Friday, March 28
Shadow

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகிறது ‘போகன்’

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘போகன்’ திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதிக்குப் பதிலாக பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘போகன்’. பிரபுதேவா தயாரித்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தன. தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்று, சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தார்கள். 2015-ம் ஆண்டின் டிசம்பர் வெளியீடாக இப்படம் தயாரானது.

ஆனால் ஒரு குறிப்பிட்ட படத்தால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது காரணம் அந்த பட குழுவினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க இந்த ரிலீஸ் தேதியில் மாற்றம் வந்து கொண்டே இருந்தது இந்த மாதமும் அவர்களுகாக தான் படம் ரிலீஸ் தேதி மாற்றத்தோடு இருந்தது

இறுதியாக, பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். இதனை முன்வைத்து படத்தையும் விளம்பரப்படுத்தி வந்தார்கள். ஆனால், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சி 3’ திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவித்தார்கள்.

இதனால் ‘சி 3’ படத்தை முன்வைத்து, ‘போகன்’ தங்களுடைய வெளியீட்டை பிப்ரவரி 2-ம் தேதி மாற்றியமைத்துள்ளார்கள். இதனை படக்குழுவினர் தங்களுடைய சமூகவலைதளத்தில் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

இந்த படம் ரிலீஸ்காக ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர் காரணம் இந்த படத்தில் இரண்டு வெற்றி கூட்டணி உள்ளது என்பதால் ஒன்று மற்றும் ஒன்று இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது. அதே பாடல்களும் சூப்பர் ஹிட் என்பதால் மேலும் பெரிய எதிர்பார்ப்பு அதை விட இரண்டு மெகா ஹிட் கூட்டணி என்று சொன்னேன் ஒன்று ஜெயம்ரவி மற்றும் அரவிந்த்சாமி மற்றும் ஒரு கூட்டணி ரோமியோ ஜூலியட் கூட்டணி இயக்குனர் லக்ஷ்மன் மற்றும் ஹன்சிகா இம்மான் இந்த பிரமாண்ட கூட்டணி தான் இந்த படத்தின் பல்ஸ்சை மிகவும் ஏற்றி உள்ளது ஆகவே ரசிககர்கள் எப்ப எப்ப என்று ஆவலோடு காத்திருகிறார்கள்.

Leave a Reply