Saturday, February 15
Shadow

“ரெமோ” படத்திற்கு யு சான்றை வழங்கிய தணிக்கைக் குழு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தின் தணிக்கை இன்று நடந்தது. அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்ற வகையில் யு சான்றை வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 24 ஏஎம் ஸ்டுடியோ தயாரித்துள்ள படம் ரெமோ. கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரமாண்ட செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் நடந்துள்ளது. படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பும் நிலவுகிறது.

வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தை மண்டல தணிக்கைக் குழுவினர் இன்று பார்வையிட்டனர். படத்துக்கு எந்தக் கட்டும் கொடுக்காமல் அனைவரும் பார்க்கக் கூடிய படம் எனும் யு சான்றிதழ் அளித்துள்ளனர்

Leave a Reply