Monday, December 6
Shadow

Latest News

திருட்டுபயலே-2 படத்துக்கா இயக்குனர் சுசி கணேசனை பார்த்து ஓடும் கதாநாயகிகள்

திருட்டுபயலே-2 படத்துக்கா இயக்குனர் சுசி கணேசனை பார்த்து ஓடும் கதாநாயகிகள்

Latest News
5 வருடத்துக்கு முன்பு திருட்டுபயலே  படத்தை இயக்கி சுசி கணேஷ்  இப்போது அதே தயாரிப்பு கம்பெனிக்கு இரண்டாவது முறையாகவும் திருட்டுபயலே-2படத்தை இயக்குகிறார். படத்துக்கு ஹீரோயின் அமைவதில்தான் சிக்கல். எந்த நடிகையை கேட்டாலும் முதல் திருட்டு பையனின் கதையை டிவிடியில் பார்த்து விட்டு அயய்யோ ஆள விடுங்கன்னு ஓட்டம் பிடிக்கிறாங்களாம். இரண்டாவது கதையிலும் நிறைய வில்லங்கம் இருக்காம். முதல் படத்துல 5 நிமிட வீடியோ காட்சியை காட்டியே படத்தை ஓட வைத்தவர். விட்ட இடத்தை எப்படியாவது பிடிக்கணும்னு இதுலேயும் நிறைய சமாச்சாரங்கள் வைத்திருக்கிறாராம். இதனால இதுக்கு ஒத்துக்கிற புது ஹீரோயின்களை நடிக்க வைக்கலாமான்னு யோசனையில இருக்காராம். ...
செப்.23-ம் தேதி வெளியாகிறது ‘வீர சிவாஜி’

செப்.23-ம் தேதி வெளியாகிறது ‘வீர சிவாஜி’

Latest News
கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் 'வீர சிவாஜி' திரைப்படம் செப்.23-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு,ஷாம்லி, ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'வீர சிவாஜி'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 'வீர சிவாஜி' டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. பாடல்களை ஒவ்வொரு பாடல்களாக இணையத்தில் வெளியிட்டு வருகிறது படக்குழு. அனைத்து பணிகளும் முடிந்து, விரைவில் தணிக்கை பணிகளையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. தற்போது இப்படம் செப்டம்பர் 23-ம் தேதி வெளியாகும் என ...
மேல்நாட்டு மருமகன் படத்திற்கு 33 நிமிடத்தில் பாட்டெழுதித் தந்த நா.முத்துக்குமார்

மேல்நாட்டு மருமகன் படத்திற்கு 33 நிமிடத்தில் பாட்டெழுதித் தந்த நா.முத்துக்குமார்

Latest News
உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் “ மேல் நாட்டு மருமகன் “ இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர். "செக்ஸ் வன்முறை, என்று இல்லாத குடும்பத்தினருடன் பார்க்க வேண்டிய படம். ராஜ்கமல் - ஆண்ட் ரியன் காதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்கள். எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய கலைஞனை இழந்து விட்டு நிற்கிறோம். இந்த படத்திற்காக நா.முத்துக்குமார் அவர்களிடம் ஒரு பாடல் எழுத கேட்டேன்.. அதற்கு அவர் முதலில் அமெரிக்கா போகிறேன் வந்து எழுதுகிறேன் . அவசரம்னா வேறை யாரையாவது எழுதி தரச்சொல்லி வாங்கிக்குங்க பிளீஸ் என்றார். நீங்...
நான்கு பேர் வாழ்கையை சொல்ல வரும்  “மாநகரம் ” படத்தின் ட்ரைலர்

