Thursday, October 22
Shadow

Top Highlights

`விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஜோடியாகும் நடிகை யார்   தெரியுமா

`விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா

Top Highlights
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல், இளமை தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண் அஜித் உடல் எடையையும் குறைத்து உடற்கட்டுடன் இருக்கிறாராம். கிராமத்து பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க, அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அனுஷ்கா ஏற்கனவே அஜித்தின் `என்னை அறிந்தால்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரியில் தொடங்கும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு சென்னை உட்பட தமிழிகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. அதேபோல் விஜய் 62 படமும், சூர்யா - செல்வராகவன் படமும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறி...
விஷால்லுக்கு முதன் முறையாக இதை செய்த தனுஷ் ஏன்?

விஷால்லுக்கு முதன் முறையாக இதை செய்த தனுஷ் ஏன்?

Latest News, Top Highlights
நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.இவர் நடிப்பது மட்டுமின்றி இயக்கம், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் இவையனைத்தும் நாம் அனைவரும் அறிந்ததே. நடிகர் தனுஷ் இவர் படங்களில் மட்டுமல்லாது சக நடிகர்களின் படங்களிலும் தனது குரலில் பாடி வருகிறார்.தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் சண்டகோழி-2 . இந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு பாடல் ஒன்று பாடியுள்ளார்....
இளைய தளபதி விஐய் தான் சரி அமீர் பரபரப்பு பேட்டி?

இளைய தளபதி விஐய் தான் சரி அமீர் பரபரப்பு பேட்டி?

Latest News, Top Highlights
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சில நாட்களாக தனது டிவிட்டர் பக்கத்தில் அரசியல்வாதிகளை விமர்சனம் செய்தார்.பிறகு இப்போது உள்ள அரசியல் சூழலால் நான் அரசியலுக்கு வருகிறேன். கொஞ்சம் நாட்களுக்கு பிறகு தனது கட்சியின் பெயரை அறிவிப்பேன் என்று கூறினார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் NEWS 7 தொலைக்காட்சியில் நடத்திய கருத்துக்கணிப்பில் தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரையும் பின்னுக்குத் தள்ளி உலகநாயகன் கமல்ஹாசன் வெற்றி பெற்றார். இந்நிலையில் இயக்குனர் அமிர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தற்போதைய உள்ள அரசியல் சூழ்நிலையில் இளைய தளபதி விஜய் அரசியலுக்கு வந்தால் தான் நல்லா இருக்கும் என்று கூறினார்....
விஐய்க்கு சம்பந்த பட்டவர்கள் பாஜகாவில்! இதென்ன புது கதை?

விஐய்க்கு சம்பந்த பட்டவர்கள் பாஜகாவில்! இதென்ன புது கதை?

Latest News, Top Highlights
சில வருடங்களாக இளைய தளபதி விஜய் படங்கள் வெளியானால் நல்ல வரவேற்பையும் அதிக அளவில் சர்ச்சையும் உண்டாகிறது.சமீபத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளை உருவாக்கியது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தளபதி விஜய் ரசிகர்கள் 60 பேர் பாஜக கட்சியில் இணைந்துள்ளனர் என்று செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பாஜகவில் இணைந்த ரசிகர்கள் ஏற்கனவே பாஜகவில் உள்ளவர்கள் என்று ஒரு புகைப்படம் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
அண்ணாதுரை மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் ’சம்பிகா’..

அண்ணாதுரை மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் ’சம்பிகா’..

Latest News, Top Highlights
வருகின்ற 30 ஆம் தேதி வெளி வர இருக்கும் "அண்ணா துரை" தலைப்பில் துவங்கி , எல்லா அம்சங்களும் மக்களின் எதிர்பார்ப்பை கூட்டும் படமாகவே இருந்து வருகிறது. இந்தப் படத்தில் இடம் பெறும் ஜி எஸ் டி பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலாக இருக்கிறது. அந்த பாடலின் காணொளியை கண்டவர்கள் கதாநாயகி டயானா சம்பிகாவின் அழகை பற்றியும் திறமையை பற்றியும் நிறையவே பேசி வருகின்றனர்.சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் (லயோலா)படித்து வரும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது குறிப்பிட தக்கது. தொடர்ச்சியாக கதாநாயகர்களை வழங்கி கொண்டு இருக்கும் அந்த கல்லூரியில் இருந்து வரும் முதல் கதாநாயகி டயானா என்பதுக் குறிப்பிடத்தக்கது. ஒரு விளம்பர மாடலாக பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து வந்த இவர் "அண்ணாதுரை" படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பாத்திமா விஜய் ஆண்டனியை சந்திக்க நேர்ந்தது. பிறகு ஆடிஷன் மூலம் க...
“சின்ன படங்களின் வெற்றியை 4 மணி நேரத்தில் தீர்மானித்து விடுகிறார்கள்” ; ‘கோரிப்பாளையம்’  ’ அரீஷ் குமார் வேதனை..!

“சின்ன படங்களின் வெற்றியை 4 மணி நேரத்தில் தீர்மானித்து விடுகிறார்கள்” ; ‘கோரிப்பாளையம்’ ’ அரீஷ் குமார் வேதனை..!

