Saturday, April 20
Shadow

Top Highlights

அமெரிக்காவில் பரியேறும் பெருமாள் இயக்குனருக்கு பாராட்டுவிழா

அமெரிக்காவில் பரியேறும் பெருமாள் இயக்குனருக்கு பாராட்டுவிழா

Latest News, Top Highlights
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர் , ஆனந்தி நடிப்பில் உருவான பரியேறும் பெருமாள் பெரும் வெற்றிபெற்றதுடன் பல விருதுகளையும் வாங்கிவருகிறது. இதன் தொடர்சியாக அமெரிக்க தமிழ்சங்கம் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரிசெல்வராஜ் க்கு பாராட்டுவிழா நடத்தியிருக்கிறார்கள். வாசிங்டன் தமிழ்சங்கம் நடத்திய இந்த விழாவில் மாரிசெல்வராஜ் க்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்கள். இது போன்ற திரைப்படங்களை தொடர்ந்து இயக்கவேண்டும், சமூகத்தில் நிலவும் சாதிய வர்க்க வேறுபாடுகளை கலைகள் மூலமாக உடைத்தெரியும் வேலை இயக்குனர்களுக்கு உள்ளது. இது போன்ற படங்கள் தயாரிக்க தயாரிப்பாளர்கள் இனி முன்வருவார்கள் பரியேறும் பெருமாள் குழுவினருக்கு வாசிங்டன் தமிழ்சங்கம் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது....
‘தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் காதலைப் பற்றி பேசும் படமல்ல – கார்த்தி

‘தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் காதலைப் பற்றி பேசும் படமல்ல – கார்த்தி

Latest News, Top Highlights
தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப் பார்த்து இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா? என்று ஆச்சர்யபட்டிருக்கிறேன். அவரின் தாத்தா வெற்றி படமான "மதுர வீரனை" தயாரித்தவர். லக்ஷ்மன் அவரின் பரம்பரையிலிருந்து வந்து இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கிறது. இப்படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை தாங்கி வரும். ரஜாத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன். ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மி...
இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா மறைந்த தினம்

இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா மறைந்த தினம்

Birthday, Top Highlights
டி. ஜி. லிங்கப்பா என பரவலாக அறியப்பட்ட திருச்சிராப்பள்ளி கோவிந்தராஜுலு லிங்கப்பா பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், கன்னடம், தெலுங்கு மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார். ஜி. கோவிந்தராஜுலு நாயுடு இவரின் தந்தையாவார். இவர் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் சின்னதுரை, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, விளையாட்டு பொம்மை, முதல் தேதி, வாழ்விலே ஒரு நாள், தங்கமலை ரகசியம், தேடி வந்த செல்வம், கன்னியின் சபதம், சபாஷ் மீனா, எங்கள் குடும்பம் பெரிசு, புதுமைப்பெண், மாலா ஒரு மங்கல விளக்கு, பாண்டித் தேவன், எல்லாரும் இந்நாட்டு மன்னர், சங்கிலித்தேவன், குழந்தைகள் கண்ட குடியரசு, முரடன் முத்து, தாயின் மேல் ஆணை, தங்க மலர், கடவுள் மாமா வீர அமர்சிங் என்னைப் பார்...
பிரபல ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சன் பிறந்த தினம்

பிரபல ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சன் பிறந்த தினம்

Birthday, Top Highlights
அபிஷேக் பச்சன் இவர் ஒரு இந்திய நடிகர் மற்றும் இந்திய நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோரது மகனுமாவார். இவர் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்யைத் திருமணம் செய்துள்ளார். ஜெ.பி.தத்தாவின் ரேப்புஜி (2000)-த்தில் பச்சன் முதன்முதலில் தோற்றமளித்தார். 2004 ஆம் ஆண்டில் வெளி வந்த தூம் மற்றும் யுவா படங்களில் நடித்தார். யுவா படத்தில் இவரது நடிப்புக்காக பல விருதுகளைப் பெற்றார், அதில் மிகச் சிறந்த துணை நடிகர் வகைக்காக இவர் வாங்கிய இவருடைய முதல் பிலிம்பேர் விருதாகும். அபிஷேக் பச்சன் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனின் மகனாவார்; இவருடைய மூத்த சகோதரி சுவேதாபச்சன்-நந்தா ஆவார் (பி.1974). இவருடைய பாட்டனார், ஹரிவன்ஷ் ராய் பச்சன் நன்கு அறிமுகமான இந்தி இலக்கியங்களின் கவிஞர் ஆவார். இவருடைய குடும்பத்தின் கடைசி பெயர் ஸ்ரீவஸ்தவ் ஆக இருந்தது. பச...
நடிகர் ராஜ்கிரண் பிறந்த தினம்

