Tuesday, December 7
Shadow

Top Highlights

விஜய்க்கும் முருகதாஸ்க்கும் இது ரொம்ப முக்கியமான படமாம் ஏன் தெரியுமா?

விஜய்க்கும் முருகதாஸ்க்கும் இது ரொம்ப முக்கியமான படமாம் ஏன் தெரியுமா?

Top Highlights
விஜய்-முருகதாஸ் கூட்டணி இணைகின்றது என்றாலே ரசிகர்களிடம் ஒரு ஆவல் வந்துவிடும். அந்த வகையில் இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது, இந்நிலையில் விஜய்-முருகதாஸ் இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வந்த துப்பாக்கி, கத்தி இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து இந்த முறை ஹாட்ரிக் ஹிட் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது இந்த கூட்டணி, அதே நேரத்தில் முருகதாஸிற்கு கடந்த இரண்டு படங்களுமே தோல்வி. அதனால், அவரும் மீண்டு எழ வேண்டும் என்ற உற்சாகத்திலேயே இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கு பணியில் இருக்கின்றாராம். எது எப்படியோ தளபதி படம் நன்றாக வந்தால் சரி என்பதே தளபதி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு....
திடீரென புதிர் போடும் விக்ராந்த்

திடீரென புதிர் போடும் விக்ராந்த்

Latest News, Top Highlights
வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களான மிஷ்கின், சுசீந்திரனை வைத்து புதிர் ஒன்றை போட்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் பொதுவான ஒன்று குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று புதிர் வைத்துள்ளனர். சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `வெண்ணிலா கபடி குழு'. அதன் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. `வெண்ணிலா கபடி குழு' படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த பாகத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடித்து வருகிறார். சுசீந்திரன் இப்படத்திற்கு கதை எழுத, செல்வ சேகரன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு தான் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ...
ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

Latest News, Top Highlights
ஜெயம் ரவி நடிப்பில் `டிக் டிக் டிக்' படம் தயாராகி இருக்கும் நிலையில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகிறது. சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்'. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. ஜெயம் ரவி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. எனவே அதற்கு முன்னதாக ஜெயம் ரவி புதிய படம் ஒன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். அந்த படத்தை புதுமுக இயக்குநர் தங்கவேல் இயக்குவதாகவும், இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (டிசம்பர் ...
விஜய்யுடன் நடிக்க மறுத்த ஓவியா அதிர்ச்சி தகவல்

விஜய்யுடன் நடிக்க மறுத்த ஓவியா அதிர்ச்சி தகவல்

Top Highlights
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் இவருடன் நடிக்க எல்லோரும் நீ நான் என்று போட்டி போடுவார்கள் ஏன் அவர் படத்தில் ஒரு காட்சியிலாவது வரவென்றும் என்று எங்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மத்தியில் ஓவியாவுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை விஜயுடன் நடிக்க மறுத்துள்ளார். தளபதி விஜய் விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான வேலைகள் தற்போது மும்மரமாக நடந்து வருகின்றன, மேலும் படத்தில் நடிப்பதற்கான நடிகர், நடிகைகளின் தேர்வும் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஜயின் தங்கையாக நடிக்க ஓவியாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஓவியா என்னது தங்கை கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டுமா? அதெல்லாம் முடியவே முடியாது என கூறி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் ஒரு முறை தங்கை ...
அதர்வா முரளியுடன் ஜோடி சேரும் ஹன்சிகா

அதர்வா முரளியுடன் ஜோடி சேரும் ஹன்சிகா

Top Highlights
ஒரு புதுமையான ஜோடி எந்த ஒரு படத்திற்கும் நிச்சயம் பலம் சேர்க்கும் . அதுவும் இரண்டு இளம் ஸ்டார்கள் முதல் முறையாக ஒன்று சேரும் பொழுது அப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவு உயரும். இளம் கதாநாயகர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான அதர்வாவின் அடுத்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்க ஹன்சிகா மோத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த துள்ளலான இளம் ஜோடி இள வட்ட சினிமா ரசிகர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை, வெற்றி படங்களை சரியாக கண்டறிந்து தயாரிக்கும் 'Auraa Cinemas' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த பெரிய பட்ஜெட் படத்தை 'டார்லிங்' பட புகழ் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார். சாம் CS இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது. '' ஒரு விநியோகத்தரான எனக்கு சுவாரஸ்யமான, பலமான கூட்டணியின் பலன் நன்கு தெரியும். சரியான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞ...
‘ஆணாதிக்கமும் தவறு.. பெண்ணாதிக்கமும் தவறு” ; சாட்டையை சுழற்றும் ‘ஆண் தேவதை’..!

‘ஆணாதிக்கமும் தவறு.. பெண்ணாதிக்கமும் தவறு” ; சாட்டையை சுழற்றும் ‘ஆண் தேவதை’..!

