Sunday, April 11
Shadow

Birthday

சுல்தான்’ படத்தின் கதையைக் கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன் – நடிகர் கார்த்தி

சுல்தான்’ படத்தின் கதையைக் கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன் – நடிகர் கார்த்தி

Birthday, Latest News
சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது.. நடிகர் கார்த்தி பேசும்போது, இப்படத்தை பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் கடா மாதிரி ஒரு பாத்திரம். அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர். இதுபோக, 100 அடியாள்கள். என்னை பாதுகாப்பது தான் அவர்களின் வேலை. எப்போதும் என்னைச் சுற்றியே இருப்பார்கள் என்று கேட்கும்போது கற்பனைக் கதை போல தோன்றியது. அனைவரும் அதை விரும்புவோம். இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், லால் சார் கண்டிப்பாக இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார். அவர் கூறியதைப் போல லால் சார் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மயில்சாமியின் நகைச்சுவையை நான் மிமிக்ரி செய்ய முயற்சி செய்யும் அளவிற்கு ...

மாஸ்டரின் புதிய மாஸ் புதிய லுக்

#ohbaby #samantha, Birthday
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி பொங்கலுக்கு வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்தார். இதனிடையே மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக 25 நாட்களை இன்று தியேட்டரில் நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் இன்று விஜய் தனது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார். சென்னையில் அமைந்துள்ள அவரது பணையூர் அலுவலகத்திற்கு இன்று அவர் வந்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும் அவரை காண பெருமளவில் திரண்டுள்ளனர். ரசிகர்களின் ஆரவரத்துக்கு இடையே, செம ஸ்டைலிஷ் லுக்கில் கார் விஜய் செல்லும் வீடியோ வைரல் ஆகி வருகிறது....
தாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர்

தாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர்

#ohbaby #samantha, Birthday
இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின் வேலைகளை முடித்த கையோடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் சிலம்பரசன் டி.ஆர். ஒயாமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்த வேலையில் நடிகர் சிலம்பரசனின் தாய் திருமதி உஷா ராஜேந்தர் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்வித்தார். நீண்ட நாளாக நடிகர் சிலம்பரசன் டி.ஆர் விருப்பப்பட்ட காரை அன்பு பரிசாக தனது மகனுக்கு அளித்தார். தனது தாயின் பாசமிகு பரிசை பெற்றுக்கொண்ட நடிகர் சிலம்பரசன் டி.ஆர் தற்போது தனது புதிய காரில் உலா வருகிறார்...

V திரைப்படம் விமர்சனம் ( Rank 3.5/5)

Birthday, Latest News
கொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்திற்கு வந்துள்ளது, அதில் மிக முக்கியமான படம் நானியின் V, இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? பார்ப்போம். படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கொலை நடக்க அதை விசாரிக்க டிசிபி ஆதித்யா வருகிறார், அங்கு ஆதித்யா தான் எனக்கு வேண்டும் என்று கொலைக்காரன் எழுதி வைத்துள்ளான். அதை தொடர்ந்து மேலும் 4 கொலைகள் செய்யவுள்ளேன், முடிந்தால் கண்டிப்பிடி என ஆதித்யாவிற்கு சவால் விடுகிறான். அதை தொடர்ந்து கிரேம் எழுத்தாளர் நிவேதா தாமஸ் உதவியுடன் விசாரணைகளை தொடங்க ஆரம்பிக்கின்றார் ஆதித்யா, அந்த சவால் விடுவது நானி என்று நமக்கு தெரிந்தாலும், நானியை, சுதீர்(ஆதித்யா) எப்படி பிடிப்பார் என்ற ஆடுபுலி ஆட்டமே இந்த வி. நானியின் 25 வது படம் என்றாலும் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தது பலருக்கும்...
வெள்ளிகிழமை வெற்றி நாயகன் மைக் மோகன் பிறந்தநாள் இன்று

