Saturday, March 25
Shadow

Shooting Spot News & Gallerys

கெட்டப்பை மாற்றினாலும் காமெடியை விடாத கவுண்டமணி

கெட்டப்பை மாற்றினாலும் காமெடியை விடாத கவுண்டமணி

Shooting Spot News & Gallerys
பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் ரஜினியின் நண்பராக நடித்தவர் கவுண்டமணி. அந்த வகையில், கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார் கவுண்டமணி. காமெடி மட்டுமின்றி, குணசித்ர வேடங்களிலும் கலக்கிய அவர், 49ஓ படத்தை அடுத்து எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். முன்னதாக, சாந் தனு நாயகனாக நடித்துள்ள வாய்மை என்ற படத்தில் ஒரு முக்கியமான கேரக்ட ரில் நடித்துள்ளார் கவுண்டமணி. இந்த படத்தைப் பொறுத்தவரை முதன்முறையாக கோட்சூட் அணிந்த ஒரு டீசன்டான ரோலில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. சில இடங்களில் எமோசனலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தபோதும், வெடிச்சிரிப்பு காமெடி களையும் ஆங்காங்கே தெளித்து விட்டிருக்கிறாராம் கவுண்டமணி. ஆக, கோட்சூட் அணிந்து அவரது கெட்டப்பை டோட்டலாக மாற்றி விட்டபோதும், தன்னிடம் ரசிகர்களை காமெடியைத்தான் எதிர்பார்ப்பார்கள் என்ப...
சபாஷ் நாயுடு படபிடிப்புக்கு தயாரான கமல்

சபாஷ் நாயுடு படபிடிப்புக்கு தயாரான கமல்

Latest News, Shooting Spot News & Gallerys
தூங்காவனம் படத்தை அடுத்து கமல் நடித்து வரும் படம் சபாஷ் நாயுடு. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பத்து வேடங்களில் கமல் நடித்த தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற பல்ராம் நாயுடு என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த படத்திற்கான கதை உருவாகியிருக்கிறது. இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வந்தது. கமலை வைத்து ஏற்கனவே சாணக்யா என்ற படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ்குமார் இந்த படத்தை முதலில் இயக்கி வந்தார். பின்னர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கமலே படத்தை இயக்கி நடித்து வந்தார். அமெரிக்காவில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை வந்த பிறகு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகிக்கொண்டிருந்த நேரம் தனது வீட்டில் தவறி விழுந்த கமலின் காலில் பலத்த அடிபட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். அதையடுத்து வீடு திரும்பிய அவர் தற்போது நடந்து செல்லும் அளவுக்கு குணமாகி விட்டார...
எனக்கும் கெளதமிக்கும் எந்த பிரச்சனை இல்லை சுருதி ஹாசன்

எனக்கும் கெளதமிக்கும் எந்த பிரச்சனை இல்லை சுருதி ஹாசன்

Shooting Spot News & Gallerys
GGஉடை அலங்காரம் பற்றிய தன்னுடைய யோசனைகளை கௌதமிக்கு வழங்கி இருக்கிறார் ஸ்ருதி ஹாசன்…” என்கிறார் ஸ்ருதி ஹாசனின் நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் திரைப்படம் “சபாஷ் நாயுடு”. இந்த படத்தில் அவருடைய மகள் ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்திலும், கௌதமி தடிமல்லா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக “சபாஷ் நாயுடு” படத்தில் கௌதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவது சுருதி ஹாசனுக்கு பிடிக்கவில்லை…என்ற ஆதாரமற்ற செய்திகளும், வதந்திகளும் பரவி வருகிறது. ஆனால் இவை அனைத்தும் வெறும் கட்டுக்கதைகள் தான் என்று சொல்லி இருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இந்த வதந்திகளை பற்றி ஸ்ருதி ஹாசனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது; “தனெக்கென்று ஒரு தனி ஸ்டைல்…தனக்கென்று ஒரு தனி டிசைன் என தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையே தான் விரும்புகிறார...
காதல்தோல்வியடைந்த நாயகனின்கதை தான் செஞ்சிட்டாளே என் காதல

