Friday, May 27
Shadow

Latest News

ராஜேஷின் இயக்கத்தில் ஹீரோவாகும் சந்தானம்

ராஜேஷின் இயக்கத்தில் ஹீரோவாகும் சந்தானம்

Latest News
ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்துக்கு பிறகு ராஜேஷ்.எம் இயக்கும் படம் கடவுள் இருக்கான் குமாரு. முதல் இரண்டு படத்தில் கைநழுவிய வெற்றியை இதில் எப்படியாவது பிடித்தே தீருவது என்று கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, பிரகாஷ்ராஜ், ஆர்ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், சிங்கம்புலி, கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன் என ஒரு பட்டாளத்தையை களத்தில் இறக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் ஒரே ஒரு விசயம் பாக்கி இருக்கிறது. அது ராஜேஷ் படத்துக்கே உரிய ஸ்பெஷல். அவருடைய எல்லா படத்துலேயும் ஒரு முக்கியமான ஹீரோ கிளைமாக்ஸில் எண்ட்ரி கொடுத்து பிரச்சினையை முடித்து வைப்பார். சிவா மனசுல சக்தி படத்தில் ஆர்யா வந்தார், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜீவா வந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் மீண்டும் ஆர்யா வந்தார். இப்படி அவரது படங்களில்...
‘அம்மணி’ பட டிரைலரை வெளியிட்டார் எஸ் ஜே சூர்யா

‘அம்மணி’ பட டிரைலரை வெளியிட்டார் எஸ் ஜே சூர்யா

Latest News
பொதுவாகவே "உனக்கு நான்... எனக்கு நீ...." என்ற வசனத்தை காதல் காட்சிகளிலும், காதலை மையமாக கொண்டு உருவான திரைப்படங்களிலும் தான் ரசிகர்கள் கேட்டிருப்பார்கள்... ஆனால் இதே வசனத்தோடு ஆரம்பமாகும் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'அம்மணி' படத்தின் டிரைலரானது, ரசிகர்களை காதலில் இருந்து வேறொரு உணர்ச்சிகரமான பாதையில் பயணிக்க வைக்கிறது.ஐம்பது வயதுக்கு மேற்பட்ட இரண்டு பெண்மணிகளின் வாழ்க்கையை கருவாக கொண்டு உருவாகி இருக்கும் 'அம்மணி' திரைப்படத்தை 'டேக் என்டர்டைன்மெண்ட்' சார்பில் வெண் கோவிந்தா தயாரித்து இருக்கிறார். 87 நொடிகள் ஓடக்கூடிய இந்த 'அம்மணி' திரைப்படத்தின் டிரைலரை, எஸ் ஜே சூர்யா கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். "முழுக்க முழுக்க கதை களத்தின் மீது நம்பிக்கையை வைத்து வெளி வந்த படங்கள் யாவும் ரசிகர்களின் உள்ளங்களை வென்று இருக்கின்றது. 'காக்கா முட்டை...
ஹிரோஷிமா இசை நிகழ்ச்சிக்கு ‘இசைப் புயல்’ ஏ.ஆர்,.ரஹ்மான்

ஹிரோஷிமா இசை நிகழ்ச்சிக்கு ‘இசைப் புயல்’ ஏ.ஆர்,.ரஹ்மான்

Latest News
அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக 'இசைப் புயல்' ஏ.ஆர்,.ரஹ்மான் சென்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல்பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஒரு படத்தில் இரண்டு இளம் பெண்களுடன் காட்சியளிக்கும் அவர்,'எனது இசைக் குழுவுடன் ஹிரோஷிமாவை நோக்கி' என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு புகைப்படத்தில் ஹிரோஷிமா அமைதி நினைவுச் சின்னத்தின் முன்னால் நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அவரது பதிவில் அவரின் ரசிகர் ஒருவர் இட்டுள்ள பின்னூட்டத்தில் இருந்து, அமைதி மற்றும் சகோதரதத்துவத்தை வலியுறுத்தும் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக ரஹ்மான் ஹிரோஷிமா வந்திருக்கிறார் என்ற விஷயம் தெரிய வந்தது. ...
நல்ல கதைக்கு காத்திருக்கும் சமந்தா

நல்ல கதைக்கு காத்திருக்கும் சமந்தா

Latest News
இந்த வருடத்தில் ‘தெறி’, ‘24’ என மிகப்பெரிய வெற்றிப்படங்களில் நடித்தவர் சமந்தா. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமானவர் தற்போது எந்த படங்களுமே ஒப்புக்கொள்ளாமல் மவுனம் காத்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் ஒரு பக்கம் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதனாலேயே தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் சமந்தா ஒதுங்கியே இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சமந்தாவோ, கோலிவுட்டில் தனக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைக்காததாலேயே எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. எனக்கு நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால், எனக்கு ஏற்ற மாதிரியான கதை அமையவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார். சமந்தா, இப்போதைக்கு தனது கைவசம் சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் மட்டுமே நடிக்க ஒப்பந்தமாகி...
அஜித்தை பார்த்தே ஆக வேண்டும்: புருனே இளவரசியின் ஆசை

