Sunday, July 3
Shadow

Latest News

பாகுபலி  – 2 படத்தை வெளியிடும் கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என். ராஜராஜன்

பாகுபலி – 2 படத்தை வெளியிடும் கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என். ராஜராஜன்

Latest News
உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான “ பாகுபலி  -  2  வருகிற ஏப்ரல் 28 ம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியிடப் படுகிறது. இந்திய இயக்குனர்களின் நம்பிக்கை நட்சத்திரமான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள பாகுபலி – 2 படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ்,நாசர், ரம்யாகிருஷ்ணா, அனுஷ்கா, தமன்னா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.    இந்த படத்தை தமிழ் நாடு மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளவர் கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தமிழகத்தில் வெளியிடும் கே.புரொடக்ஷன்ஸ் பட நிறுவனமே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிநாடுகளிலும் வெளியிடுகிறது. அத்துடன் கே.புரொடக்ஷன்ஸ்  தயாரிக்க,  ராணா, சத்யராஜ், ரெஜினா, நாசர், கருணாஸ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில்...
தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம் தோல் கொடுக்கும் நடிகர் சங்கம்

தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம் தோல் கொடுக்கும் நடிகர் சங்கம்

Latest News
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்... சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியது நம்மளுடைய கலாச்சாரத்தை பிரதி பலிக்காத இந்த மாதிரியான மாற்று மொழி தொடர்கள் வருவது எந்த விதத்திலும் நல்லதல்ல... நானும் சின்னத்திரையில் இருந்துதான் வந்திருந்தவந்தான். அதனால் என்னுடைய ஆதரவு என்றைக்கும் சின்னத்திரைக்கு உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கமும் சின்ன திரை கலைஞர்களுக்கு என்றும் அதரவு அளிக்கும் என்றார்.. சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தில் பெப்சி தலைவர் G.சிவா பேசியது பெப்சி -யின் ஆதரவும் சின்ன திரை கலைஞர்களுக்கு இருக்கும் என்றார். சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தில் நடிகை ராதிகா பேசியது :- இது ஒரு முக்கியமான விஷயமாகும்.. ஹிந்திகாரங்க கதை எழுதுவது போல் நாமும...
ரூ.12 லட்சம் மதிப்புள்ள விக்ரம் மகளின் வைர மோதிரத்தை திரும்ப ஒப்படைத்த டாக்ஸி டிரைவர்

ரூ.12 லட்சம் மதிப்புள்ள விக்ரம் மகளின் வைர மோதிரத்தை திரும்ப ஒப்படைத்த டாக்ஸி டிரைவர்

Latest News
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், தொழில் அதிபர் சி.கே.ரங்கநாதனின் மகன் ரஞ்சித்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமண நிச்சயதார்த்தத்தின் போது, மணமகள் அக்ஷிதாவுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான வைர மோதிரம் மணமகன் தரப்பிலிருந்து அணிவிக்கப்பட்டது. நிச்சயதார்த்தத்துக்குப் பின் கடந்த 2-ந்தேதி, ஆயிரம் விளக்கு காதர்நிவாஸ் ரோட்டில் உள்ள ஐஸ்கிரீம் பார்லருக்கு அக்ஷிதா ஐஸ்கிரீம் சாப்பிடச் சென்றார். அப்போது அவரது கையில் அணிந்திருந்த வைர மோதிரம் மாயமானது. இதுபற்றி ஆயிரம் விளக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. மாயமான மோதிரம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் லட்சுமணன்(36) காணாமல் வைர மோதிரத்தை விக்ரம் குடும்பத்தாரிடம் நேரில் ஒப்படைத்திருக்கிறார். இ...
அமலபால் இயக்குனர் விஜய்யிடம் ஏன் ஜீவனாம்சம் கேட்கவில்லை தெரியுமா ?

அமலபால் இயக்குனர் விஜய்யிடம் ஏன் ஜீவனாம்சம் கேட்கவில்லை தெரியுமா ?

