
அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை தான் அபி சரவணன் பகிரங்க அறிவிப்பு
“எனக்கும் அதிதி மேனனுக்கும் 2016ல் பட்டதாரி படத்தில் நடிக்கும்போது அறிமுகம் ஏற்பட்டது. அவர் நெடுநல்வாடை என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் இயக்குனருக்கும் அதிதிக்கும் பிரச்சனையானது.. அதைத்தொடர்ந்து அந்த இயக்குனர் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டு கூறியதுடன் மேலும் தற்கொலைக்கும் முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது. ஆனால் இதுபற்றி தற்போது என் மீது அளித்துள்ள புகாரில் அதிதி மேனன் தெரிவிக்கவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு தனியாக இருக்க பயமாக இருக்கிறது எனக் கூறியதால் மதுரையில் உள்ள எனது வீட்டிற்கு அழைத்துச்சென்று என் பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி எனது வீட்டிலேயே பாதுகாப்பு அளித்தேன்.. . அப்போது நான் அவரை அப்பவே அக்கறையுடன் கவனித்துக் கொள்வதாக எனது பெற்றோரிடம் அதிதி மேனன் கூறி, திருமணத்திற்கு சம்மதம் கேட்க, எனது பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதித்த...