Friday, March 13
Shadow

Latest News

தமிழ் சினிமாவை மிரட்ட வரும் சசிகுமாரின் “கிடாரி”

தமிழ் சினிமாவை மிரட்ட வரும் சசிகுமாரின் “கிடாரி”

Latest News
இயக்குனர் பாலா உதவி இயக்குனராக தன் கலை பயணத்தை ஆரம்பித்த சசிகுமார் பிறகு அமீர் இயக்கத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார். தன் முதல் படத்திலே இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி மா பெரும் வெற்றி கண்டவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமார் தன் முதல் படமான சுப்ரமணி புரம் படத்தை கம்பெனி புரடக்ஸ்சன் ஆரம்பித்து அதில் எட்டாவது படமாக கிடாரி படத்தை தயாரித்து இயக்குனர் பிரசாத் முருகன் மற்றும் அறிமுக இசையமைப்பாளர் டர்புக சிவா இந்த படம் மூலம் அறிமுகமாகிறார்கள். அவரின் இசையில் அற்புதமான பாடல்கள் இந்த மூலம் தந்துள்ளார். அதே போல் படத்தின் ட்ரைலர் பட்டையை கிளப்பும் அளவுக்கு உள்ளது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அது இந்த படத்தின் ட்ரைலர் இந்த படத்தின் வெற்றியை உறுதிபடுத்துகிறது அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் வேலா ராமமூர்த்தி,சுஜா வருணி வெற்றி வேல் படத்தின் நாயகி நிகிலா விமல...
குடிக்கிற ஸீன்ல உண்மையாவே குடிச்சுட்டு நடிச்ச எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு- விஜய் ஆண்டனியின் ‘நம்பியார்’ பட அனுபவம்

குடிக்கிற ஸீன்ல உண்மையாவே குடிச்சுட்டு நடிச்ச எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு- விஜய் ஆண்டனியின் ‘நம்பியார்’ பட அனுபவம்

Latest News
இசையமைப்பாளராக அறிமுகமாகி அந்தத் துறையிலேயே தனி இடம் பிடித்தவர் விஜய் ஆண்டனி. ஹீரோவாக மாறியபின் நடிப்பிலும் முத்திரை பதித்து வருகிறார். முன்னணி ஹீரோக்களுக்கு செம டஃப் ஃபைட் கொடுக்கும் விஜய் ஆண்டனியிடம் நம்பியார் படத்துக்கு இசையமைத்த அனுபவத்தைக் கேட்டோம். சந்தானத்தை பாட வைத்த அனுபவம்? ஸ்ரீகாந்த் சாரோட நட்புக்காகத் தான் அவர் பாடவே வந்தார். அவரை பாட வெச்சதே செம ஜாலி அனுபவம். சொன்னா நம்பமாட்டீங்க… முக்கால் மணி நேரத்துலயே ரெக்கார்டிங் முடிஞ்சுடுச்சு. வித்தியாசமா இருக்கட்டுமேன்னு அந்த குத்துப்பாட்டை ஸ்லோவா கம்போஸ் பண்ணினோம். அப்ப டான்ஸும் ஸ்லோவாத் தான் இருக்குமா? ஆக்சுவலி அந்த பாட்டுல ஒரு பகுதியில நானும் ஆடியிருக்கேன். அந்த பாட்டே குடிச்சுட்டு பாடற ஆடற பாட்டு. கல்யாண் மாஸ்டர் தான் டான்ஸ். குடிச்சுட்டு டான்ஸ் ஆடினா எப்படி இருக்குமோ அதை அப்படியே கொண்டு வந்துருக்கார். ...
இனி அஜித் தல இல்லை