Latest News
அமலாபால் இயக்குனர் விஜய் திருமண நேரத்தில் தமிழ் சினிமாவே பொறாமை பட்டது என்றால் மிகையாகது,இவர்களின் பொறாமை கொஞ்ச நாட்களிலே பலித்து விட்டது இவர்களுக்குள் விவாகரத்து, அமல பால் ஏற்கனவே விஜய்யுடன் ஏகப்பட்ட பிரச்சனை செய்தாராம். இந்நிலையில் ஜீவனாம்சம் வேறு கேட்டால் விவாகரத்து வழக்கு இழுத்துக் கொண்டே போகும் என்று நினைத்து தான் அவர் எதுவும் கேட்கவில்லை என செய்தி வெளியாகியுள்ளது. காதலித்து திருமணமான இரண்டே ஆண்டுகளில் நடிகை அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் பிரிந்துவிட்டனர். விவாகரத்து கோரி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாள சூப்பர் ஸ்டார் அமலாவும், விஜய்யும் சொந்த சகோதரர் போன்று நினைக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவர் அவர்களுக்கு இடையேயான பிரச்சனையை பேசித் தீர்க்க முயற்சி செய்தாராம்...
ஒரு நல்லபாட்டு முடிந்துவிட்டதே கவிஞர் வைரமுத்து இரங்கல்

ஒரு நல்லபாட்டு முடிந்துவிட்டதே கவிஞர் வைரமுத்து இரங்கல்

Latest News
இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். “மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு” என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார். தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன். ‘உன் சொந்த ஊர் எது தம்பி’...
பிரபல பாடலாசிரியர் நா.முத்துகுமார் காலமானார்

பிரபல பாடலாசிரியர் நா.முத்துகுமார் காலமானார்

Latest News
பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இன்று காலமானார் அவருக்கு மஞ்சள் காமாலை இருந்து உள்ளது அதை கவனிக்காமல் இருந்துள்ளார். இது அவருக்கே தெரியாமல் இருந்துள்ளது . வேலையின் பளு காரணமாக அலட்சியபோக்கு தான் காரணம் என்று சொல்லபடுகிறது இவருக்கு ஒரு மகன் உள்ளார் .ஜூலை மாதம் 12ம் தேதி 1975யில் காஞ்சிபுரத்தில் பிறந்த நா. முத்துக்குமார் பல நூறு பாடல்கள் எழுதியுள்ளார் இரண்டு முறை தேசியவிருது அதுவும் தொடர்ந்து இரண்டு வருடம் என்ற பெருமை கொண்டவர் இவர் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது . சினிமா உலகில் உள்ள அனைத்து விர்துகளும் வாங்கியுள்ள கவிஞர்என்று சொல்லலாம் .இரண்டு படத்துக்கு வசனம் எழுதியுள்ளார் . பல புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார் . இவரின் சீமானின் வீர நடை திரைப்படத்தின் மூலம் திரைத் துறைக்கு அறிமுகமானவர் சீமானின் வீர நடை திரைப்படத்தின் மூலம் திரைத் துறைக்கு அறிமுகமானவர் அவரது மனைவி பெயர் தீபலக்‌ஷ்ம...
திருநாள்’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா பேசினார்.

திருநாள்’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா பேசினார்.

Latest News
நல்ல படக்குழுவுக்கு எல்லாம் தானாக அமையும்: 'திருநாள்' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா பேச்சு! நல்ல படக்குழுவுக்கு எல்லாம் தானாக அமையும் என்று 'திருநாள்' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா பேசினார். கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிப்பில், ஜீவா, நயன்தாரா நடிப்பில் பி,எஸ்.ராம்நாத் இயக்கத்தில் உருவான 'திருநாள்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு படத்தின் வெற்றிக்கான மகிழ்ச்சி சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 'திருநாள்' படத்தின் நாயகன் நடிகர் ஜீவா பேசும்போது ''இன்று 'திருநாள்' படம்வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என் வாழ்க்கையில் முக்கியமான படம். நான் 'யான்' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போது ராம்நாத் இந்தக் கதையை என்னிடம் கூறினார். இது உங்களுக்காக தைக்கப...
அஜீத் புகழை பாட்டாகவே பாடப் போகும் அப்புக்குட்டி..!

அஜீத் புகழை பாட்டாகவே பாடப் போகும் அப்புக்குட்டி..!

