Tuesday, December 7
Shadow

Latest News

கேரளாவில் இருமுகன் படைத்த சாதனை

கேரளாவில் இருமுகன் படைத்த சாதனை

Latest News
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியான அதிகளவில் பாசிட்டிவ்வாகவும் குறைந்த அளவில் நெகட்டிவ் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. மலையாளத்தில் நேற்று ஆறு பெரிய படங்கள் வெளியாவதாக இருந்தது. ஆனால் இரு முகன் வருகையை தொடர்ந்து, ஆறு என்றிருந்த எண்ணிக்கை இரண்டாக மாறியுள்ளது. ‘ஐ’ படத்தின் மூலம் கேரளாவில் விக்ரமுக்கு தனி மார்கெட் உருவானது இங்கே குறிப்பிடத்தக்கது....
மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த போகிறேன் – சரத்குமார்

மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த போகிறேன் – சரத்குமார்

Latest News
நடிகர் சரத்குமார் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: நான் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இருக்கிறேன்.நல்ல கதை நல்ல கதாபாத்திரங்களை தோ்வு செய்கிறேன்.வாழ்க்கையில் உயரவும் தாழ்வும் சகஜமானதுதான் .அது எல்லோருக்கும் ஏற்படும்.சைக்கிளில் இரு பெடல் மாதிரி ஒன்று மேலே வரும்போது மற்றொன்று கீழே இறங்கிதான் ஆகும். ஆனால் நான் அந்த சைக்கிளை தொடர்ந்து ஓட்டாமல் திடீர் என்று கீழே இறங்கிவிட்டேன்.அதை இப்போது உணர்கிறேன். இப்போது ஜி.வி.பிரகாசும் நானும் இணைந்து ஒரு படத்தில் நண்பர்களாக நடிக்கிறோம்.சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். இதேபோல் கன்னடத்தில் நடிகர் புனித்ராஜ்குமாரும் நானும் இணைந்து ராஜகுமாரா என்றபடத்தில் நடிக்கிறோம்.இந்த படம் முடிந்து விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இன்னும் இரண்டு படங்களில் நடிக்க கதை கேட்டுவருகிறேன்.இனி தொடர்ந்து பட...
இயக்குனர் பாலா இயக்கத்தில் அறிமுகமாகும் பாடகி பிரகதி

இயக்குனர் பாலா இயக்கத்தில் அறிமுகமாகும் பாடகி பிரகதி

Latest News
விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் என பல நகர்கள் சினிமாவிலும் வந்து புகழடைந்து வருகின்றனர். அந்த பட்டியலில் தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி புகழ் பெற்ற பாடகி பிரகதியும் தற்போது சினிமாவுக்கு வருகிறார். தாரைத்தப்பட்டை படத்தை அடுத்து சரித்திர பின்னணியில் ஒரு மல்டி ஹீரோ படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் பாலா. அந்த படத்தில் விஷால், ஆர்யா, ராணா, அதர்வா என பலர் நடிக்கயிருந்தனர். ஆனால் இப்போது அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்ட பாலா, பிராமணர்கள் சம்பந்தப்பட்ட ஒரு கதையை படமாக்கப்போகிறார். அந்த படத்தில் சாட்டை யுவன் நாயகனாக நடிக்க, நாயகியாக சூப்பர் சிங்கர் பிரகதி கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தில் பிராமண பெண்ணாக நடிக்கிறாராம் பிரகதி....
நாடக நடிகருக்கு வாய்ப்பு தந்த விஷால்