நான்கு பேர் வாழ்கையை சொல்ல வரும் “மாநகரம் ” படத்தின் ட்ரைலர்

Latest News
"மாயா" வெற்றியை தொடர்ந்து பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படம் " மாநகரம்". வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் நான்கு பேர் சென்னையை போன்ற பெருநகரத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் , அந்நகரம் அவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதே கதையின் சுருக்கம். படத்தில் கதையின் நாயகர்களாக ஸ்ரீ , சந்தீப் கிஷன் , சார்லி மற்றும் முனிஸ் காத் “ ராமதாஸ்” ஆகியோர் நடிக்கிறார்கள் . படத்தில் நடித்துள்ள நால்வருடைய காதாபத்திரமும் மிகவும் வித்யாசமாக அமைக்கப்பட்டுள்ளது. கதையின் முக்கிய புள்ளிகளான நால்வரும் வெவ்வேறு ஊர்களில் இருந்து தங்களுடைய வேலைக்காக சென்னைக்கு வருகிறார்கள். அவர்கள் நால்வரின் எதிர்பார்ப்பை த்ரில்லர் பாணியில் அமைத்துள்ளார்கள். நான்கு பேர் கதையிலும் ஓர் உள் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும் இதோடு தொடர்புடைய ஹைபர் லிங்க் எனும் புதுமையான திரைக்கதை யுக்தியை படத்தில் கையாண்டுள்ளார்கள். படத்தில் நா...
அடுத்த படம் இன்னும் முடிவாகவில்லை ஹீரோவும் விஜய் இல்லை கபாலி இயக்குனர் ரஞ்சித்

அடுத்த படம் இன்னும் முடிவாகவில்லை ஹீரோவும் விஜய் இல்லை கபாலி இயக்குனர் ரஞ்சித்

Latest News
கபாலி படத்தை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. இதை ரஞ்சித்தும் பல பேட்டிகளில் உறுதி செய்தார். ஆனால் சூர்யா அடுத்ததாக கொம்பன் புகழ் முத்தையா படத்தில் ஹீரோவாக நடிக்கபோவதாக அறிவித்தார். இதனால் கடுப்பான ரஞ்சித், சூர்யா படத்தை இயக்க வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளாராம். இதன் பின் விஜய் படத்தை இயக்க போகிறார் இந்த படத்தை தாணு தயாரிக்கிறார் என்ற கிசுகிசுக்க பட்டது ஆனால் இதற்க்கு ரஞ்சித் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையில் விஜய் படத்தை இயக்க ரஞ்சித்துக்கு வாய்ப்பு வந்ததாகவும் விஜய்க்காக ஒரு கதையை ரஞ்சித் தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இயக்குனர் ரஞ்சித் இத்தகவலை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்....
கர்நாடகாவில் அஜித் ரசிகர்கள் உருவாக்கிய அஜித் சுவர்

கர்நாடகாவில் அஜித் ரசிகர்கள் உருவாக்கிய அஜித் சுவர்

Latest News
அஜித்என்ற தாரக மந்திரம் தமிழகம் மட்டும் இல்லாமல் உலகத்தில் தமிழர்கள் வாழும் எல்லா இடத்திலும் பரவி வருகிறது குறிப்பாக அஜித் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்தது தான். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள அஜித் ரசிகர்கள் சிவ லிங்கங்களை நிறுவியுள்ளனர், மேலும், அஜித் புகைப்படத்துடன் ஒரு சுவர் நிறுவியுள்ளனர். இவை அஜித்தின் மார்க்கெட் மற்ற மாநிலங்களிலும் வேறு லெவலில் இருப்பது தெரிகிறது...
பாகுபலி  இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி அதிகார பூர்வ அறிவிப்பு

பாகுபலி இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி அதிகார பூர்வ அறிவிப்பு

Latest News
பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இந்த இரண்டாம் பாகம் எப்ப ரிலீஸ் என்று உலகமே எதிர்பார்க்கபடுகிறது இதற்க்கு முக்கிய காரணம் கட்டப்பவை யார் கொன்றது என்று அறியவே. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அக்டோபர் 23ஆம் தேதி பிரபாஸ் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இதைதொடர்ந்து அடுத்த ஒரு மாதத்தில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாம்....
நடிகர் சங்கம் சார்பாக நெறி சென்று கமல் அவர்களுக்கு வாழ்த்து சொன்ன நிர்வாகிகள்

