Latest News

நான் தெலுங்காக இருந்தாலும் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது ஏவிஎம்மெய்யப்ப செட்டியார்தான் – TMJA பொங்கல் விழாவில் கின்னஸ் புகழ் பாடகி பி.சுசிலா பெருமிதம்!

நான் தெலுங்காக இருந்தாலும் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது ஏவிஎம்மெய்யப்ப செட்டியார்தான் – TMJA பொங்கல் விழாவில் கின்னஸ் புகழ் பாடகி பி.சுசிலா பெருமிதம்!

Latest News, Top Highlights
தமிழ்திரைப்படபத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடை பெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சேரன், பாடகி பி.சுசிலா, எடிட்டர் மோகன், பிக்பாஸ் புகழ் தர்ஷன், நடிகை சர்மிளா ஆகியோர் கலந்துக் கொண்டனர். சங்கத்தின் தலைவர் கவிதா பத்திரிகையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார். இவ்விழாவில் சங்கத்தின் பொங்கல் சிறப்பு மலரை மூத்த பின்னணி பாடகி பி.சுசிலா மற்றும் எடிட்டர் மோகன் இருவரும் வெளியிட இயக்குனர் சேரன் மற்றும் பிக்பாஸ் தர்ஷன் இணைந்து பெற்றுக் கொண்டனர். தயாரிப்பாளர் எடிட்டர் மோகன் பேசும் போது, நான் கொஞ்சம் உண்மையை பேசுறவன், தப்பா நினைக்காதீங்க, நீங்க நிம்மதியா இருந்தால் தான் நன்றாக இருக்க முடியும்.. எப்போது பத்திகை ஆரம்பித்ததோ அப்போது இருந்து பார்த்து வருகிறேன். நான் எடிட்டர், தயாரிப்பாளர், நான் தயாரித்த படங்கள் வெற்றி பெற்றது. என் சின
ஸ்டண்ட் மாஸ்டருக்கான V4 விருதை ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் தாயாரிடம் கொடுத்த டைமண்ட் பாபு

ஸ்டண்ட் மாஸ்டருக்கான V4 விருதை ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் தாயாரிடம் கொடுத்த டைமண்ட் பாபு

Latest News, Top Highlights
தமிழ் திரையுலகில் சாதனை புரிந்த திரையுலக சாதனையாளர்களை நம்ம பீ ஆர் ஓ-கள் நான்கு பேர் இணைந்து‘வி4’ விருது வழங்கி பல ஆண்டுகளாக கௌரவப்படுத்துகிறார்கள்.. அந்த வகையில் நேற்று நடந்த வி 4 விழா குறித்து அந்த வி 4ல் ஒருவரான டயமண்ட் பாபு பகிர்ந்துள்ள சேதியிது : இங்கே நான் உங்களுக்கு ஒரு தகவலை தெரிவிக்க விரும்புகிறேன். பேட்ட & அசுரனின் ஸ்டண்ட் இயக்குனர் திரு பீட்டர் ஹெய்ன் -னுக்கு பெஸ்ட் ஸ்டண்ட் மாஸ்டருக்கான வி 4 விருதைப் வழங்க முடிவு செய்து வருக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.. கண்டிப்பாக வருகிறேன் என்று சொன்னவர் துரதிர்ஷ்டவசமாக அவரது தாயார் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. இன்று அவர் இந்த விஷயத்தை எனக்குத் தெரிவிக்க அழைத்து, இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார். அப்போது அவர் தனது வீட்டிக்கு போய் கோப
விஜய் சேதுபதி பிறந்த நாளின்று. இன்று அவரை பற்றி ஒரு சில வரிகள்

விஜய் சேதுபதி பிறந்த நாளின்று. இன்று அவரை பற்றி ஒரு சில வரிகள்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் மிக சிறந்த நடிகர்களில் ஒருவர்ரான விஜய் சேதுபதி (16 சனவரி 1978) தமிழ் திரைப்பட நடிகர். இராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் தொழில் வாழ்க்கையை கணக்காளராகத் தொடங்கினார். கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்புப் பணியை தேர்ந்தெடுத்தார். 2010இல் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னணி கதை மாந்தராக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தார். இவர் பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012) போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் படிப்பை விருதுநகர் மாவட்டத்திலும் சென்னையிலும் மேற்கொண்டார். பள்ளியில் தான் சராசரிக்கும் கீழான மாணவன் என்றும் விளையாட்டிலும் பாடத்திட்டம் சாரா நிகழ்வுகளிலும் தனக்கு நாட்டம் இருந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில்

பட்டாஸ் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Latest News, Review
ஒரு பெரிய வெற்றிப் படத்தில் நடித்துவிட்டால் அந்த நடிகரின் மீதான எதிர்பார்ப்பு இயல்பாகவே கூடிவிடுவது தமிழ் திரையுலகில் வழக்கமானது. அதுவும் பல வகைகளிலும் பாராட்டப்பட்ட ஒரு படத்தில், மிக பக்குவமான பாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து 'அசுர' வெற்றி பெற்ற பிறகு தனுஷின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இடையில் வந்த 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' முன்பே முடிக்கப்பட்டது என்பதை பெரும்பாலான சினிமா ரசிகர்கள் அறிந்திருந்தனர். இப்படி எதிர்பார்ப்புக்கு இடையில் வந்திருக்கும் 'பட்டாஸ்' மூலம் தனுஷ் அடுத்த கட்டத்துக்குப் போகிறாரா அல்லது 'மாரி' ஸ்டைல் பழைய ரூட்டுக்கே திரும்புகிறாரா? 'எதிர்நீச்சல்', 'காக்கிச்சட்டை', 'கொடி' என சுவாரசியமான பொழுதுபோக்குப் படங்கள் கொடுத்த துரை செந்தில்குமார் இந்த முறை, ட்ரெயிலரை பார்த்தே கணிக்கக்கூடிய எளிய கதையோடு வந்திருக்கிறார். சென்னையில் தன் வளர்ப்புத் தந்தை முனீஷ்
இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது: சபரிமலை சன்னிதானத்தில் வழங்கப்பட்டது.

இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது: சபரிமலை சன்னிதானத்தில் வழங்கப்பட்டது.

Latest News, Top Highlights
_மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. 2020-க்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இன்று சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது. இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த 2019-க்கான ஹரிவராசனம் விருது பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. இதே நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது. ஹரிவராசனம் விருது பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஏசுதாஸ், கே.எஸ்.சித்ரா உள்ளிட்டோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் விவேக்கின் பாராட்டுக்கள் மறக்க முடியாதவை – நடிகர் வெற்றி

ரஜினிகாந்த் மற்றும் விவேக்கின் பாராட்டுக்கள் மறக்க முடியாதவை – நடிகர் வெற்றி

Latest News, Top Highlights
'8 தோட்டாக்கள்' மூலம் நாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டைப் பெற்று, 'ஜீவி' படத்தில் சிறந்த நடிகன் என்ற அந்தஸ்த்தைப் பெற்றவர் நடிகர் வெற்றி. தற்போது 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் விவரங்களை பகிர்ந்து கொண்டதாவது :- 'கேர் ஆஃப் காதல்', இப்படம் 'கேர் ஆப் கச்சிராப்பலம்' என்ற தெலுங்கு படத்தின் மறு உருவாக்கம். இப்படத்தை ஹேமம் பார் இயக்குகிறார். காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 'இறுதிச்சுற்று' படத்தில் நாயகிக்கு அக்காவாக நடித்த மும்தாஜ் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் 'தாடி'. பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த படத்திற்கு பிறகு 'வனம்' படம் வெளியாகும். 'தடம்' படத்தின் நாயகியாக நடித்த ஸ்ம்ருதி இந்த படத்திலும் நாயகியாக நடிக்கிறார். கலை கல்லூரியில் சிற்ப கலை பயிலும் மாணவனாக நடிக்கிறேன். பூர்வ ஜென்மத்தை மையப்படுத்தி உருவா
ரியோ ராஜ் நடிப்பில் உருவாகும் டீம் படத்தின் டப்பிங் ஆரம்பம்

ரியோ ராஜ் நடிப்பில் உருவாகும் டீம் படத்தின் டப்பிங் ஆரம்பம்

Latest News, Top Highlights
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவா நடிச்ச, ரியோராஜ். அடுத்து, பத்ரி வெங்கடேஷ் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். பத்ரி வெங்கடேஷ் டைரக்டு செய்து இருக்கிறார். படத்துக்கு, ‘பிளான் பண்ணி பண்ணணும்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. படத்தை பற்றி டைரக்டர் பத்ரி வெங்கடேஷ் ‘“படத்தின் கதைப்படி, ரியோராஜ் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறார். ரம்யா நம்பீசன், அதே நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கிறார். இருவரும் சென்னையில் இருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார்கள்., அவர்களின் பயணம் ஏன், எதற்காக என்பது படத்தின் ‘சஸ்பென்ஸ்’ இது, ஒரு முழு நீள நகைச்சுவை படம். எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, பாலசரவணன், மாரிமுத்து, ரோபோ சங்கர், முனீஷ்காந்த், ‘ஆடுகளம்’ நரேன், ரேகா, விஜி சந்திரசேகர் ஆகியோர் முக்கிய
மோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு ‘பிக் பிரதர்’ மூலம் நிறைவேறியது – நடிகை மிர்னா

மோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு ‘பிக் பிரதர்’ மூலம் நிறைவேறியது – நடிகை மிர்னா

Latest News, Top Highlights
இயக்குநர் சித்திக் மோகன்லாலை நாயகனாக வைத்து இயக்கும் படம் ‘பிக் பிரதர்’. அப்படத்தின் நாயகியாக மிர்னா நடிக்கிறார். இயக்குநர் சித்திக் பற்றியும், மோகன்லாலுடன் நடித்த அனுபவங்களைப் பற்றி மிர்னா பகிர்ந்து கொண்டதாவது:- எனது தாய்மொழி மலையாளமாக இருந்தாலும், தமிழ் மொழியிலும் சரளமாகப் பேசுவேன். அதற்கு காரணம், நான் கோயமுத்தூரில் தான் எனது கல்லூரி படிப்பை முடித்தேன். எனது நெருங்கிய குடும்ப நண்பர் ஜோதி மேனன் இயக்குநர் சித்திக்கின் நண்பர் ஆவார். அவர் ஒருமுறை இயக்குநர் சித்திக்கை எதிர்பாராமல் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அடுத்த நாளே மோகன்லால் ஜோடியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்குமென்று நினைக்கவில்லை. ஏனென்றால், அனைத்து கலைஞர்களின் தேர்வும் முடிந்திருந்தது. இது எனக்கு எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்புதான். ஜுன் மாதம் தொடங்கி டிசம்பர் வரை ஏறத்தாழ 145 நாட்கள் படிப்பிடிப்பு நடித்தியிருக்க
நயன்தாரா – விக்னேஷ்சிவனின்  காதல் கதை படமாகிறது !

நயன்தாரா – விக்னேஷ்சிவனின் காதல் கதை படமாகிறது !

Latest News, Top Highlights
THREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “ இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் கோபி கூறியதாவது... சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன் அடிப்படையிலே " நானும் சிங்கிள் தான் " என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம். தமிழ்சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி.பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போது வரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்க