நாடக நடிகருக்கு வாய்ப்பு தந்த விஷால்

Latest News
விஷால் நடிப்பில் உருவாகி வரும் கத்தி சண்டை திரைப்படத்தில் ஆரணி அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த “வாசுதேவன் குமணன் “ என்பவர் விஷாலின் நண்பராக நடித்துள்ளார். படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிக முக்கிய பாத்திரமாகும். அடிப்படையில் நாடக நடிகரான இவர் தென்னிந்திய நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர் ஆவார். இவர் நடிகர் சங்க தேர்தலுக்கு முன்னிருந்து விஷாலின் தலைமையிலான “ பாண்டவர் அணியின் “ வெற்றிக்காக உழைத்து வந்தார். அதன் மூலம் விஷாலுடன் நட்பு ஏற்பட்டு விஷால் நடிக்கும் கத்தி சண்டை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் மட்டுமின்றி கத்தி சண்டை திரைப்படத்தில் நடிகர் சங்கத்தை சேர்ந்த ஜெரால்ட் உள்ளிட்ட சிலர் இவரோடு நடிக்கிறார்கள்.நாடகத்தில் நடித்து வந்த தனக்கு நட்பின் அடிப்படையில் முதன்முறையாக சினிமாவில் காலெடுத்து வைக்க வாய்பளித்த நடிகர் சங்க பொது செயலாளர் விஷாலுக்கு வாசுதேவன் தன்னுடைய ந...
மெகா நடிகர் பட்டியலில் இடம் பிடிக்க துடிக்கும் சிவகார்த்திகேயன்

மெகா நடிகர் பட்டியலில் இடம் பிடிக்க துடிக்கும் சிவகார்த்திகேயன்

Latest News
முயற்சி திருவினையாக்கும் என்ற வார்த்தைக்கு எடுத்துகாட்டு என்றால் அது சிவகார்த்திகேயன் என்று சொல்லவேண்டும் டிவி தொகுப்பாளராக தன் கலை உலகை வாழ்கையை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் படி படியாக தன்னை உயர்த்தியவர் .என்று சொன்னால் மிகையாகது . மெரினா படத்தில் அறிமுகமானபோது சிவகார்த்திகேயனை ஒரு தொகுப்பாளராகவேதான் சினிமா உலகமும் பார்த்தது. ஆனால், அதன்பிறகு அவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் படங்களை அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நடித்தபோது கவனிக்கப்படும் முக்கியமான நடிகராகி விட்டார். ரஜினிமுருகனுக்குப்பிறகு வியாபாரரீதியாக முன்னணி இடத்துக்கு வந்தார். அதையடுத்து அவர் நடித்த ரெமோ படம் முதன்முறையாக பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரானது. அதோடு அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக பெண் வேடத்திலும் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அப்படி அவர் நடித்துள்ள ரெமோ படத்தை 50 கோடி வரை வியாபார...
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் விழாவுக்கு ஆதரவு

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் விழாவுக்கு ஆதரவு

Latest News
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் விழாவுக்கு ஆதரவு -இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் என்பது 10 பில்லியன் டாலர் திட்டமாகும். திரைப்பட தயாரிப்பில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் இன்டிவுட் இந்திய படங்களை திரையிடுவது, சந்தைப்படுத்துவதில் வித்தியாசமான உத்திகளைக் கையாள்கிறது -இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் விழாவில் 200 பங்கேற்பாளர்கள் மற்றும் 2,000 சர்வதேச பார்வையாளற்கள் 75 நாடுகளிலிருந்து பங்கேற்கின்றனர் 8, செப்டம்பர், 2016, சென்னை: இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல், உலகின் திரைப்பட விழாக்களில் மிக முக்கியமானது. உலகின் சிறந்த திரைப்படங்களைக் கொண்டாடும் விழாவாக இது இருக்கிறது. இந்த திரைப்பட விழாவுக்கு தென்னிந்தியதிரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. சென...
சொன்ன தேதியிலும், நிர்ணயிக்கப்பட்ட  தொகையிலும் ‘தப்பு தண்டா’ படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன்

சொன்ன தேதியிலும், நிர்ணயிக்கப்பட்ட தொகையிலும் ‘தப்பு தண்டா’ படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன்

Latest News
'தப்பு தண்டா' என்ற படத்தின் பெயரை கேட்டவுடன், வெறும் குற்றமும், களவாணித்தனமும் தான் இருக்கும் என யாரும் எண்ணிவிட வேண்டாம். ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு கிரைம் கலந்த நகைச்சுவை திரில்லர் படமாக தயாராகி உள்ளது, இயக்குனர் சிகரம் பாலு மகேந்திராவின் சீடரான ஸ்ரீகண்டன் இயக்கி இருக்கும் இந்த 'தப்பு தண்டா' திரைப்படம். தயாரிப்பாளர் சத்ய மூர்த்தி தயாரித்து வரும் 'தப்பு தண்டா' படத்தின் படப்பிடிப்பானது முழுவதுமாக முடிவடைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் A வினோத், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், படத்தொகுப்பாளர் SP ராஜ சேதுபதி ஆகியோர் பணியாற்றி வரும் இந்த 'தப்பு தண்டா' படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. "ஒரு திரைப்படத்தை சொன்ன தேதியிலும், சொன்ன தொகையிலும் முடித்து கொடுப்பது தான் ஒரு சிறந்த இயக்குனருக்கு அழகு...." என்று என்னுடைய குருநாதர் ...
தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரணுக்கு ஜோடியாக நதியா

தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரணுக்கு ஜோடியாக நதியா

Latest News
பூவே பூச்சூடவா, உயிரே உனக்காக படங்கள் மூலம் தமிழில் பிரபல நாயகியானவர் நதியா. அதையடுத்து ஒரு பெரிய ரவுண்டு வந்த அவர், பிரபுவுடன் நடித்த ராஜகுமாரன் படத்திற்கு பிறகு திருமணம் செய்து கொண்டு 1994இல் நடிப்புக்கு குட்பை சொன்னவர், பின்னர் 2004இல் எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தாமிரபரணி, சண்ட உள்பட சில படங்களில் நடித்த நதியா, தற்போது தனுஷ் இயக்கும் பவர்பாண்டி படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிக்கிறார். கதைப்படி இந்த படத்தில் ராஜ்கிரணுக்கு மனைவியாக நதியா நடிக்கிறாராம். மேலும், தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா இயக்கிய முதல் படமான என்ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்த மீனாவைதான் இந்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டிருந்ததாம். ஆனால், தற்போது மீனாவை விட நதியாவே மார்க்கெட்டில் இருப்பதால் அவர் ராஜ்கிரணுக்கு ஜோடியாகி விட்டாராம் தனுஷ். அதே...
‘ரம்’ திரைப்படத்திற்காக அனிரூத் இசையமைத்திருக்கும் ‘பேயோபோபிலியா’ பாடலை பாடியிருக்கிறார் சிலம்பரசன்

‘ரம்’ திரைப்படத்திற்காக அனிரூத் இசையமைத்திருக்கும் ‘பேயோபோபிலியா’ பாடலை பாடியிருக்கிறார் சிலம்பரசன்

Latest News
ஒருபுறம், தன்னுடைய துள்ளலான இசையால் இள வட்டாரங்களை தன் பிடியில் வைத்திருக்கும் இசையமைப்பாளர் அனிரூத்.... மறுபுறம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்படும் நடிகர் - பாடகர் சிலம்பரசன். இவர்கள் இருவரும் ஒரு பாடலுக்கு இணைந்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அளவே இருக்காது...அப்படிப்பட்ட ஒரு பாடலாக உருவாகி இருப்பது தான் அனிரூத் இசையில் சிலம்பரசன் பாடியிருக்கும் 'ரம்' திரைப்படத்தின் 'பேயோபோபிலியா' பாடல். பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் உதயமாகியுள்ள இந்த 'பேயோபோபிலியா' பாடலானது, ஒரு வீட்டில் நடக்கும் அமானுஷிய நிகழ்வுகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'ஆல் இன் பிச்சர்ஸ்' விஜய ராகவேந்திரா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கி இருக்கும் 'ரம்' படத்தில் ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக், நரேன், அம்ஜத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் முன்னண...
மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பேசும் படம்தான்

மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பேசும் படம்தான்

Latest News
உலக கோப்பையை இந்தியாவிற்கு பெற்று தந்த இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பேசும் படம்தான் - M.S.Dhoni The Untold Story M.S.Dhoni The Untold Story தூசி மிகுந்த ராஞ்சியின் சாலைகளில் துவங்கி மும்பையில் உள்ள வாங்கேடே மைதானத்தில் 2011 நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோடிகணக்கான இந்தியர்களின் கனவான இந்த உலக கோப்பையை இந்தியாவிற்கு பெற்று தந்த இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பேசும் படமாகும். மகேந்திர சிங் தோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் மிக சிறந்த மனிதர் ஆவார். மகேந்திர சிங் தோனி நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அவருடைய தந்தைக்கு தோனி நன்றாக படித்து நிலையான ஒரு வேலையில் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பது கனவு. தோனி விக்கெட் கீப்பிங் செய்தால் சரியாக இருக்கும்...
CLOSE
CLOSE