இனி அஜித் தல இல்லை

Latest News
அஜித் எந்த வித பிரச்சினைகளுக்கும் சிக்கமாட்டார். எப்போதும் படங்களில் மட்டுமே கவனம் செலுத்துவிட்டு சென்றுவிடுவார். இந்நிலையில் ரசிகர்கள் இவரை அன்பாக தல என்று அழைத்து வருகின்றனர். ஆனால், அஜித்தே தனக்கு பட்டம் வேண்டாம் என்று நினைத்து தான் படத்தின் டைட்டில் கார்டில் கூட எந்த ஒரு பட்டத்தையும் போடுவது இல்லை. ஆனால் அஜித் ரசிகர்கள் தலை என்று தான் அழைப்பார்கள். அதுக்கு இப்ப வேட்டு அதாவது இனி தலை இல்லை கொஞ்சம் மாறுதலாக இனி இப்படி அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் வெளிநாட்டு பத்திரிக்கையில் அஜித்தை ‘இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டோலன்’ என்று அழைத்துள்ளனர், இதுக்குறித்து நாமே நம் தளத்தில் வெளியிட்டு இருந்தோம். தற்போது பல முன்னணி பத்திரிக்கைகள் இப்படியே அஜித்தை அழைக்க ரசிகர்கள் இனி தல டைட்டிலை விட்டு இதற்கு மாறுவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்....
96வயதான தன் பாட்டி வீரம்மாவுடன் தர்மதுரை படம் பார்த்த சீனு ராம சாமி

96வயதான தன் பாட்டி வீரம்மாவுடன் தர்மதுரை படம் பார்த்த சீனு ராம சாமி

Latest News
சிறுவயதில் தன்னை சினிமாவிற்கு அழைத்துச் சென்ற பாட்டியை தான் இயக்கிய படத்திற்கு அழைத்துச் சென்று சந்தோஷப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. மதுரை திருநகரை சேர்ந்த இவர், விஜய் சேதுபதி, தமன்னா நடித்த தர்மதுரை திரைப்படம் நேற்று வெளியானது. திருநகர் தேவி கலைவாணியில் 96 வயதான தனது பாட்டி வீரம்மாவுடன் நேற்று சீனு ராமசாமி அப்படத்தை பார்த்தார். பின்னர் அவர் கூறியதாவது: நான் சிறுவனாக இருந்தபோது எனது பாட்டி எனக்கு கதைகள் கூறுவதுடன் தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்று சினிமா காண்பித்தார். அவருக்கு, நான் கதைகூறி இயக்கிய சினிமாவை காண்பிக்க அழைத்து வந்தது மகிழ்ச்சியான நாள். ரசிகர்களுடன் ரசிகராக அவர் கைதட்டி ரசித்து பார்த்தது என் வாழ்நாள் பாக்கியம். படத்தை பார்த்த பாட்டி, அசிங்கம் இல்லாமல் அனைவரும் ரசிக்கும்படி எடுத்துள்ளாய் என கூறியதை கேட்டபோது எனது ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. மிகுந்த மனநிறை...
‘இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’ – அஜித்திற்கு பட்டம் கொடுத்த பிரபல வெளிநாட்டு ஊடகம்

‘இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’ – அஜித்திற்கு பட்டம் கொடுத்த பிரபல வெளிநாட்டு ஊடகம்

Latest News
அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என ஒருசில நடிகர்கள் போட்டியில் இருக்கும்போது எப்போதுமே அடைமொழியை விரும்பாத அஜித்துக்கு தற்போது வெளிநாட்டு ஊடகம் ஒன்று இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் என்ற பட்டத்தை கொடுத்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது ஆஸ்திரியாவின் உள்ள carinthia என்ற பகுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு குறித்து carinthia நகரின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின் தலைப்பே அஜித் ஒரு இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் என்பதுதான். அந்த செய்தியில் இந்திய நடிகர் அஜித்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக நடைபெற்று வருவதாகவும் இந்தியாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராகிய இவர் சில்வஸ்டருக்கு ...
ஆஸ்திரியா நாட்டின் பத்திரிகையில் வெளியான தல57 செய்தி

ஆஸ்திரியா நாட்டின் பத்திரிகையில் வெளியான தல57 செய்தி

Latest News
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் ஊடகங்களில் இந்த படத்தின் செய்திகள் தலைப்பு செய்திகளாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ‘அஜித் 57’ படக்குழு தற்போது ஆஸ்திரியா நாட்டின் Carinthia என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சுமார் 100 பேர்களுக்கும் மேல் கலந்து கொண்டதாகவும், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஹெலிகாப்டர் காட்சி ஒன்று அதிர வைக்கும் வகையில் படமாக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Carinthia பகுதியில் உள்ள ‘The mountain Hotel என்ற ஹோட்டலில் 35 அறைகள் படக்குழுவினர்களுக்காக புக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கே நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் தயாரிப்பாளர் செலவு செய்து வருவதாகவும், இவர்களுடைய உணவுத் தேவைக்கு இந்தியா...
அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகத்தை  பி.சி.ஸ்ரீராம் திற ந்து வைத்தார்.

அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகத்தை பி.சி.ஸ்ரீராம் திற ந்து வைத்தார்.

Latest News
சென்னையில் முதல் முறையாக உலக தரத்தில் மிக அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திற ந்து வைத்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கேமரா வரலாற்று ஆவண படங்களை வெளியிட்டார். உலகின் பல இடங்களில் 64க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்தியவர் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக முக்கியமானது. ஓவியராக இருந்தாலும் நவீன கேமராக்கள் தொடங்கி அரியவகை கேமராக்களை சேகரிப்பது இவரது வழக்கம் இப்படி இவரிடம் உள்ள கேமராக்களின் எண்ணிக்கை மட்டும் 4000 ஆயிரத்தை தாண்டும். தனது கலை பொக்கிஷமான அரியவகை கேமராக்களை பொதுமக்களும், கேமரா ஆர்வலர்களும் கண்டு ரசிப்பதற்காகவும், கேமரா வரலாறுகளை தெரிந்து கொள்வதற்காகவும் சென்னையில் ஒரு நிரந்தர அருங்காட்சியகத்தை அமைத்திருக்கிறார். சென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங...
சுசியின் ‘திருட்டுப்பயலாக’ பாபி சிம்ஹா,  வில்லனாக பிரசன்னா ஒப்பந்தம்

சுசியின் ‘திருட்டுப்பயலாக’ பாபி சிம்ஹா, வில்லனாக பிரசன்னா ஒப்பந்தம்

Latest News
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் ‘திருட்டுப்பயலே- 2’- இவர்களது வெற்றிக் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படைப்பு!. AGS நிறுவனத்தின் முதல் படமாக 2006ஆம் ஆண்டில் வெளிவந்து சக்கை போடு போட்டு வெற்றிவாகை சூடிய திருட்டுப்பயலின் இரண்டாம் பாகத்தை சரியாக பத்து ஆண்டுகள் கழித்து, கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்க செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. “உன் ரகசியம் என் கையில் இருக்கும் வரை உன் சிண்டு என் கையில்”- வித்தியாசமாக வில்லனே கதை நாயகனாக உலா வந்த தளத்தில், தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், ‘பைவ் ஸ்டார்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசன்னா வில்லனாகவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள்..! இரண்டு பேர் நடிப்பிலும், மிரட்டிலும் சிக்கிக் கொண்டு மிரள்கிற, மிரட்டுகிற ஒரு கதாநாயகியை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். முதல...
வியாபாரத்தில் கொடி கட்டும் சிவகார்த்திகேயனின் “ரெமோ”

வியாபாரத்தில் கொடி கட்டும் சிவகார்த்திகேயனின் “ரெமோ”

Latest News
தற்போதைய வசூல் சக்கரவர்த்தி என்றால் அது சிவகர்த்திகேயன் பதினைந்து காலமாக இருக்கும் சுள்ளான் மற்றும் முன்னணி நடிகர்கள் படத்தை ஓரம் தள்ளி வியாபாரத்தில் கொடி கட்டுபவர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் ரஜினிமுருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் வியாபாரமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 32 கோடிக்கு வியாபாரம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் கேரியரில் இதுதான் உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது....
ரஜினி நடிக்கும் ஷங்கர் இயக்கத்தில் 2.ஒ படத்தை பற்றி இதுவரை வெளிவராத தகவல்

ரஜினி நடிக்கும் ஷங்கர் இயக்கத்தில் 2.ஒ படத்தை பற்றி இதுவரை வெளிவராத தகவல்

Latest News
ஷங்கர் பிறந்தநாளான இன்று ரஜினி படம் பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இயக்குனர் ஷங்கருக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி வரும் நிலையில், தற்போது அவர் ரஜினியை வைத்து இயக்கி வரும் ‘2.ஓ’ படம் பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது, ரஜினி நடித்து வரும் ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய அறிவிப்புதான் அது. ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பி முழுவீச்சில் நடந்து வருகிறது. அமெரிக்காவுக்கு ஓய்வு எடுப்பதற்காக சென்ற ரஜினி, சமீபத்தில்தான் சென்னை திரும்பினார். இதையடுத்து, இந்த மாத இறுதியில் ‘2.ஓ’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற நவம்பர் மாதத்தில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து படத்தின் டீசரையும் வெளிய...