நடிகர் ராஜ்கிரண் பிறந்த தினம்

Birthday, Top Highlights
ராஜ்கிரண் இந்தியத் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். இவருடைய இயற்பெயர் காதர் என்பதாகும். திரையுலகில் இவருடைய ராஜ்கிரண் என்ற பெயரே மிகப் பிரபலமானது. தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்தவர். இவர் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் வடிவேலுவை அறிமுகப்படுத்தியவர் இவரே. குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில என்னைப்பெத்த ராசா, அரண்மனைக் கிளி, வேங்கை, முனி, கிரீடம், சண்டக்கோழி, பாண்டவர் பூமி, நந்தா, என் ராசாவின் மனசிலே, திருத்தணி, கிரீடம் ...
நடிகர் தியாகு பிறந்த தினம்

நடிகர் தியாகு பிறந்த தினம்

Birthday, Top Highlights
தியாகு, தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையாளர் வேடமேற்று நடித்தவர். வயலின் வித்துவான் கும்பகோணம் இராசமாணிக்கம் பிள்ளையின் பேரன்.இவர் நகைசுவை வில்லன்,குணசித்திரம் போன்ற கதாபாத்திரங்களில் இறநூறுக்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார் இவர் நடித்த திரைப்படங்கள் ஒரு தலை ராகம், பாலைவனச் சோலை, ஆகாய கங்கை, பக்கத்து வீட்டு ரோஜா, ஊமை விழிகள், ஜல்லிக்கட்டு, சிவா, மை டியர் மார்த்தாண்டன், பணக்காரன், கிழக்கு வாசல், புருஷ லட்சணம், ராசய்யா, மாயாபசார், வனஜா கிரிஜா, தினமும் என்னை கவனி, தேடி வந்த ராசா, புருஷன் பொண்டாட்டி, இரட்டை ரோஜா, சாமி, சந்திரமுகி, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, மருதமலை, இந்திர லோகத்தில் நா அழகப்பன், குசேலன், வெடிகுண்டு முருகேசன், சிங்கம், மாப்பிள்ளை, சிங்கம் 2...
இளையராஜா 75 நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரகுமானிடம் கோவம் அடைந்த இளையராஜா

இளையராஜா 75 நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரகுமானிடம் கோவம் அடைந்த இளையராஜா

Latest News, Top Highlights
தயாரிப்பாளர் சங்கம் நடத்திய இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தான் எத்தனை எதிர்ப்பு பல சோதனைகள் பாதி தயாரிப்பாளர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் கோர்ட் கேஸ் என்று எல்லாம் சென்று ஒரு வழியாக இதை நடிகர் சங்க உறப்பினர்கள் ஒத்துழைப்புடன் வெற்றிகண்டார் விஷால் . இளையராஜா 75 நிகழ்ச்சியில் எத்தனையோ பேர் கலந்து கொண்ட போதிலும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வந்தது தான் சிறப்பு. அதிலும் மேடையில் ராஜா சாரும், ரஹ்மானும் பாடியது ரசிகர்களால் மறக்கவே முடியாது. விழா மேடையில் இளையராஜா ரஹ்மான் பற்றி பேசியது எல்லாம் இனி பல காலம் பேசப்படும். சின்னப் பையனாக பார்த்த ரஹ்மான் பற்றி ஏதாவது சொல்லுங்க சார் என்று சுஹாசினி மணிரத்னம் இளையராஜாவிடம் கேட்டார். ரஹ்மான் அவரின் அப்பாவுடன் இருந்ததை விட என்னுடன் தான் அதிக நேரம் இருந்திருக்கிறார் என்றார் இளையராஜா. அப்பாவை விட என்னுடன் தானே அதிக நேரம் இருந்திருக்க என்று இளையராஜா...
மக்களை கவர்ந்த ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி படத்தின் ட்ரைலர்

மக்களை கவர்ந்த ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி படத்தின் ட்ரைலர்