Latest News
அஜீத்துக்கு நன்றி செலுத்தும் வகையில் அவரது புகழை ஒரு பாட்டாகவே தான் நடிக்கும் படமொன்றில் பாடப் போகிறாராம் நடிகர் அப்புக்குட்டி. அப்புக்குட்டியை தன் கையால் தனியாக போட்டோ ஷூட் எடுத்து, அவரது சொந்தப் பெயரான சிவபாலன் என்பதையே இனி திரையில் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியவர் அஜீத். அந்த நன்றிக்கடனுக்காக அப்புக்குட்டி தற்போது நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அஜித்தின் பெருமை பற்றி பாடுவது போல ஒரு பாடல் இடம்பெறுகிறதாம். 'காகித கப்பல்' என்று பெயர்சூட்டப்பட்டுள்ள அந்த படத்தில் 'அம்மா அப்பா குடும்பத்தை பாரு...' என்ற தொடங்கும் அந்த பாடலை அப்புக்குட்டி பாடுவதுபோல் படமாக்கியிருக்கிறார்களாம். இந்தப் பாடலை விவேகா எழுதியுள்ளார். நிஜாம் இசையமைத்துள்ளார். சாண்டி நடனம் அமைத்துள்ளார். இப்படத்தை 'மறந்தேன் மெய்மறந்தேன்', 'சொல்லித் தரவா', 'அன்பா அழகா' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.சிவராமன் இயக்குகிற...
ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் “நிபுணன்” திரைப்படத்தில் நெருப்புடா ‘அருள்ராஜ்’

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் “நிபுணன்” திரைப்படத்தில் நெருப்புடா ‘அருள்ராஜ்’

Latest News
ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் தமிழ், கன்னட இருமொழி திரைப்படம் 'நிபுணன்' மற்றம் 'விஸ்மயா'. அர்ஜுனோடு இணைந்து சக அதிகாரிகளாக கைகோர்த்துள்ளனர் பிரசன்னா மற்றும் வரலட்சுமி சரத்குமார். 'லூசியா' என்ற கன்னட வெற்றிப் படத்தின் கதாநாயகி ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுனுக்கு மனைவியாக நடிக்கிறார். சுமன், சுஹாசினி மணிரத்னம் வைபவ் மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். தமிழில் 'நிபுணன்', கன்னடத்தில் 'விஸ்மயா' என்ற தலைப்புகளில் தயாராகிக்கொண்டிருக்கும் இந்த இருமொழி திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு மற்றும் தமிழகத்தில் நடைபெற்றது. அமெரிக்கா வாழ் தமிழர் அருண் வைத்யநாதன் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே அச்சமுண்டு அச்சமுண்டு, பெருச்சாழி (மலையாளம்) படங்களை இயக்கியவர். நிபுணன் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக முடிவடைந்து குரல் பதிவு, இசைக்கோர்வை மற்றும் அனைத்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் முடுக்...
கமல் நடித்த பஞ்ச தந்திரம் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும்

கமல் நடித்த பஞ்ச தந்திரம் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும்

Latest News
கே.எஸ்.ரவிகுமார் மற்றும் கமல்ஹாசன் இருவரும் மீண்டும் 'பஞ்சதந்திரம் 2' படத்தில் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். கமல்ஹாசன், ஜெயராம், ஸ்ரீமன், யூகி சேது, சிம்ரன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான படம் 'பஞ்சதந்திரம்'. தேவா இசையமைத்த இப்படத்தை கமல் மற்றும் கிரேசி மோகன் இருவரும் இணைந்து எழுதியதை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி இருந்தார். பி.எல்.தேனப்பன் தயாரித்த இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மனைவிகளுக்குத் தெரியாமல் கணவர்கள் சுற்றுலா செல்லும் போது நடக்கும் பிரச்சினைகளை முழுக்க காமெடியாக பண்ணியிருந்தார்கள். தற்போது இப்படத்தின் 2ம் பாகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். தங்களை ஏமாற்றி சுற்றுலா சென்ற கணவர்களை மனைவிகள் பழிவாங்குவது போன்று 2ம் பாகத்துக்கான கதையை எழுதி கே.எஸ்.ரவிகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் கமல். விரைவி...