Video
விஸ்வரூபம் இன்று முதல் படத்தை பற்றிய அப்டேட் சென்சொர் கட்டுகளுடன்
கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் படம் ‘விஸ்வரூபம் 2’. ஏற்கெனவே ரிலீஸான ‘விஸ்வரூபம்’ படத்தின் தொடர்ச்சியாக இது உருவாகியுள்ளது. ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தைப் பார்த்த மத்திய தணிக்கை வாரியக்குழு உறுப்பினர்கள், 22 இடங்களில் வெட்டச் சொல்லியிருக்கின்றனர். முதல் பாகத்தில் இருந்தது போன்ற பல வன்முறைக் காட்சிகள் அப்படியே இந்தப் பாகத்திலும் இடம் பெற்றிருக்கிறது.
அதையெல்லாம் வெட்டச்சொன்ன தணிக்கை வாரியம், சர்வதேச உறவுக்கு எதிரான மற்றும் மத நம்பிக்கைகளுக்கு எதிரான காட்சிகளையும் வெட்டச் சொல்லியிருக்கின்றனர். அப்படி 22 இடங்களில் வெட்டியபிறகே ‘யு/ஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, 18 வயதுக்கு கீழுள்ளவர்கள், தங்கள் பெற்றோருடன் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்க முடியும்.
அதுமட்டுமல்ல, தொலைக்காட்ச...