Tuesday, June 17
Shadow

கால் டாக்ஸி – திரைவிமர்சனம்


தமிழ் சினிமாவில் புதியவர்கள் கூட்டணி அதிகம் சேர்க்கிறது இது தமிழ் சினிமாவின் பலம் என்று தான் சொல்லணும் இந்த புதியவர்கள் கூட்டணி பல நேரங்களில் மிக பெரிய சாதனைகளை நிகழ்த்துகிறார்கள் அந்த வகையில் கால் டாக்ஸி பட புதியவர்கள் கூட்டணி சாதிக்க போகிறார்களா என்று பார்ப்போம்

புதுமுகம் சந்தோஷ் சரவணன் நாயகனாக நாயகியாக அஸ்வினி சந்திரசேகர் இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி. மற்றும் பலர் நடிப்பில் எம்.ஏ. ராஜதுரை ஒளிப்பதிவில் பாணர் இசையில் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கிறார் பா. பாண்டியன்

சென்னையில் ஒரு கும்பல் கால் டாக்ஸி ஓட்டுநர்களை கொலை செய்துவிட்டு காரை கடத்திவிடுகிறது. இதில் கால் டாக்ஸி ஓட்டுநரான ஹீரோவின் நண்பரும் கொலை செய்யப்பட கொலை செய்த கும்பலை ஹீரோ வழிவாங்கினாரா என்பதே கதை. ஹீரோ சந்தோஷ் சரவணன் கொடுத்த வேலையை செய்துள்ளார். கோபம், அழுகை, சந்தோஷம் எல்லாவற்றிற்கும் ஒரே விதமான முகபாவனைகளை கொடுத்துள்ளார். ஹீரோயின் அஸ்வினியும் தன்னால் முடிந்தவற்றை செய்துள்ளார். நான் கடவுள் ராஜேந்திரன், கணேஷ், மதன்பாப் இவர்களும் படத்தில் இருக்கிறார்கள். ராஜசேகரின் ஒளிப்பதிவு நன்று. பாணரின் இசையும் பின்னணி இசையும் ஓகே ரகம். கிளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது. திரைக்கதையில் கூடுதல் மெனக்கெடல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் படம். புதுமுகங்கள் என்பதால் முடிந்தவரை முயற்சி செய்துள்ளனர்