Sunday, September 8
Shadow

Latest News

விஜய் 6௦ படத்தின் டைட்டில் விரைவில் அறிவிப்போம் தயாரிப்பாளர் அறிவிப்பு

விஜய் 6௦ படத்தின் டைட்டில் விரைவில் அறிவிப்போம் தயாரிப்பாளர் அறிவிப்பு

Latest News
எங்க வீட்டுப் பிள்ளை தலைப்பை விஜய் படத்துக்குச் சூட்டும் எண்ணமில்லை என்று விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த தயாரிப்பாளர் வெளியிட்ட  அறிக்கை: பி. வெங்கட் ராம் ரெட்டி வழங்கும் விஜயா ப்ரொடெக்ஷன்ஸ் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், விஜய் நடிக்கும் தளபதி 60 படத்துக்கு ‘எங்கள் வீட்டு பிள்ளை’ என்ற தலைப்பு வைக்கப்படவுள்ளது என்ற பொய்யான தகவலும் புரளியும் பரவி வருகிறது. இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தியாகும். ‘எங்கள் வீட்டு பிள்ளை’ என்னும் இத் தலைப்பைச் சூட்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இப்படத்திற்கு தலைப்பு வைப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. சிலரால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரபூர்வ தகவல் எங்களிடம் இருந்து சரியான நேரத்தில் வெளிவரும்,” என்று கூறப்...
தீபாவளிக்கு மோதும் அண்ணன் தம்பி இவர்களுக்கு போட்டியாக விஷால் ஜைக்கபோவது யார் ?

தீபாவளிக்கு மோதும் அண்ணன் தம்பி இவர்களுக்கு போட்டியாக விஷால் ஜைக்கபோவது யார் ?

Latest News
கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'காஷ்மோரா'. நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, கிராபிக்ஸ் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சிங்கம் 3'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் விநியோக உரிமையை உதயம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றி தீபாவளி வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது. சுராஜ் இயக்கத்தில் விஷால், வடிவேலு, சூரி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கத்தி சண்டை'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வரும் இப்படத்தை நந...
தல 57 பாடல் பட வேண்டும் தனுஷ் பிரபல நடிகரிடம் கெஞ்சல்

தல 57 பாடல் பட வேண்டும் தனுஷ் பிரபல நடிகரிடம் கெஞ்சல்

Latest News
அஜித் தற்போது தனது 57-வது படமாக ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் மறுபக்கம், இப்படத்தின் பாடல்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், அஜித்தக்காக ஒரு பாடல் பாடவேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என்று ஒரு பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல, தனுஷ்தான். சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தனுஷ் இவ்வாறு கூறியுள்ளார். அந்த ஆசை கூடிய விரைவில் நிறைவேறும் என்றும் தான் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். அஜித்தின் புதிய படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், அறிமுகப்படுத்தியதே தனுஷ்தான். அதனால், தனுஷின் இந்த ஆசை இந்த படத்தின் மூலமாகவே நிறைவேறிவிடும் என்று தெரிகிறது. அது நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் ...
இசையமைப்பாளர் ஜிப்ரானின் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பயணத்தை கொடி அசைத்து துவங்கி வைத்தார் நடிகர் சூர்யா

இசையமைப்பாளர் ஜிப்ரானின் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பயணத்தை கொடி அசைத்து துவங்கி வைத்தார் நடிகர் சூர்யா

Latest News
சினிமா வரலாற்றில் புதியதொரு சாதனையை படைக்க தயாராகிவிட்டார் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான். இவர் இசையமைத்திருக்கும் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் ஆறு பாடல்களை சென்னை உட்பட ஆறு நாடுகளில் சாலை வழியே பயணித்து வெளியிட இவர்கள் முடிவு செய்தது நாம் எல்லோருக்கும் தெரியும். அந்த வரலாறு படைக்கும் பயணத்தை  இன்று சென்னையில் நடிகர் சூர்யா கொடி அசைத்து ஆர்மபித்து வைத்தார். இந்த பயணத்திற்கு முன்னதாக 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் டீசரும், ஆறு பாடல்களில் முதல் பாடலான 'வாடி வாடி' என்ற பாடலையும் சென்னை சத்தியம் திரையரங்கில் படக்குழுவினர் விமர்சையாக வெளியிட்டனர். இந்த விழாவில்  'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் தயாரிப்பாளர் கே அனந்தன் (காமிக்புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட்), இயக்குனர் அப்பாஸ் அக்பர், இசையமைப்பாளர் ஜிப்ரான், முன்னணி கதாப்பாத்திரங்கள் கோகுல் ஆனந்த், அஞ்சு குரிய...
‘கவலை வேண்டாம்’ படத்தின் விநியோக உரிமையை வாங்கி இருக்கிறார் ‘அபி அண்ட் அபி’ நிறுவனத்தின்