Latest News, Top Highlights
'நகைச்சுவை' யாரும் செய்து விட முடியும், ஆனால் அரசியல் நையாண்டி படங்களை எடுக்க நல்ல கதை மற்றும் சரியான பேக்கேஜிங் தேவைப்படும். அப்போது தான் பெரிய அளவு பார்வையாளர்களை சென்றடையும். ஆர்.ஜே. பாலாஜியின் LKG படத்தின் சிங்கிள் பாடலான "எத்தனை காலம் தான்' பாடல் நம்பமுடியாத வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இது YouTube பார்வைகள், சமூக ஊடகங்கள் தாண்டி ரேடியோ ஸ்டேஷன்களிலும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. நையாண்டியான விஷயங்களை கொண்டிருந்த இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. வெளியான சில மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்திருப்பது என்பது மிகவும் சுவாரசியமான தகவல். இது குறித்து இயக்குனர் கே.ஆர் பிரபு கூறும்போது, "ட்ரைலருக்கு எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். உண்மையில், டிரெய்ல...
பாவம் அஜித் நாயகிக்கு இப்படி ஒரு பிரச்சனையாம்

பாவம் அஜித் நாயகிக்கு இப்படி ஒரு பிரச்சனையாம்

Latest News, Top Highlights
பாலிவுட்டில் நடிகைகள் குச்சி, குச்சியாக இருக்கும்போது வித்யா பாலன் மட்டும் பூசினாற் போன்று உள்ளார்.   பூசினாற் போன்று இருந்தாலும் மார்க்கெட் பாதிக்காது என்று அவர் நிரூபித்துள்ளார்.அதோடு கதைக்கு தேவை என்றால் எல்லை மீறும் கவர்ச்சியிலும் களம் இறங்குவார். தல 59 மூலம் கோலிவுட் வரும் வித்யா பாலன் தனது உடல் எடை பிரச்சனை குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,சிறு வயதில் இருந்தே எனக்கு ஹார்மோன் பிரச்சனை உள்ளது. நான் டீனேஜில் இருந்தபோது என்னை பார்ப்பவர்கள் எவ்வளவு அழகான முகம், உடம்பை குறைத்தால் நன்றாக இருக்குமே என்பார்கள். பெரியவர்களோ, சிறியவர்களோ யாராக இருந்தாலும் அவர்களை பார்த்து இப்படி சொல்வது சரி அல்ல. நான் பல நாட்கள் பட்டினி எல்லாம் கிடந்திருக்கிறேன். கடுமையாக ஒர்க்அவுட் செய்து உடல் எடையை குறைப்பேன். ஹார்மோன் பிரச்சனை கட்டுக்குள் வரும். ஆனால் பிறகு மீண்டும் அதே பிர...
இளையராஜா நிகழ்ச்சிக்காக  ஆர்.பார்த்திபனுக்கு நன்றி சொன்ன  விஷால்

இளையராஜா நிகழ்ச்சிக்காக ஆர்.பார்த்திபனுக்கு நன்றி சொன்ன விஷால்

Latest News, Top Highlights
பல எதிர்ப்புகள் நடுவே நடந்த இளையராஜா 75 நிகழ்ச்சி ஒரு வழியாக வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது இதன் மூலம் நடிகர் விஷால் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர் சங்கம் தங்கள் பலத்தை நிரூபித்துள்ளது. அதோடு நல்ல வசூலையும் பார்த்துள்ளது. இதனால் விஷாலுக்கு அனைவரிடமும் நல்ல பேர் கிடைத்துள்ளது இருந்தும் இந்த நிகழ்வுக்கு மிகவும் உற்சாகமாக உழைத்த முக்கிய நபர் நடிகர் பார்த்திபன் பாதிலே வெளியேறினார் இதற்க்குகாரணம் என்ன என்று தெரியவில்லை. பல சர்ச்சைகள், நீதிமன்ற வழக்குகள் எனக் கடந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் கடைசி சர்ச்சையாக தயாரிப்பாளர் சங்கத்தில் சமீபத்தில் துணைத் தலைவர் ஆக பதவியேற்ற பார்த்திபன் ராஜினாமா செய்தது அமைந்தது. இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக பார்த்திபன் பல புதுமையான விஷயங்களை செய்ய நினைத்ததாகவும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அவருடைய பாணியில் வித்தியாசமான விதத்தில் தொகுப்புரையை எழுதியிருந்தா...