Friday, March 29
Shadow

Top Highlights

நடிகை புன்னகையரசி சினேகா பிறந்த தினம் இன்று

நடிகை புன்னகையரசி சினேகா பிறந்த தினம் இன்று

Birthday, Top Highlights
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். சினேகா மும்பையில் பிறந்தார். அவளுடைய குடும்பம் அவளுடைய பிறப்புக்குப் பிறகு அமீரகத்தில் ஷார்ஜாக்குச் சென்றது, அங்கு அவர் ஓன் ஆங்கில உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்தார் . பின்னர் அவர் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் உள்ள பண்ருட்டி என்னும் ஊரில் குடியேறினர். அங்கே இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் ஒன்றும் உள்ளது. சினேகா முதலில் மலையாளத்தில் இங்கனே ஒரு நீல பாக்ஷி என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார். பின்னர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தினார். என்னவளே...
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தாப்ஸி நடிக்கும்  “கேம் ஓவர்”

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்”

Latest News, Top Highlights
இறுதி சுற்று, விக்ரம் வேதா, தமிழ்படம் 2 வெற்றி படங்களுக்கு பிறகு, தயாரிப்பு நிறுவனம் Y NOT ஸ்டுடியோஸ் நிறுவனம் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து "கேம் ஓவர்" எனும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். நயன்தாரா நடிப்பில் உருவான "மாயா" (2015) வெற்றி படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். தாப்ஸி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. "கேம் ஓவர்" படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. மேலும் தமிழ் நாடு மற்றும் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது....
சத்யராஜ் பாராட்டில் சமுத்திரகனியின் ஆண் தேவதை

சத்யராஜ் பாராட்டில் சமுத்திரகனியின் ஆண் தேவதை

Latest News, Top Highlights
ரெட்டச்சுழி படத்தை தொடர்ந்து இயக்குனர் தாமிரா டைரக்சனில் உருவாகியுள்ள படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்துள்ள இந்தப்படத்தை  தனது 'சிகரம் சினிமாஸ்' நிறுவனத்துடன் ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா. விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம்  என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்..  இந்தப்படம் வரும் அக்-12ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதனையொட்டி திரையுலக பிரபலங்களுக்கு இந்தப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிட்டு காட்டப்பட்டது. நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் பா.ரஞ்சித், அமீர், மாரி செல்வராஜ், மீரா கதிரவன் கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப்படத்தின் சிறப்புக்காட்சியை கண்டுகளித்தனர். படம் பார்த்தபின் சத்யராஜ் கூறியபோது, “ரொம்பவே யதார்த்தமான படம்.. வாழ்க்கைல...
மெரினா புரட்சி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை துறை தடை

மெரினா புரட்சி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை துறை தடை

Latest News, Top Highlights
நாச்சியாள் பிலிம்ஸ் தயாரித்திருக்கும்தமிழர்களின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்கள் 8 நாட்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தையும்,அதன் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை துறை தடை விதித்திருக்கிறது. மறு சீராய்வு குழுவில் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு நீதி கிடைக்கும்..உண்மை வெல்லும் என்று நம்புகிறோம்....
வண்டலூர் மிருக காட்சி புலியை  தத்தெடுத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்!

வண்டலூர் மிருக காட்சி புலியை தத்தெடுத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்!

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் இன்று மிகவும் பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன் யார் உதவியும் இல்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அந்தஸ்தை பிடித்தவர் கடின உழைப்பால் உயர்ந்தவர் இதனாலே எப்போதும் பலருக்கு யாருக்கும் தெரியாமல் உதவி செய்து வருகிறார் அந்த வகையில் தற்போது புலிக்கு உதவி செய்கிறார் சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள அனு என்னும் வெள்ளைப் புலியை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். இதுதொடர்பாக, வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதம் 2 முதல் 8-ம் தேதி வரை நாடு முழுவதும் வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம் 2009-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பூங்காவிலுள்ள புலி மற்றும் சிங...
ரஜினிகாந்த் படம் இயக்கம் எப்போது பதில் சொன்ன தனுஷ்

ரஜினிகாந்த் படம் இயக்கம் எப்போது பதில் சொன்ன தனுஷ்

Latest News, Top Highlights
தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் வடசென்னை படம் ரசிகர்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது இந்த படத்துக்கு சென்சார் A சான்றிதழ் கொடுத்துள்ளது இந்த படம் வரும் 17ம் தேதி வெளியாக இருக்கிறது இந்த நிலையில் நேற்று முன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது இதில் வட சென்னை மற்றும் பல விஷயங்களை பேசினார். நடிகராக மட்டுமின்றி, பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பலத் திறமைகள் கொண்டவர் தனுஷ். அவர் இயக்குநராக அறிமுகமான படம் ‘பவர் பாண்டி’. ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். இதைத் தொடர்ந்து தற்போது ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார். தனுஷே ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், நாகார்ஜுனா, அதிதி ராவ், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில்...
கரூரில் உள்ள “எல்லோரா”  தியேட்டர் மீது போலீஸ்  நடவடிக்கை!

கரூரில் உள்ள “எல்லோரா” தியேட்டர் மீது போலீஸ் நடவடிக்கை!