‘கவலை வேண்டாம்’ படத்தின் விநியோக உரிமையை வாங்கி இருக்கிறார் ‘அபி அண்ட் அபி’ நிறுவனத்தின்

Latest News
'காதலுக்கு எந்தவித எல்லையும் கிடையாது' என்பதை மைய கருத்தாக கொண்டு உருவாகி இருக்கிறது, ஜீவா - காஜல் அகர்வால் நடித்து, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாக இருக்கும் 'கவலை வேண்டாம்' திரைப்படம். 'யாமிருக்க பயமே' படப்புகழ் டீகே இயக்கி, RS இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து இருக்கும் இந்த 'கவலை வேண்டாம்' படத்தில், வர்த்தக வெற்றிக்கு  தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எனவே காதல் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த 'கவலை வேண்டாம்' படத்தின் விநியோக உரிமையை பெற  பல முன்னணி விநியோகஸ்தர்கள்  போட்டியிட, இறுதியாக இந்த படத்தின் விநியோக உரிமையை "அபி அண்ட் அபி' நிறுவனத்தின் சார்பில் வாங்கியிருக்கிறார் அபினேஷ் இளங்கோவன். "தமிழ் சினிமாவில் என்றுமே காதலுக்கும் - நகைச்சுவைக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். ஒரு படத்தின் வெற்றிக்கு க...
‘Prabhu Deva’ launches the Anthem of ‘TUTI PATRIOTS’

‘Prabhu Deva’ launches the Anthem of ‘TUTI PATRIOTS’

Latest News
It is a must to say that the theme song  “Namma Payaluga makka Namma Payaluga…Katta Bommanoda Pera Payaluga…” of the team ‘TUTI PATRIOTS’  gives us the perfect flavor of Tuticorin and Nellai Districts. The team ‘TUTI PATRIOTS’ owned by ‘Albert Muralidharan’(top most bidder in TNPL – 2016) has launched their Logo, Anthem and Jersey today in ITC Grand Chola, Chennai. The Grand event has witnessed the presence of very special guest Prabhu Deva and Director Vijay. It is to be noted that the anthem “Namma Payaluga” was directed by Director Vijay, Composed by GV Prakash, Written and sung by Arunraja Kamaraja, Captured in the camera by Jeeva Shankar,Edited by Anthony and choreographed by Baba Shankar. Initially the logo and jersey of TUTI PATRIOTS that is designed with Palm leaves, Pearl, Soil...
எனக்கு சேர வேண்டிய பணத்தைக் கேட்க அருள்பதி யார்?’ – சிங்காரவேலன்

எனக்கு சேர வேண்டிய பணத்தைக் கேட்க அருள்பதி யார்?’ – சிங்காரவேலன்

Latest News
தனக்கு வர வேண்டிய பணத்தை ஏமாற்றிப் பறிக்க முயற்சி செய்வதாக பிலிம்சேம்பர் செயலாளர் அருள்பதி மீது லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன் போலீசில் புகார் செய்துள்ளார். வேந்தர் மூவீஸ் மதனுக்கும், மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலனுக்கும் லிங்கா பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பணம் தர வேண்டி உள்ளது. இந்த நிலையில், ராக்லைன் வெங்கடேஷுக்கு நண்பரான சூரப்ப பாபு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி என்ற படத்தைத் தயாரித்துள்ளார். அந்தப் படம் நாளை வெளியாகவிருந்தது. ஆனால் லிங்கா படத்தின் நஷ்ட ஈட்டுத் தொகையாக மதனுக்கும் சிங்காரவேலனுக்கும் தரவேண்டிய பணத்தை என்னிடம் தாருங்கள். இல்லாவிட்டால் படத்தை வெளியிடவிடமாட்டோம், என்று பிலிம்சேம்பர் செயலாளர்களில் ஒருவரான அருள்பதி மிரட்டுவதாக தயாரிப்பாளர் சூரப்ப பாபு நேற்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் 'எனக்கு சேர வேண்டிய பணத்தைக் கேட்க அருள்பதி ய...
புண்ணியகோடி இந்தியாவின் முதல் சமஸ்க்ருத அனிமேஷன் திரைப்படமாகும்.

புண்ணியகோடி இந்தியாவின் முதல் சமஸ்க்ருத அனிமேஷன் திரைப்படமாகும்.

Latest News
புண்ணியகோடி இந்தியாவின் முதல் சமஸ்க்ருத அனிமேஷன் திரைப்படமாகும். இது crowd  funded ( குழு முதலீடு ) மற்றும் crowd  sourced முறையில் செய்யப்படும் ஒரு புதிய முயற்சி  .  இப்படம் உண்மையை மட்டும் பேசும் ஒரு பசுவின் கதை. இப்படம் மனிதனின் பேராசையால் இயற்கைக்கு உருவாகும்  தீங்கை பொழுது போக்கு விஷயங்களோடு சேர்த்து கூறும் புதுமையான ஒரு படைப்பு . இப்படத்தின் மூல கதை  மஹாபாரத காவியத்தில் இருந்து எடுக்கப்பட்டது. கருநாடு என்னும் கிராமத்தில் உண்மையை மட்டும் உரைத்து வாழும் ஒரு பசு மாடு வாழ்ந்து வந்தது. ஒரு நாள் புண்ணியகோடி என்னும் அந்த பசு மாட்டை ஒரு புலி பிடித்துவிடுகிறது. அப்போது புண்ணியகோடி புலியிடம் - நான் என் கன்றுக்கு பால் கொடுக்க வேண்டும் ஆதலால் என்னை விடுவிக்க வேண்டும், என் கன்றுக்கு  பால் கொடுத்த பிறகு நான் திரும்பி வருகிறேன் என்று கேட்கிறது. பிறகு புண்ணிய கோடி தன் கன்றின் பசியாறிய...
கபாலி படத்தை பார்த்த பிறகு “மகிழ்ச்சி…” என்று கூறினார் மத்தேயு ஹேடன்

கபாலி படத்தை பார்த்த பிறகு “மகிழ்ச்சி…” என்று கூறினார் மத்தேயு ஹேடன்

Latest News
தற்போது தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாக மக்கள் மத்தியில் பரவி கொண்டிருக்கும் ஒரு பெயர் மத்தேயு ஹேடன். தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான  'தமிழ்நாடு பிரீமியர் லீக்' போட்டியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கும்  மத்தேயு ஹேடனுக்கும், நம் தமிழக மக்களுக்கும் எப்போதுமே ஒரு இனம் புரியாத அன்பு இருந்து வருகிறது. 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணிக்காக தன்னுடைய 'மங்கூஸ்' எனப்படும் பிரத்தியேக மட்டையால், பந்தை அரங்கத்திற்கு வெளியே இவர் பல முறை அடித்ததே அதற்கு முக்கிய காரணம்.  திருநெல்வேலியின் பிரசித்தி பெற்ற இருட்டு கடை அல்வா, தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளமாக திகழும்  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என தமிழ்நாட்டை வலம் வந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர்  மத்தேயு ஹேடன், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தை சென்னைய...
TUTI PATRIOTS TO LAUNCH TEAM ANTHEM

TUTI PATRIOTS TO LAUNCH TEAM ANTHEM

Latest News
GV Prakash Kumar to unveil the team’s anthem ahead of TN Premier League 2016   The Tuti Patriots will launch their anthem on Friday, August 12, 2016, ahead of the inaugural edition of the Tamil Nadu Premier League (TN Premier League). Actor and music director, GV Prakash Kumar is the team’s brand ambassador and will grace the ceremony. The event will take place at15:30 hrs at the Rajendra Hall IV & V, ITC Grand Chola, Chennai.   The Tuti Patriots represent the city of Thoothukudi in the TN Premier League and are owned by Thoothukudi Sports and Entertainment Pvt Ltd. The team features India internationals such as Dinesh Karthik, Lakshmipathy Balaji and Abhinav Mukund. Washington Sundar, the India under-19 player, is also a part of the Tuti Patriots.