Thursday, March 28
Shadow

Death Anniversary

கவிஞர் கண்ணதாசன் மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா ஆகும். இவா் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே பிறந்தார். இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த...

நடிகை கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தார். தனது சகோதரர்களின் ஆதரவால், குடும்பத்தை நடத்தி வந்தார் தாயார். 'கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி'யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள். வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். அந்த நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண் வேடத்தில் நடித்தார். பசிக்குதே! வயிறு பசிக்குதே என்ற பாட்டை மிக அருமையாகப் பாடி ரசிகர்களிடன் ஏகோபித்த பாராட்டை...

இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
குன்னக்குடி வைத்தியநாதன் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. 1935 இல் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்றக்குடியில் இராமசாமி சாத்திரி, மீனாட்சி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த வைத்தியநாதன் தனது 12 ஆவது அகவையிலிருந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார். ஆரம்பத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி பின்னர் தனிக் குழுவை அம...

நடிகர் சாண்டோ சின்னப்பா தேவர் மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
சாண்டோ சின்னப்பா தேவர் என அழைக்கப்படும் எம். எம். ஏ. சின்னப்பா தேவர் 1960- 1970 களில் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். பட அதிபராக உயர்ந்தவர் எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர். எம்.ஜி.ஆரை நடிப்பில், குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். தனது படங்களில் விலங்குகளை நடிக்க வைத்தவர். எம். ஜி. ராமச்சந்திரன் இவருடைய 17 படங்களில் கதாநாயகராக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல வெற்றிப்படங்களைத் தந்தவர்; மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா நடிப்பில் ’’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற வெற்றிப்படத்தை 1971-ல் வழங்கினார். 1970 - 1971இல் கலைமாமணி விருது பெற்றவர். ஜெமினி எஸ்.எஸ்.வாசன், ஏவி. மெய்யப்ப செட்டியார், விஜயா வாகினி நாகிரெட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், பட்சி ராஜா ஸ்டூடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுட...

நடிகர் கொத்தமங்கலம் சீனு மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
கொத்தமங்கலம் சீனு தமிழ் நாடகத், திரைப்பட நடிகரும், கருநாடக இசைப் பாடகரும் ஆவார். வி. எஸ். சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்ட கொத்தமங்கலம் சீனு, மதுரைக்கு அருகேயுள்ள வற்றாயிருப்பு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கருநாடக இசையில் பயிற்சி பெற்ற சீனு பிழைப்பைத் தேடி செட்டிநாடு பகுதியில் உள்ள கொத்தமங்கலம் வந்தார். ஆரம்பத்தில் கிராமபோன் இசைத்தட்டுகளில் இவரது பாடல்கள் வெளிவந்தன. பின்னர் பாடகரும் நடிகருமான கொத்தமங்கலம் சுப்புவுடன் இணைந்து நாடகங்களில் நடித்து வந்தார். கருநாடக இசைக் கச்சேரிகளை நடத்தி வந்ததோடு, மாணவர்களுக்கு இசைப் பயிற்சியும் கொடுத்து வந்தார். இவரது குரல் இனிமை இவரை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. இவர் நடித்த முதல் திரைப்படம் சாரங்கதாரா. இது 1935 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களில் தாசி அபரஞ்சி, பக்த சேதா, விப்ரநாராயணா போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆ...

தயாரிப்பாளர் மா. ரா. மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
மா. ரா. என பிரபலமாக அறியப்பட்ட மா. ராமச்சந்திரன் ஒரு எழுத்தாளரும், திரைப்பட கதை வசனகர்த்தாவும், இயக்குநரும், தயாரிப்பாளருமாவார். சாண்டோ சின்னப்பா தேவருக்குச் சொந்தமான தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கதை இலாகாவில் பணியாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். முன்னணி நடிகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்றோர் நடித்த படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். இவற்றுள் என் அண்ணன், பலே பாண்டியா, ராமன் தேடிய சீதை என்பன குறிப்பிடத்தக்கவை. கல்யாண மண்டபம் (1965) என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். அப்பா அம்மா (1974) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சென்னை இராயப்பேட்டையில் ஒரு பதிப்பகத்தை நடத்தி நூல்களை வெளியிட்டார். உடல்நலக் குறைவு காரணமாகத் தனது 81-ஆவது வயதில் சென்னை வேளச்சேரியில் 2014 ஆகஸ்ட் 26 செவ்வாய்க்கிழமை ...
நடிகர் எம். ஜி. சக்கரபாணி மறைந்த தின பதிவு