வெள்ளிகிழமை வெற்றி நாயகன் மைக் மோகன் பிறந்தநாள் இன்று

Birthday, Latest News
தமிழ் சினிமாவில் 80களில் ரஜினி, கமல் என்ற இரண்டு துருவங்களைத் தாண்டி தமிழ் மக்களின் கண்களில் பட்ட நாயகன். எண்பதுகளில், தயாரிப்பாளர்களுக்குப் பிடித்த ஹீரோ என்றால் அதில் முக்கிய இடம் பிடித்தவர் மோகன் . கால்ஷீட் கொடுத்து விடுவார். கொடுத்ததைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கமாட்டார். விட்டுக் கொடுக்கும் குணத்தை இயல்பாகக் கொண்டவர். மார்க்கெட் வேல்யூ உள்ளவர். எப்படிப்பட்ட கதாபாத்திரத்துக்கும் பொருந்தக் கூடியவர். மினிமம் பட்ஜெட்டில் படமெடுக்கலாம். மேக்ஸிமம் வசூலை அள்ளிவிடலாம். முதலுக்கு மோசம் இருக்காது. மோகன் படமென்றால் மினிமம் கியாரண்டி நிச்சயம் என்று தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் கொண்டாடுகிறார்கள். இதன் காரணமாகவே வெள்ளி விழாக்களை சில ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தார் என்று கூட சொல்லலாம். நடித்த படங்களில் தொண்ணூறு சதவிகிதத்துக்கும் மேல் மிகப்பெரிய வெற்றிப்படங்கள...
கருப்பழகி நடிகை  டி ஆர் ராஜகுமாரி பிறந்த தினமின்று.

கருப்பழகி நடிகை டி ஆர் ராஜகுமாரி பிறந்த தினமின்று.

Birthday, Latest News
தமிழ்த் திரைப் பட உலகின் முதல் கனவுக்கன்னி நேரு பெயர் பெற்ற கருப்பழகி டி ஆர் ராஜகுமாரி பிறந்த தினமின்று.தஞ்சையில் ஒரு கலை குடும்பத்தில் 1922இல் பிறந்தார். பெயர் ராஜாயி என்பது. ராஜகுமாரியின் அத்தை எஸ் பி எல் தனலெட்சுமி சினிமாவில் நடித்து வந்தார். 46இல் நாதஸ்வர சக்கரவர்த்தி டி என் ராஜரத்தினம் பிள்ளை நடித்த காளமேகம் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க தனலட்சுமி ஒப்பந்தமானார். அவர் சென்னைக்கு படப்பிடிப்புக்குச் செல்லும் போது ராஜாகுமாரியும் உடன் சென்றார். சென்னையில் தங்கியிருந்த தனலட்சுமியை ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்கு டைரக்டர் கே சுப்ரமணியம் வந்திருந்தார்.எம் கே தியாகராஜ பாகவதரையும் எம் எஸ் சுப்புலட்சுமியையும் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான், தனலட்சுமியிடம் சுப்ரமணியம் பேசிக்கொண்டிருந்த பொழுது ஒரு பெண் காபி கொண்டுவந்து கொடுத்தாள். கருப்பு நிறம். வேலைக்காரியோ என எண்ணும் உரு...
இந்திய சினிமா பிரம்மா சத்யஜித்ரே பிறந்த தினம் இன்று

இந்திய சினிமா பிரம்மா சத்யஜித்ரே பிறந்த தினம் இன்று

Birthday, Latest News
உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவே பொதுவாக அறியப்படும் சத்யஜித் ரே, கூடுதலாக, எழுத்தாளர், இசையமைப்பாளர், ஓவியர், புத்தகப் பதிப்பாளர், வரைபட வடிவமைப்பாளர், சித்திர எழுத்துக்கள் எழுதுபவர், சிற்பக்கலை வல்லுநர் என்ற பல திறமைகளுக்குச் சொந்தக்காரர். இவரது தாத்தா உபேந்திரா கிஷோர் ராய் எழுத்தாளர், பதிப்பாளர், தத்துவவாதி, வானவியல் நிபுணர் மற்றும் அன்றய சமுதாய இயக்கமான ப்ரம்மசமாஜத்தின் முக்கிய அங்கத்தினர். இவர் தந்தை சுகுமார் ராய் விமர்சகர், வங்க மொழி எழுத்தாளர், சிறுவர் இலக்கியம் படைத்தவர் என்று குடும்பமே கலைகளில் சிறந்த விளங்கிய ஒன்று. இந்தச் சூழ்நிலையில் 1921ம் ஆண்டு மே மாதம் 2ம் நாள் சுகுமார் ராய் சுமத்ரா தம்பதியினருக்கு மகனாக சத்யஜித் ரே பிறந்தார். மிகச் சிறுவயதிலேயே தந்தையை இழந்த சத்யஜித் ரே தனது தாய்மாமன் அரவணைப்பில் வளர்ந்தார். கல்கத்தா நகரில் உள்ள மாநிலக் கல்லூரியில் இளங்க...
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நடிகனகாவே பிறக்க ஆசைப்படும் சீயான் விக்ரம்