காதல்தோல்வியடைந்த நாயகனின்கதை தான் செஞ்சிட்டாளே என் காதல

Shooting Spot News & Gallerys
தலைப்பு சற்று வித்தியாசமாக இருந்தாலும் பெண்களை அவதூறு செய்கிற கதையல்ல . காதல்தோல்வியடைந்த கதாநாயகன் தன் வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சனைகளும் இறுதியில் அவனுக்குக் கிடைக்கின்ற தீர்வும் சமீப காலங்களில் காதல் மலினப்பட்டுவருகின்றதா என்பதற்கான விடையும் படத்தின் கதைக்கருவாகும். காதல் குறித்த மற்ற தமிழ்த்திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதையம்சம் கொண்டது. இத்திரைப்படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான எழில் ஐம்பதிற்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்தும் சில திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர்; மேலும் இவரது திரைக்கதை தமிழ் சினிமாவில் கட்டுடைப்புகளை நிகழ்த்தக்கூடியதாக அமைந்திருக்கும். மேலும் தயாரிப்பாளர் திரு. பாலசுப்ரமணியன் அவர்களின் பெருமுயற்சியும் பங்களிப்பும் இத்திரைப்படத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது கதாநாயகியாக விஜய் டிவி ஆஃபிஸ் சீரியலில் நடித்த மதுமிளாவும் அவரது...
சூர்யா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட பசுமை  ஆவடி திட்ட தொடக்க விழா

சூர்யா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட பசுமை ஆவடி திட்ட தொடக்க விழா

Shooting Spot News & Gallerys
இயற்கை என்பது நம் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து அல்ல. நாம் அடுத்த தலைமுறையிடம் வாங்கியுள்ள கடன்” என்று சொல்லுவார்கள். நம்முடைய வருங்கால சந்ததியிடம் பெற்றுள்ள கடனை, ‘இயற்கையைப் போற்றி பாதுகாப்பாக சுற்றுச்சுழலுடன்’ அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கும் முயற்சியே "யாதும் ஊரே” அமைப்பு. நம் அடுத்த தலைமுறையினருக்கு வசதியான வாழ்க்கையைப் பரிசளிக்க வாழ்க்கை முழுவதும் ஓடுகிற நாம், அவர்கள் நல்ல காற்றை சுவாசிக்கவும், நல்ல நீரை பருகவும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலில் வாழவும் தேவையான அக்கறையை எடுப்பதில்லை. பசுமை சூழ்ந்த ஆரோக்கியமான சுற்றுச்சூழலே நம் பிள்ளைகளுக்கு நாம் அளிக்கும் சிறந்த பரிசு. இதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் ‘யாதும் ஊரே' செயல்படுகிறது. பசுமை ஆவடி : சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுக்கும் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைத்து முழுமையான சுற்றுச்சூழல் உருவாக என்னென்ன செய்ய வேண்டும் என்ப...
காஷ்மோரா படத்தில் மூன்று கெட்டப்யில் நடிக்கும் கார்த்தி

காஷ்மோரா படத்தில் மூன்று கெட்டப்யில் நடிக்கும் கார்த்தி

Shooting Spot News & Gallerys
கார்த்தி இப்போது தனது உறவினர் நிறுவனமான ட்ரீம்வாரியர்ஸ் தயாரிப்பில் காஷ்மோரா படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் கார்த்தி படங்களிலேயே மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. கார்த்திக்கு ஜோடியாக நயன் தாராவும், ஸ்ரீ திவ்யா நடிக்கிறார்கள். பில்லி சூனிய கதை என சொல்லப்படும் காஷ்மோராவில் சுமார் கிராபிக்ஸில் மிரட்டியிருக்கிறார்களாம். மன்னர், மொட்டை கேரக்டர், அடியாள் என பல கெட்டப்களில் வருகிறாராம் கார்த்தி. கார்த்தியின் கெட்டப்கள் ரகசியங்களாக பாதுகாக்கப்படுகின்றன. காஷ்மோராவை முடித்துக்கொடுத்துவிட்டு மணிரத்னம் படத்தில் பிஸியான கார்த்தி, அடுத்து நடிக்கவிருப்பது சதுரங்கவேட்டை வினோத் இயக்கத்தில். இந்த படத்தில் மீண்டும் போலீஸ் யூனிஃபார்ம் மாட்டுகிறார். சதுரங்கவேட்டை பாணியில் மோசடிகள் பற்றிய படம் தானாம் இது. மணிரத்னம் படத்துக்காக மிலிட்டரி ஹேர்கட்டில் இருக்கும் கார்த்தி அதன் காரணமாகவே வெளியில்...
சென்னையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கேமரா மியூசியம்..!

சென்னையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கேமரா மியூசியம்..!