அஜித்தை பார்த்தே ஆக வேண்டும்: புருனே இளவரசியின் ஆசை

Latest News
தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித். தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகு இவருக்கான ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவே இல்லை. பல்வேறு முன்னணி நடிகைகளும் இவரோடு ஜோடி போட்டு நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான புருனே நாட்டின் இளவரசி அஜித்தை பார்க்க ஆர்வம் காட்டியுள்ளார். உலகிலேயே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரமான அரண்மனை புருனே நாட்டில்தான் உள்ளது. புருனே மன்னர்களும், இளவரசர்களும் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். கடந்த வாரம் புருனே நாட்டின் அரண்மனையில் நடைபெற்ற உலகின் வைர முதலாளிகளுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விருந்தில் பல நாட்டைச் சேர்ந்த குத்துப்பாடல்கள் இசையமைக்கப்பட்டு எல்லோரும் நடனமாடினர். அப்போது ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாடலும் இசையமைக்கப்பட்டது. அதைக்கேட்ட ...
காஷ்மோரா ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

காஷ்மோரா ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Latest News
கார்த்தி-நயன்தாரா நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் ‘காஷ்மோரா’. கார்த்தி படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இப்படம் சரித்திர கால பின்னணியில் உருவாகியிருப்பது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிலையில், வருகிற செப்டம்பர் 21-ந் தேதி இப்படத்தின் ஆடியோவை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு அமைத்திருக்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம...
‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் வியாபாரம் உச்சத்தை தொடுகிறது

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் வியாபாரம் உச்சத்தை தொடுகிறது

Latest News
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமம் தற்போது மாபெரும் தொகைக்கு விற்பனையாகி உள்ளது. ஜி.வி.பிரகாஷ் கேரியரிலேயே இதுதான் உச்சம் எனவும் சொல்லப்படுகிறது...
பாலிவுட் நடிகருடன்  சுருதிஹாசன் காதலா

பாலிவுட் நடிகருடன் சுருதிஹாசன் காதலா

Latest News
சமீபகாலமாக இணையதளங்களில் அதிகமாக பெயர் அடிபடும் நடிகைகளில் சுருதியும் முக்கிய இடத்தில உள்ளார் என்று தான் சொல்லணும் சிறிது நாளுக்கு முன் ப்ரேமம் தெலுங்கு டீசரால் பெரும் அளவுக்கு பாதிக்கப்பட்டார் இப்ப அடுத்து காதலில் விழுந்துள்ளராம் தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஒருவருடன் டேட்டிங் சென்றுள்ளார். சமீபத்தில் ரன்பிர் கபூருடன் இவர் டின்னர் டேட்டிங் சென்றதாக கூறப்படுகிறது. ஒரு விளம்பர படத்தை ஷூட்டிங் செய்தபோது இருவரும் சந்தித்துக்கொண்டதாகவும், பின்னர் இருவரும் ஒன்றாக டேட்டிங் சென்றுள்ளனர். ‘புதிய ஜோடி இணைந்துவிட்டது” என பாலிவுட் வட்டாரத்தினர் தற்போது கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டனர். பல ஆண்டுகளாக ‘கத்ரீனா கைப்’புடன் நெருக்கமாக இருந்த ரன்பீர், இந்த வருட தொடக்கத்தில் அவரை பிரிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது....
சைத்தான் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சைத்தான் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Latest News
தமிழ் சினிமாவுக்கு என்று எப்பவும் ஒரு செண்டிமெண்ட் இருக்கு எதிர்மறையான டைட்டில் வைப்பதுக்கு யோசிப்பார்கள் அனால் விஜய் அன்டனி தன படங்களுக்கு அப்படி தான் வைப்பார் அதில் வெற்றியும் கண்டவர் இதை இப்ப அவர் தொடர ஆரம்பித்துவிட்டார்.பிச்சைகாரன் சைத்தான் எமன் இப்படி அடுத்த படம் சைத்தான் பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் புதிய படம் சைத்தான். இதுவரை வக்கீல், டாக்டர், பிச்சைக்காரன் என விதவிதமான வேடங்களில் நடித்துவந்த விஜய் ஆண்டனி இப்படத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 16-ம் தேதி மாலை 6.30 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகி உள்ளது. மேலும் இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. பிரபல ஆரா சினி...
காஜலை கிண்டல் செய்யும் தெலுங்கு சினிமா!

காஜலை கிண்டல் செய்யும் தெலுங்கு சினிமா!

Latest News
கொரட்லா சிவா இயக்கத்தில் மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆர்நடிப்பில் அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் தெலுங்கு படம் ஜனதா கரேஜ். இப்படத்தில் ‘சமந்தா’தான் ஹீரோயின். எனினும் ஒரு அயிட்டம் பாடலுக்கு நடனமாடிய காஜல் அகர்வாலுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதைதொடர்ந்து இவரை பலரும் தங்களது படங்களில் இதேபோல் அயிட்டம் பாடலுக்கு நடனமாட கிண்டல் செய்தார்களாம். ஆனால் இது நட்புக்காக செய்த விஷயம் என அவர் எல்லோரிடமும் விளக்கம் அளித்து வருகிறார்....