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நடிகனகாவே பிறக்க ஆசைப்படும் சீயான் விக்ரம்

Birthday, Latest News
  ஒரு விஷயம் தெரியுமா? விக்ரம் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து 34 வருடங்களைக் கடந்து புட்டார்.. அவரோட மகனே ஹீரோவா தலைகாட்ட ஆரம் பிச்ச நிலையிலும் இன்னும் இந்த விக்ரமும் கோலிவுட் ரேசில் ஓடிக் கொண்டிருக்கிறார் என்பது பலருக்கு பிரமிப்பா இருக்கும். அதிலும் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய்- அஜித், தனுஷ் - சிம்பு, விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் என்ற வரிசையில் விக்ரமுக்குப் போட்டி யார்? என்ற கேள்விக்கு இன்னிவரைக்கும் பதில் கிடைக்கலை என்பதுதான் இந்த சீயான் வெற்றியின் ரகசியம் . மதங்கள் அல்ல மனிதர்களே சிறந்தவர்கள் என கூறும் குடும்பத்தில் பிறந்தவர் தான் நடிகர் சியான் விக்ரம். ஆம் தாய் ஹிந்து, தந்தை கிறிஸ்தவம். காதலித்து இரு வீட்டு எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்தவர் தான் விக்ரமின் தந்தை. இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆசை ஆனால் சினிமாவில் நல்ல கதாபாத்திரம் இவருக்கு கிடைக்...
நகைசுவை என்ற வார்த்தையின் அடையாளம் என்றால் அதுசார்லி சாப்ளின் அவரது பிறந்த தினமின்று

நகைசுவை என்ற வார்த்தையின் அடையாளம் என்றால் அதுசார்லி சாப்ளின் அவரது பிறந்த தினமின்று

Birthday, Latest News
உலகையே சிரிக்கவைத்தவர் சார்லி சாப்ளின்! ஆனால், அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள் இவைதான் அவரின் நண்பர்களாக இருந்தது. 1889 ஆம் ஆண்டு லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து, ஓரிரு வருடங்களிலேயே பெற்றோரிடையே சண்டை வந்து டிவோர்ஸ் ஆகிவிடவே, பேசத்தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாடவேண்டிய நிர்ப்பந்தம். ஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக்கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது. காரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, சலூன்,கண்ணாடித் தொழிற்சாலை,மருத்துவமனை என எங்கெங்கோ வேலை பார்த்தவர், சில காலம் தந்தையுடன் சேர்ந்து மேடை நாடகங்களிலும் நடித்தார். ஆனால், தந்தை திடீரென இறந்துவிடவே, மீண்டும் தொய்வு!. 1910 ல் நாடகக் குழுவினருடன் அமெரிக்கா போனவருக்கு குறும்படங்களில் நல்ல பெயர் கிட...
நடிகவேள் எம் ஆர் ராதா பிறந்த நாள் பதிவு

நடிகவேள் எம் ஆர் ராதா பிறந்த நாள் பதிவு

Birthday, Latest News
திரைப்பட நடிகர்கள் எழுத்தாளர்களாக இருப்பது அபூர்வமான விஷயம். எம்.ஆர்.ராதா வெறும் நடிகராக மட்டுமில்லாமல் மிகச் சிறந்த கார் ஓட்டுனர், மெக்கானிக், எலெக்ட்ரீஷியனாக இருந்தார். அந்தக் காலத்தில் எந்த புதிய கார் மார்கெட்டுக்கு வந்தாலும் மறுநாள் அந்த கார் அவர் வீட்டு போர்டிகோவில் நிற்கும் அந்த அளவிற்கு கார் விரும்பியாக அவர் இருந்தார். அவர் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார். அவர் நாடகங்கள் நிறைய எழுதியிருக்கிறார். நிறைய புத்தகங்களும் எழுதியிருக்கிறார். எல்லாமே அரசியல் புத்தகங்கள்தான் “அண்ணாவின் அவசரம், “அண்ணாதுரையும் முன்னேற்ற நிலையும், “ஆறவுன்ஸ் ஆட்சியிலே, “தடை செய் இராமாயணத்தை, “இராமாயணமா கீமாயணமா, “இராமாயண சிறப்பு மலர் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. எம்.ஆர்.ராதா நிறைய புத்தகங்கள் எழுதியதைப்போல அவரைப் பற்றி மற்றவர்களும் அதிக புத்தகங்கள் எழுதியுள்ளனர். இராதாவும் தமிழ் நாடும் ராதாவுக்கு இழைத...
CLOSE
CLOSE