இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கிய படங்களில் அதிக வசூல் செய்த படமாக நடிகர் அருண் விஜய்யின் தடம் மாறியுள்ளது. கடந்த மார்ச் 1ம் தேதி வெளியான தடம் படம் வெளியாது முதலே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் வெளியாகி 17 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 18.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும், ரசிகர்களின் ஆதரவால், வசூல் 20 கோடி ரூபாய் படம் தாண்டி மாஸ் ஹிட் பட வரிசையில் இடம் பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.