நடிகர் சங்கம் சார்பாக நெறி சென்று கமல் அவர்களுக்கு வாழ்த்து சொன்ன நிர்வாகிகள்

Latest News
நடிகர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி ஆகியோர் செவாலியர் விருது பெற்றுள்ள உலக நாயகன் திரு.கமல் ஹாசன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அத்தோடு அவரின் உடல் நலம் பற்றியும் விசாரித்தனர். ​​நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று செவாலியர் விருது பெற்றுள்ள உலகநாயகன் திரு.கமல் ஹாசன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் அவரிடம் உடல் நலம் பற்றியும் விசாரித்தனர். படத்தில் செவாலியே திரு.கமல் ஹாசனுடன் நடிகர் சங்க ​ பொருளாளர் கார்த்தி ,​​பொது செயலாளர் விஷால்​,​​ செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார் , நந்தா , ​ ஸ்ரீமன்​,A.L.உதயா ​​ ​மற்றும் நியமன குழு உறுப்பினர் ஹேம சந்திரன் ஆகியோர். நடிகர் சிவகுமார் பேசுகையில் ; செவாலியே என்ன உலகின் அனைத்துக் கலைஞர்களுக்கும் வழங்கும் எல்லா விருதுகளுக்கும் தகுதியான ஒரே கலைஞன்- இன்று வாழும் கலைஞன்- நீங்கள் ஒருவரே ??...
நடிகர் மொட்டை ராஜேந்திரன் பெயரில் ட்வீட்டர் ஆசாமிகள் சேட்டை. போலீஸில் வழக்குப் பதிவு!

நடிகர் மொட்டை ராஜேந்திரன் பெயரில் ட்வீட்டர் ஆசாமிகள் சேட்டை. போலீஸில் வழக்குப் பதிவு!

Latest News
வில்லன் நடிகராக அறிமுகமாகி தற்போது காமெடி நடிப்பில் பட்டையைக் கிளப்பி வருபவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன். 'தெறி' உள்ளிட்ட வெற்றிப் படங்களை அடுத்து, தற்போது 15-க்கும் மேற்பட்ட படங்களில் தீவிரமாக நடித்து வரும் ராஜேந்திரன் சமூக வலைத்தளங்கள் எதிலுமே அங்கம் வகிக்காதவர். ஆனால், அவர் பெயரில் போலியான ஆசாமிகள் ட்வீட்டர் கணக்கை (@Rajendran_offl) ஆரம்பித்து தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த சர்ச்சை வளர்ந்ததை அடுத்து இன்று (22.8.16) காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார் ராஜேந்திரன். புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் சைபர் க்ரைம் மூலமாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லி இருக்கிறார்கள். ராஜேந்திரன் பெயர் கொண்ட ட்வீட்டர் கணக்கை முடக்குவதுடன் மட்டும் அல்லாது, சம்பந்தப்பட்ட ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளிலும் காவல் துற...
எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்ஷாக்காரன்’  படத்தின் நவீன டிஜிட்டல் டிரெய்லர் மற்றும் இசையானது நேற்று தேவி பாரடைஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டது

எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் நவீன டிஜிட்டல் டிரெய்லர் மற்றும் இசையானது நேற்று தேவி பாரடைஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டது

Latest News
"யானை இருந்தாலும் ஆயிரம் பொன், யானை மறைந்தாலும் ஆயிரம் பொன்..." என்ற கருத்தை நேற்று நடைபெற்ற 'ரிக்ஷாக்காரன்' படத்தின் டிஜிட்டல் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் உறுதி செய்திருக்கிறார்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பக்தர்கள். சென்னையில் உள்ள தேவி பாரடைஸ் திரையரங்கில் விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில் தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், சத்யா மூவிஸின் நிறுவனருமான ஆர். எம். வீரப்பன், சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல தயாரிப்பாளருமான தியாகராஜன், நடிகர் மயில்சாமி, நடிகர் சின்னி ஜெயிந்த், நடிகர் வின்சென்ட் அசோகன், கோயம்பத்தூர் திரைப்பட சங்கத்தின் தலைவர் சண்முகம், 'ஆல்பர்ட்' மாரியப்பன் மற்றும் இந்த ரிக்க்ஷாக்காரன் படத்தை நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடும் 'குவாலிட்டி சினிமா' நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி. மணி, டி.கே.கிருஷ்ணகுமார் மற்றும் 'பிலிம் ...
CLOSE
CLOSE