பிரின்ஸ் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படம் இன்று வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் உக்ரைன் நடிகை மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தன் வாரிசுகள் காதல் திருமணம்தான் செய்துகொள்ள வேண்டும் என்று சத்யராஜ் எண்ணுகிறார். ஆனால் தன் வாரிசுகளின் காதலை எதிர்கிறார். அது எதனால் என்பதை நகைச்சுவை பின்னணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அனுதீப்.
பாண்டிச்சேரி அருகில் இருக்கும் பிரிட்டிஷ் கிராமத்தில் வசிக்கும் நாயகிக்கும், தேவனக்கோட்டையை சேர்ந்த இளைஞனுக்கும் இடையே காதல் மலர்கிறது. அதற்கு என்ன தடை வந்தது? காதலில் வெற்றி அடைந்தார்களா என்ற இடத்தில் படம் முடிகிறது.
சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான பார்முலாவான க...