நடிகர் எம். ஜி. சக்கரபாணி மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
எம். ஜி. சக்கரபாணியின் இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் சக்கரபாணி தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் எம். ஜி. ஆரின் மூத்த சகோதரர் என்பதால், ஏட்டன் (மூத்த சகோதரன்) எனும் பெயராலும் குறிப்பிடப்பட்டார். இவர் நடித்த திரைப்படங்கள்: இரு சகோதரர்கள், மாயா மச்சீந்திரா, தமிழறியும் பெருமாள், மகாமாயா மந்திரி, ஸ்ரீ முருகன், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, அபிமன்யு, ராஜ முக்தி மந்திரி, பொன்முடி, திகம்பர சாமியார், மருதநாட்டு இளவரசி, இதய கீதம், வனசுந்தரி, என் தங்கை, கல்யாணி, நாம், மலைக்கள்ளன், என் மகள், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், தாய் மகளுக்கு கட்டிய தாலி, ராஜ ராஜன், , நல்ல தீர்ப்பு, ராஜா தேசிங்கு, மன்னாதி மன்னன், இதய வீணை இவர் இயக்கிய திரைப்படம்: அரசகட்டளை...

இசையமைப்பாளர் வெ. தட்சிணாமூர்த்தி மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
வெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி ஒரு கருநாடக இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 1948ல் வெளிவந்த 'நல்லதங்காள்' திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை இசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர், அருமை மகள் அபிராமி, உலகம் சிரிக்கிறது, எழுதாத கதை போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் இளையராஜா, பி.சுசீலா, யேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 4 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்த...

நடிகர் ரவிச்சந்திரன் மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
ரவிச்சந்திரன் தமிழ்த் திரைப்பட நடிகர். 1960கள்-70களில் கதாநாயகனாகவும் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். ரவிச்சந்திரனின் இயற்பெயர் ராமன். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த 1951ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகு திருச்சியில் உள்ள புனித யோசப் கல்லூரியில் படித்தார் ரவிசந்திரனின் சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம். இவரது இளமைக்காலம் மலேசியாவின் கோலாலம்பூரில் கழிந்தது. ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன். மலேசியாவில் தமிழ் நேசன் என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். கோலாலம்பூர் தமிழ் சங்கம் நடத்திய பள்ளியில் படித்தார். மலேசிய தமிழ் மாணவர்களில் முதல் மாணவராக தேர்வு பெற்ற ரவிச்சந்திரன், மருத்துவம் படிக்க விரும்பி இந்தியா வந்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார் சென்னையில் மருத்துவ படிப்பு படிக்க வந்தபோது இ...

நடிகை மஞ்சுளா விஜயகுமார் மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
மஞ்சுளா விஜயகுமார் தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயகுமாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வனிதா, பிரீத்தா, சிறீதேவி என மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். மஞ்சுளா முதன் முதலில் 1969 ஆம் ஆண்டில் சாந்தி நிலையம் திரைப்படத்தில் ஒரு துணை நடிகையாக நடித்தார். 1971 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆருடன் இணைந்து ரிக்சாக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். 1970களில் பல படங்களில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என். டி. ராமராவ், கமல்ஹாசன், விஸ்ணுவர்தன், ரஜனிகாந்த் எனப் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1980களின் இறுதியில் இருந்து துணை நடிகையாகப் பல படங்களில் நடித்தார். 2013 ஜூலை 23 இல் இவர் தனது வீட்டில் கட்டிலில் இருந்து கீழே வீழ்ந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார்...