
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஜூலி எப்போ வருவார் என்று அழுது புலம்பும் ஜூலி குடும்பம்
பிக்பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் இன்றுவரை... பல கோணங்களில் அந்நிகழ்ச்சியைப் பற்றி ரசிகர்கள் போடும் மீம்ஸ், போஸ்டுகளால் சமூக வலைதளம் அதகளப்படுகிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை அநேகம்பேரால் உச்சரிக்கப்பட்ட ஒரே வார்த்தை ஜூலி. பிக்பாஸ் ஆரம்பித்த ஒரு சில நாட்களில் முதல் ஆளாக, உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நடிகர் ஸ்ரீ வெளியேற்றப்பட்டார். அடுத்து, வாக்கெடுப்பின் அடிப்படையில் அனுயா வெளியேறினார். பரணி மற்றும் கஞ்சா கருப்பு இடையே வாக்குவாதம் வந்துபோயின.
மூன்றாவது ஆளாக கஞ்சா கருப்பு, வாக்கெடுப்பின்படி வெளியேற்றப்பட்டார். 'பிக் பாஸ்' வீட்டுச் சுவர் ஏறித் தப்பிக்க முயன்றார் பரணி. நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாக, நான்காவதாக அவர் உடனடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பரணியின் வெளியேற்றம் யாரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. அடுத்த எலிமினேஷனுக்கு ஓவியா, ஆர்த்தி, ஜூலி, வ...