்பாக செய்துள்ளார் . இரண்டாம் படத்திலேயே அகலக்கால் வைத்து விஷப் பரீட்சையில் இறங்கியிருக்கிறார். அது அவருக்கு கைகொடுத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

இயக்குனரின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவரின் நட்சத்திர தேர்வு என்று சொல்லணும் அது மத்தும் இல்லாமல் எல்லா தொழில் நுட்ப கலைஞ்கர்கள் என்றும் சொல்லணும் இந்த டீம் இவர் தேர்வு செய்ததுக்கு பாராட்டனும்.

இரு கதாபாத்திரங்களின் தன்மையை ஒரு நடிகரால் கொண்டு வருவது மாதிரியான கதையை உருவாக்கி, அதற்கேற்றவாறு பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார். மேலும், விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கி படத்திற்கு முழு வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார்.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்புடன் நகர்கிறது. இரண்டாம் பாதியில்தான் நடுவில் கொஞ்சம் படம் டல்லடிக்கிறது. இருப்பினும், இறுதியில் அனைவருக்கும் திருப்தி கொடுக்கும்படி முடித்திருப்பது சிறப்பு. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்ற அறிவிப்போடு முடித்திருப்பது ரசிகர்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

படத்தின் முக்குஅ பங்கு என்றால் அது ஒளிப்பதிவாளர் சௌந்தர் என்று சொல்லணும் இயக்குனருக்கு மிக பெரிய பலமாக செயல் பட்டுள்ளார் என்று தான் சொல்லனும் ஒவ்வொரு காட்சியும் மிக சிறப்பாக செய்துள்ளார் என்று சொல்லணும் சில இடங்களில் நமக்கு தமிழ் படத்தின் ஒலிப்பதிவா என்று வியக்கும் அளவுக்கு மிக சிறப்பக செயல் பட்டுள்ளார் .

பிரபுதேவா தயாரிக்கும் இரண்டாம் படம் லக்ஷ்மன் இயக்கும் இரண்டாம் படம் ஜெயம்ராவிஅரவிந்சாமி கூட்டணி இரண்டாம் படம் மிக பெரிய வெற்றி படமாக அமைத்துள்ளது வாழ்த்துகள்.

போகன் வியக்கவைத்தவன் ரசிக்கவைத்தவன் Rank 5/4

Leave a Reply