Latest News, Top Highlights
புகைப்படம், மாத்தி யோசி, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து, இளம் ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் அரீஷ் குமார். குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பது போல, ராஜ்கிரண், மீனா, கஸ்தூரியில் ஆரம்பித்து தனுஷ் வரை சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய கஸ்தூரிராஜாவின் (காதல் வரும் பருவம் படத்தின் மூலம் )அறிமுகம் தான் அரீஷ் குமார்.. இன்றைக்கும் எவர்கிரீனாக ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கும் சிந்துபைரவி, புன்னகை மன்னன், அண்ணாமலை,பாட்ஷா படம் உட்பட ரஜினி, கமல் என ஸ்டார் நடிகர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கணேஷ்குமாரின் மகன். ஆக, வாரிசு அடிப்படையில் சினிமாவில் நுழைவதற்கான வாய்ப்பு சுலபமாக தேடிவந்தாலும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அரீஷ்குமார...
நிவின் பாலியின் படப்பிடிப்பு தளத்திற்கு  ‘சர்ப்ரைஸ்  விசிட்’ அடித்த சூர்யா, ஜோதிகா  !!!!

நிவின் பாலியின் படப்பிடிப்பு தளத்திற்கு ‘சர்ப்ரைஸ் விசிட்’ அடித்த சூர்யா, ஜோதிகா !!!!

Latest News, Top Highlights
தென்னிந்தியாவின் இளம் ஹீரோக்களில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் நிவின் பாலி. மொழி எல்லைகளை தாண்டி அவரது ரசிகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது அனைவரும் அறிந்ததே. அவரது அடுத்த படமான 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்தை '36 வயதினிலே' புகழ் ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். 'பீரியாடிக் ஆக்ஷன்' படமான இந்த படத்தை பெரும் பொருட்செலவில் 'ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' சார்பாக திரு. கோகுலம் கோபாலன் தயாரிக்கின்றார். மலையாள சினிமா வரலாற்றில் மிக அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்படும் படம் இது தான் என கூறப்படுகிறது. இந்த படம் பிற மொழி ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. முதல் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே இப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கடந்த இரண்டு மாத காலமாக மங்களூரில் இப்படத்தின் படப்பிடிப்பு இடை விடாமல் நடந்து வருகின்றது. இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் பிரம...
விஜய் ஆண்டனி இல்லாமல் ‘அண்ணாதுரை’ சாத்தியமில்லை – இயக்குனர் சீனிவாசன்!!

விஜய் ஆண்டனி இல்லாமல் ‘அண்ணாதுரை’ சாத்தியமில்லை – இயக்குனர் சீனிவாசன்!!

Latest News, Top Highlights
ஒரு இயக்குனருக்கு வணிக ரீதியிலான முன்னணி நடிகர், சிறந்த நடிகர்கள் மற்றும் சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்கள், அதுவும் அவரது முதல் திரைப்படத்திலேயே அமைந்து விட்டால் அந்த படத்தின் கதையையும், இயக்குனரின் திறமையையும் அது பறை சாற்றும். விஜய் ஆண்டனி நடிக்க, ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் 'அண்ணாதுரை', வரும் நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படம் வெளியாக இருப்பது எனக்கு உற்சாகமாகவும், அதே சமயத்தில் பதட்டமாகவும் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு கலவையான உணர்வுக்காக தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். சினிமா கலையின் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த கதையை எனது முதல் படமாக இயக்கியதை நான் பெருமையாக நினைக்கிறேன். சினிமா கலையை கற்றுக் கொள்ள பல்வேறு இயக்...
தெலுங்கில் 1 கோடிக்கு விற்பனையான ‘பொட்டு’..

தெலுங்கில் 1 கோடிக்கு விற்பனையான ‘பொட்டு’..

Latest News, Top Highlights
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம் - செந்தில் / ஒளிப்பதிவு - இனியன் ஹரீஷ் இசை - அம்ரீஷ் / பாடல்கள் - விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத் ஸ்டன்ட் - சூப்பர் சுப்பராயன் / எடிட்டிங் - எலீசா கலை - நித்யானந் /நடனம் - ராபர்ட் தயாரிப்பு மேற்பார்வை - ஜி.சங்கர் ...
இயக்குனர் ஆர் கண்ணனின் ஆக்‌ஷன் களத்தில் அதர்வா!

இயக்குனர் ஆர் கண்ணனின் ஆக்‌ஷன் களத்தில் அதர்வா!

Latest News, Top Highlights
மனதை வருடும் மெல்லிய படங்களை எப்படி கொடுக்க வேண்டும் என்ற வித்தையை அறிந்தவர் தான் இயக்குனர் கண்ணன். அதர்வாவுடன் அவர் இணையும் அடுத்த படம் நல்ல அதிர்வலைகளோடு துவங்கிருக்கிறது. அதர்வா, கண்ணன் காம்போவில் உருவாகும் இந்த ஆக்‌ஷன் படம், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்திருக்கிறது. இயக்குனர் ஆர் கண்ணனின் மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ஆரம்பத்திலேயே சக்சஸ் ரூட்டில் பயணிக்க துவங்கியிருகிறது. இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வரும் , "என்னை நோக்கி பாயும் தோட்டா" படத்தில், தனுஷ் ஜோடியாக நடிக்கும் மேகா ஆகாஷ் இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக நடிக்கிறார். சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மேகா ஆகாஷ், கூடிய விரைவில் தமிழ் சினிமாவிலும் ஜொலிக்கவிருக்கிறார். "அதர்வா, மேகா ஆகாஷ் ஜோடியை திரையில் பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களும், இளை...