Shooting Spot News & Gallerys
பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் கைவண்ணத்தில் சென்னையில் அமைய உள்ள நிரந்தர கேமரா மியூசியத்தின் பிரமாண்டம் பிரமிப்பை தருகிறது. சென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங்டம் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகத்தில் உலகின் அதி நீளமான மம்மோத் கேமரா முதல் 11 கிராம் எடையளவே கொண்ட மிகச்சிறிய கேமராக்களும், முதல் 3டி கேமரா, பிஸ்டல் கேமரா, வாக்கிங் ஸ்டிக் கேமரா என பல அரியவகை ஆயிரக்கணக்கான கேமராக்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற உள்ளது. இது தவிர அரியவகை புகைப்படங்கள், புகைப்பட கலை தொடர்பான சுவாரசிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் இருக்கும். புகைப்பட கலையையும் அதன் வரலாற்றையும் தெரிந்துக் கொள்ளும் விதமாக 3 ஆவண படங்களும் திரையிடப்பட உள்ளது. புறா உடலில் கேமராவை பொருத்தி உலகப்போரின் போது பயன் படுத்தியது பற்றியும், சர்வதேச அளவில் துப்பறிவாளர்களால் பயன்படுத்தப்பட்ட மினாக்ஸ் கேமரா பற்றிய படம...
சிகிச்சைக்கு பணம் இல்லாததால் உயிரிழந்த நா.முத்துக்குமார்

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் உயிரிழந்த நா.முத்துக்குமார்

Shooting Spot News & Gallerys
சிகிச்சைக்கு பணம் இல்லாததால் நா.முத்துக்குமார் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில மாதங்களாகவே பாதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார், அந்த வேதனையிலும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு இடைவிடாது பணிகளை செய்து முடித்துக் கொடுத்து வந்துள்ளார். ஆனால், அவருடைய நேர்மை அவருக்கு கைகொடுத்ததா? என்றால் அது இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இவர் இதுவரை தமிழ் சினிமாவில் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பல பாடல்களுக்கான சம்பளப் பணத்தை காசோலைகளாகத்தான் வாங்கியுள்ளார். அப்படி வாங்கியுள்ள காசோலைகளில் பெரும்பாலானவை இவரது வங்கி கணக்கில் பணத்தை கொண்டுவந்து சேர்க்கவில்லை. மாறாக, அவரது வீட்டு அலுமாரியில் காகிதங்களா...
A. குரு சேகரா இயக்கும்   புது முகங்கள் நடிக்கும்  “வளையல்”

A. குரு சேகரா இயக்கும் புது முகங்கள் நடிக்கும் “வளையல்”

Shooting Spot News & Gallerys
கதையில் கதாநாயகி கேட்கும் திறன் படைத்த ஊமை. கதாநாயகன் கதாநாயகி மீது காதல் வயப்படும் போதெல்லாம் தான் ஊமை என்னும் உண்மையை சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் கதாநாயகனுக்கு தெரியப்படுத்தாமல் மறைக்கிறாள். ஆனால் ஒரு நாள் கதாநாயகனுக்கு உண்மை தெரியவருகிறது. அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான சம்பங்களே வளையல் படத்தின் கதை. இப்படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவர் A. குரு சேகரா. இப்படத்தை அனைவரும் ரசிக்கும் படி மிகவும் ஜனரஞ்சகமான முறையில் எடுத்திருக்கிறார். இவர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. BR மூவிமேக்கர்ஸ் சார்பாக B.R.காளியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். கதாநாயகனாக சக்தி சிவன், கதாநாயகியாக பாவ்யா ஸ்ரீ, முக்கிய கதாபாத்திரத்தில் சத்யஅஜித், மனோஜ் கே பாரதி உட்பட பலர் நடித்துள்ளனர்....
விஜய் அஜித படத்தின் வியாபாரத்தை மிஞ்சும்  சிவகார்த்திகேயனின்ரெமோ

விஜய் அஜித படத்தின் வியாபாரத்தை மிஞ்சும் சிவகார்த்திகேயனின்ரெமோ

Shooting Spot News & Gallerys
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வர்த்தகரீதியாகஅதிகவருமானம் ஈட்டு தரும் நாயகன் பட்டியலில் இடம் பெற்று உள்ளவர் .அதற்கு சாட்சி ரஜினி முருகன்விட பல மடங்கு பொருள் செலவு மட்டும் இல்லமல் புது விதமான கதையம்சத்துடன் வித்தியாசமான தொட்ட்ரங்களுடன் வருகிறார் சிவகார்த்திகேயன் இதை நாம் அறிந்ததே இந்த படத்தின் வியாபாரம் பற்றி பாப்போம் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸ் உரிமைகள் போட்டி போட்டு வியாபாரம் ஆகிவருகின்றது. இந்த படத்தின் தயாரிப்பாளர் அவ்வப்போது இந்த படத்தின் ரிலீஸ் உரிமைகளை பெற்ற விநியோகிஸ்தர்களின் பெயர்களை அதிகாரபூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் உரிமையை பெறுபவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது ...