‘ஆட்டைக்கு’ தயாராகி விட்டார்கள் ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’
லந்தக்கூட்டு...அலும்ப ஏத்து..., அலப்பறையா... ஆட்டம் போட்டு..." என்னும் 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' கிரிக்கெட் அணியின் பாடல் வரிகளை கேட்கும் பொழுதே, நம் மனங்களில் மதுரை மண் வாசனை வீசுகிறது. விரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான 'தமிழ்நாடு பிரிமீயர் லீக்' கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பல்வேறு சிறந்த அணிகளில் ஒன்றான 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' இன்று சென்னையில் தங்கள் அணியின் வீரர்களை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்திய அணியின் தலைச் சிறந்த ஆட்டக்காரரும், அதிரடி ஓப்பனிங் வீரருமான விரேந்தர் சேவாக் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த விழாவில், 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' அணியின் இயக்குனர் தயாநிதி அழகிரி, 'மதுர மைக்கல்' சிலம்பரசன், இசையமைப்பாளர் அனிரூத், அணியின் உரிமையாளர் ரபிஃக், இந்திய அணியின் முன்னாள் வீரர் எல். சிவராமகிருஷ்ணன், 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' அணிய...