
‘றெக்க’ மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன்- விஜய் சேதுபதி
கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தை ரத்தினசிவா இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று செனனியில் நடைபெற்றது.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பாடல்கள் குறுந்தகடை வெளியிட இயக்குநர் பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசுகையில், “இப்போது இங்கே எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஒரே பதற்றமாக இருக்கிறது. இந்த இடம் நான் எதிர்பார்க்க வில்லை. எல்லாமே நீங்கள் கொடுத்தது. அதற்கு உங்களுக்கு என் நன்றி, போன வெள்ளிக்கிழமை ஒரு படம் 'ஆண்டவன் கட்டளை' வெளியாகியிருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பாடல்கள் வெளியீட்டுவிழா. இன்னும் இரண்டே வாரத்தில் இன்னொரு படம் வெளியாக இருக்கிறது. எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. படங்கள் வரிசையாக வருவதற்குக் காரணம் நேரம் அப்படி அமைந்தது தானே தவிர இவ்வளவு வேகமாக படங்களில் நடிக்க முடியாது. வெளிவரும் தேதிகள் ...