Top Highlights
இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது இயக்கிவரும் படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி கதைநாயகனாக நடிக்கும் 'ஆண்தேவதை' படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார். 'சிகரம் சினிமாஸ்' , சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். சற்று இடைவெளிக்குப்பின் வந்தாலும், விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என்று திறமைசாலிகளுடன் கைகோர்த்துக் கொண்டு முழு பலத்தோடு தான் களத்தில் குதித்துள்ளார் இயக்குநர் தாமிரா. வரும் ஜனவரியில் வெளியாக இருக்கும் இந்தப்படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துகொண்டார் இயக்குநர் தாமிரா. பெண்கள் தான் தேவதையாக சித்தரிக்கப்பட்டு வரும் நி...
உதயநிதியின் நிமிர் படத்தின்  தொலைக்காட்சி உரிமத்தை வாங்கிய விஜய் டிவி

உதயநிதியின் நிமிர் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை வாங்கிய விஜய் டிவி

Top Highlights
ஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முன்பே ஒரு முன்னணி தொலைக்காட்சி சேனல் வாங்குவது அப்படத்தின் வர்த்தக பலத்தையும் அப்படத்திற்கு மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பையும் குறிக்கும். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து, பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கி, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும் 'நிமிர்' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஒரு பெரிய தொகை கொடுத்து விஜய் டிவி பெற்றுள்ளது. இந்த படத்தின் வர்த்தக பலத்தை இது மேலும் நிருபித்துள்ளது. சுவாரஸ்யமான, ஜனரஞ்சகமான எல்லா அம்சங்களையும் கொண்ட ஒரு முழு நீள குடும்ப படம் 'நிமிர்'. இப்படத்தை சந்தோஷ் T குருவில்லா தயாரித்துள்ளார். இது குறித்து விஜய் டிவியின் ' பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி பேசுகை...
சர்ச்சையில் சிக்கிய விஜய்சேதுபதி ஆளும் கட்சி அரசியல்வாதிகளால் ஆபத்து

சர்ச்சையில் சிக்கிய விஜய்சேதுபதி ஆளும் கட்சி அரசியல்வாதிகளால் ஆபத்து

Top Highlights
சமீபகாலமாக விஜய் சேதுபதி ஆக்கிரமிப்பு தமிழ் சினிமாவில் அதிகம் என்று தான் சொல்லணும் காரணம் தொடர் வெற்றி அதோடு சிறந்த கதாபாத்திரம் கதைக்களம் கெட்டப் என்பதை விட கதாபாத்திரத்தின் வலிமையை மட்டுமே தேர்ந்த்டுத்து நடிக்கிறார் விஜய் சேதுபதி அப்படியான ஒரு படம் தான் தற்போது நடித்து கொண்டுஇருக்கும் படம் நல்ல நாள் பார்த்து சொல்லுறேன் விஜய் சேதுபதி பல வேடங்களில் நடித்திருக்கும் நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில், “சீதையை கடத்திட்டு போய் கண்ணியமா நடந்துகிட்ட ராவணன் நல்லவனா? சீதையை சந்தேகப்பட்ட ராமன் நல்லவனா?னு” ஒரு கேள்வியை கேட்டிருக்கார். இதனால் பாஜகவினர் இப்படத்துக்கும் பிரச்சனை கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஹெச்.ராஜா இது சம்பந்தமான டிவிட்களை போட்டு வருகிறார். எச்.ராஜா ட்விட் போட்டதும் படக்குழுவினர் குஷியடைந்துள்ளனர். காரணம், எச்.ராஜாவாலெப்படி மெர்சல் படம் பேசப்பட்டதோ அது போல தங்கள...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விஷாலின் வேட்புமனு மீண்டும் ஏற்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விஷாலின் வேட்புமனு மீண்டும் ஏற்பு

Latest News, Top Highlights
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நிராகரிக்கப்பட்ட விஷாலின் வேட்பு மனு மீண்டும் ஏற்கப்பட்டது. நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். இன்று மாலை இவரின் மனுதாக்கலை நிராகரித்தது தேர்தல் ஆணையம். நடிகர் விஷால் தரப்பினர் தேர்தல் ஆணையரிடம் கேட்ட போது சில ஆவணங்களின் குளறுபடியால் நிராகரித்துவிட்டது என்று தேர்தல் ஆணையர் கூறினார். இதை ஏற்க மறுத்த விஷால் நான் அளித்த ஆவணங்களை மறுஆய்வு செய்யும் படி கேட்டுக் கொண்டார். திடீர் திருப்பமாக மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சில திருத்தங்களுக்கு பிறகு நடிகர் விஷாலின் மனுதாக்கல் ஏற்கப்பட்டது. இது போன்ற ஒரு சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றிலே நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
வரலாற்று படத்தில் இருந்து அமலாபால் விலகல்

வரலாற்று படத்தில் இருந்து அமலாபால் விலகல்

Latest News, Top Highlights
கேரளாவின் புகழ்பெற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் இருந்து நடிகை அமலாபால் வெளியேறியிருக்கிறார். கேரளாவில் புகழ்பெற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை படமாக்கப்பட உள்ளது. '36 வயதினிலே' படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கும் இந்த படத்தில் காயம்குளம் கொச்சுண்ணியாக நிவின்பாலி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலாபால் ஒப்பந்தமாகி இருந்த நிலையில் படத்தில் இருந்து அமலாபால் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமலா பாலுக்கு பதிலாக ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பெரும் பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாய் உருவாக உள்ள இப்படத்தை 'ஸ்ரீ கோகுலம் மூவீஸ்' சார்பில் திரு. கோகுலம் கோபாலன் தயாரிக்கவுள்ளார். ...
CLOSE
CLOSE