நீல நிற சூரியன் – திரைவிமர்சனம்! (Rank 3.5/5)
தமிழ் சினிமாவில் திருநங்கைகள் பற்றி படங்கள் அதிகமாக வந்ததில்லை. இந்த நிலையில் முதல் முதலாக தமிழில் திருநங்கை ஒருவர் இயக்கி நடித்துள்ள படம் நீல நிற சூரியன். இப்படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். அரவிந்த் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர். இவர் தான் ஒரு பெண் என்பதை உணர்கிறார். இதுகுறித்து தனது பெற்றோர் இடமும் வேலை செய்யும் பள்ளியிலும் சொல்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதை.
தமிழில் முதல் திருநங்கை இயக்குனர் சம்யுக்தா விஜயன். இப்படத்தை எழுதி இயக்கியதுடன் இணைந்து தயாரித்து நடித்தும் உள்ளார். முதல் படம் என்றாலும் சிறப்பாக இயக்கியும் நடித்தும் உள்ளார். முதல் படம் என்று தெரியவே இல்லை. தான் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். சமூகத்தில் திருநங்கைகளுக்கு நடக்கும் அநீதி, அவர்களுக்கு கழிப்பறை வசதி இல்லாதது, சமூகம் அவர்களை பார்க்கும் பார்வை அ...