Friday, May 27
Shadow

Top Highlights

வட இந்திய பிலிம்பேர் விருது .. சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார் வித்யா பாலன்!

வட இந்திய பிலிம்பேர் விருது .. சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார் வித்யா பாலன்!

Latest News, Top Highlights
மும்பை: பிலிம்பேர் பத்திரிக்கை ஆண்டு தோறும் வடஇந்திய மற்றும் தென்னிந்திய திரைப்பட கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 63-வது வட இந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் மும்பையில் நடந்தது. இதில் 2017ம் ஆண்டு வெளிவந்த படங்கள், கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.சிறந்த படத்துக்கான விருது ஹிந்தி மீடியம் படத்திற்கு வழங்கப்பட்டது. பரேலி கி பர்பி படத்தை இயக்கிய அஸ்வினி அய்யர் சிறந்த இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹிந்தி மீடியம் படத்தில் நடித்த இர்பான் கானுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், தும்ஹாரி சுலு படத்தில் நடித்ததற்காக வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. சிறந்த படத்துக்கான ஜூரி விருது நியூட்டன் படத்திற்கு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான ஜூரி விருது டிராப்பட் படத்தில் நடித்த ராஜ்குமார் ராவுக்கும், நடிகைக்கான விருது ச...
என்னுடைய வாழ்வில் அதுவரை கிடைக்காத ஒரு சந்தோஷம்… நெகிழ்ச்சியில் டிஎஸ்பி!

என்னுடைய வாழ்வில் அதுவரை கிடைக்காத ஒரு சந்தோஷம்… நெகிழ்ச்சியில் டிஎஸ்பி!

Latest News, Top Highlights
விக்ரம் நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்த இசையமைப்பாளர் *தேவி ஸ்ரீபிரசாத் வழக்கத்தை விட கூடுதலான மகிழ்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, ‘தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திர கலைவிழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்து திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ரசித்து கேட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பலரும் எழுந்து நின்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். இது என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அப்போது நான் மேடையிலிருந்து இறங்கி சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த போது, அவர்...
“ முந்திரிக்காடு “ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை  ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார்

“ முந்திரிக்காடு “ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார்

Latest News, Top Highlights
“ முந்திரிக்காடு “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். முந்திரிக்காட்டு மக்களின் வாழ்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை இதில் பதிவு செய்கிறோம். இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார். படத்தின் இயக்குனர் மு.களஞ்சியம், படத்தின் நாயகன் புகழ், நாயகி சுபபிரியா, இசையமைப்பாளர் A.K. பிரியன், ஒளிப்பதிவாளர் G....
விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்க முழு நீள  காமெடி படமாக “பக்கா”

விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்க முழு நீள காமெடி படமாக “பக்கா”

Latest News, Top Highlights
அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார். முழு நீள காமெடி படமாக உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ திருவிழாவை பார்த்திருபோம். ஆனால் நாங்கள் ஒரு திருவிழாவையே படமாக எடுத்திருக்கிறோம். ...
பரபரப்பான படப்பிடிப்பில் மன்சூரலிகானின் “ கடமான்பாறை “

பரபரப்பான படப்பிடிப்பில் மன்சூரலிகானின் “ கடமான்பாறை “

Latest News, Top Highlights
மன்சூரலிகானின் “ கடமான்பாறை “ பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார். ...
வலைதளத்தில் வைரலாகும் பிக்பாஸ் ஜூலியின் புதிய தோற்றம் – நெட்சன்கள் கிண்டல்

வலைதளத்தில் வைரலாகும் பிக்பாஸ் ஜூலியின் புதிய தோற்றம் – நெட்சன்கள் கிண்டல்

Latest News, Top Highlights
ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இதனையடுத்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார் ஜூலி. இந்நிலையில் இவர், தற்போது 'கே7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ‘உத்தமி’ படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதில் சமூக சேவகராக ஜூலி நடிக்கிறார். இதில் அவருடன் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், உத்தமி’ படத்தில் நடிக்கும் ஜூலியன் வயதான புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகி...
கொடைக்கானலில் விஷால் – கீர்த்தி சுரேஷ் காதல்

கொடைக்கானலில் விஷால் – கீர்த்தி சுரேஷ் காதல்

Latest News, Top Highlights
விஷால் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் நடித்து வருகிறார். இதில் `சண்டக்கோழி-2' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிக்கிறார். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், சண்டக்கோழி 2 படத்தின் பாடல் காட்சிக்காக விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் படக்குழுவினருடன் கொடைக்கானலுக்குச் சென்றுள்ளனர். இப்படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாவது பாதி திண்டுக்கலில் தொடங்குகிறது. அங்கு படத்தின் பாடல் காட்சிகளை படமாக்கவும், விஷால் - கீர்த்தி சுர...
வீ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கை திறந்து வைத்த நடிகை சினேகா…

வீ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கை திறந்து வைத்த நடிகை சினேகா…

Latest News, Top Highlights
சென்னையில் இன்று வீ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி (V Care Multi speciality) கிளினிக்கின் 33வது கிளை அம்பத்தூர் பிரின்ஸ் இன்ஃபோ பார்க்கில் நடிகை சினேகா திறந்து வைத்தார். கடந்த 18 வருடங்களாக அழகு கலைத்துறையில் கோலோச்சிவரும் வீ கேர் நிறுவனத்தார் 33வது கிளினிக்கை அம்பத்தூரில் துவங்கியுள்ளார்கள் . தலைமுடி மற்றும் தோல்.. சரும பாதுகாப்பு (Hair and Skin care) துறையில் பல வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் வீ கேர் நிறுவனம் அதி நவீன உபகரணங்களோடு புதிய கிளையை திறந்திருக்கிறது.. சருமம் மற்றும் முடி பாதுகாப்பு துறையில் தனித்துவமிக்கதாக வீ கேர் நிறுவனம் வளர்ந்து வருவதற்கு காரணம் முழுமையான அர்ப்பணிப்பும், வாடிக்கையாளர்களின் முழு திருப்தியுமே காரணம் என்கிறார் வீ கேர் தலைமை நிர்வாகி திருமதி பிரபா ரெட்டி. ...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் பணி  சென்னை மையிலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் பணி சென்னை மையிலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது.

Latest News, Top Highlights
‘கபாலி’ படத்தை தொடர்ந்து ,ரஜினி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்துவிட்டது அதோடு இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகள் மிகவும் மும்முரமாக நடக்க இயக்குனர் ரஞ்சித் திட்டமிட்டு உள்ளார் அதோடு இந்த படத்தின் தரம் மற்றும் தொழில்நுட்பம் சிறப்பாக அமையவேண்டும் என்று சென்னையில் உள்ள மிக சிறந்த ஸ்டுடியோவான நாக் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது. இதனால் இந்த படத்தின் தரம் இகவும் சிறப்பாக அணையும் என்று எதிர்பார்க்கபடுகிறது காலா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு திரைக்கு ...
ரஜினி, கமலின் மறுபக்கம் விமல் – மன்னர் வகையறா இயக்குநர் பூபதி பாண்டியன்

ரஜினி, கமலின் மறுபக்கம் விமல் – மன்னர் வகையறா இயக்குநர் பூபதி பாண்டியன்

Latest News, Top Highlights
கமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல இவர் இயக்கிய தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அப்படிப்பட்டவரின் இயக்கத்தில் விமல் - ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், வரும் ஜன - 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளத்துடன் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் பூபதி பாண்டியன...