Latest News, Top Highlights
ஒரு குப்பைக் கதை' என்ற சமூக அக்கறையுள்ள திரைப்படத்தை 'முகமது அஸ்லம்' என்ற தயாரிப்பாளர் தயாரித்து அதை கடந்த மே மாதம் 25 - ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் 'ரெட் ஜெயண்ட்' என்ற பெரிய நிறுவனம் மூலமாக வெளியிட்டார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் தயாரிப்பாளர் ஏற்கெனவே 'பாகன்' என்ற படத்தை ஸ்ரீகாந்த், ஜனனி ஐயர் மற்றும் சூரி ஆகியோரை வைத்து இயக்கி வெற்றி பெற்றவர். மற்றும் ஊடகவியலாளர். அவரது 'ஒரு குப்பைக் கதை' திரைப்படம் மயிலாடுதுறை கோமதி திரையரங்கில் திருட்டுத்தனமாகப் படம் பிடிக்கப்பட்டதைக் கண்டு பிடித்து, அந்தத் தியேட்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது யாவரும் அறிந்தததே. இதே படத்தை கரூரில் இயங்கும் 'அஜந்தா, எல்லோரா' என்ற இரட்டைத் தியேட்டர் அரங்கத்தில் 'எல்லோரா' என்ற தியேட்டரில் திருட்டுத்தனமாக படம் பிடித்து, இண்டர்நெட்டில் ஏற்றி படத்தின் வியாபாரத்தைப் பெரிய அளவில் ...
நடிகர் நிவின் பாலி பிறந்த தினம் இன்று

நடிகர் நிவின் பாலி பிறந்த தினம் இன்று

Birthday, Top Highlights
இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், சப்டேர்ஸ், நேரம், அருகில் ஒராள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.பிரேமம்(2015) மலையாள திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மலையாளத்தின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக உருவாகி உள்ளார்.பெங்களுர் டேசு மற்றும் 1983 திரைப்படங்களுக்காக 2015 ஆண்டின் கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார். பாலி, அக்டோபர் 11, 1984ஆம் ஆண்டு ஆலுவா, எர்ணாகுளம் மாவட்டம், கேரளம், இந்தியாவில் பிறந்தார். நிவின் அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் துறையில் பட்டம் பெற்ற பொறியியல் மாணவர். 2006 -ல் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு 2 -ஆண்டுகள் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்தவருக்கு , தந்தையின் இறப்பு பேரிடியாக அமையவே, வேலையை உதறிவிட்டு தன் சொந்த ஊருக்குத் த...
பழம்பெரும் நடிகை ஜெயந்தி பிறந்த தினம்

பழம்பெரும் நடிகை ஜெயந்தி பிறந்த தினம்

Birthday, Top Highlights
இவர் ஒரு இந்திய நடிகை. கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும்மராத்தி மொழிகளில் உள்ளிட்ட படங்களில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடத் திரைப்படத் துறை ஜெயந்தியை அபினயா சாரதேஎன்ற அடைமொழியுடன் கௌரவித்தது. தமிழில் அபிநய சரஸ்வதி என்று சரோஜா தேவி என்ற கன்னட நடிகை அன்புடன் அழைக்கப்பட்டார் . கமலாகுமாரி பிரிட்டிஷ் இந்தியாவில் மெட்ராஸ் ராஜதானியில் பெல்லாரியில் 1945 ,அக்டோபர் 11 இல் பிறந்தார் . அவரது தந்தை பாலசுப்ரமணியம் பெங்களூரில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ஆங்கிலம் பேராசிரியராக பணிபுரிந்தார். அவரது தாயார் பெயர் சந்தான லட்சுமி . இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகளின் மூத்தவராய் கமலா குமாரி இருந்தார் . மிக சிறிய வயதில் தந்தையுடன் படப்பிடிப்பிற்கு சென்று என் .டி .ராமாராவின் மடிமேல் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர் கமலா குமாரிமூன்று மூத்த உடன்பிறந்த பெண்களில் மூத்தவர...
மலையாள நடிகர் கே. பி. உமர் பிறந்த தினம்

மலையாள நடிகர் கே. பி. உமர் பிறந்த தினம்

Birthday, Top Highlights
கே .பி .உம்மெர் என்பார் ஒரு பிரபலமான மலையாள நடிகர் ஆவார் .இவர் பெரும்பாலும் வில்லனாகவும் ,குண சித்திர வேடங்களிலும் சுமார் 300 படங்களில் நடித்துள்ளார். கே .பி .உம்மெர், கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் தெக்கோரம் என்னும் ஊரில் முகமது கோயா என்பாருக்கும் ,பீவிக்கும் 11.10.1930-இல் பிறந்த உம்மர் 29.10.2001 அன்று தனது 71-ஆவது அகவையில் சென்னையில் காலமானார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்குமுன் கே.பி.ஏ.சி.நாடகக் குழுவில் நடித்து வந்தார். 1965-இல் எம்.டி-யுடைய முறைப்பெண்ணு படத்தின் மூலம் அறிமுகமானார். மலையாளத் திரையுலகில் 1965-1995 காலகட்டத்தில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் கோலோச்சிய நடிகர் கே.பி.உம்மர். பெரும்பாலும் நடிகர் பிரேம் நசீரின் படங்களில் அவருக்கு எதிரான கதாபாத்திரங்களில் நடித்தவர். மலையாளத்தில் சுமார் 300 படங்களுக்கு மேல் 30 ஆண்டுகளாய் நடித்தவர் . உம்மெர் ...