Thursday, June 13
Shadow

சென்னை ரோகிணி திரையரங்க தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலையா?

நம்ம சிங்காரச் சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ரோகிணி தியேட்டர் செயல்பட்டு வருது. சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தியேட்டர்களில் ஒன்று இந்த ரோகிணி தியேட்டர்.

இன்னிக்கு (பிப்ரவரி, 3) மதியம் இந்த தியேட்டரில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ராமமூர்த்தி என்பவர் வந்திருக்கார். அப்போ தண்ணீர் தொட்டியிலே இருந்து பேட் ஸ்மல் வீசுவது போல இருந்துருக்குது. அதுனேலே ராமமூர்த்தி தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது துர்நாற்றம் அதிகமாக வீசிச்சு.

அதன் பின்னர் அவர் தண்ணீர் தொட்டிக்குள் லைட் அடித்து பார்த்துள்ளார். அப்போது, தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்ததைப் பார்த்து பதறிப்போய் தியேட்டர் மேனேஜரிடம் உடனே தெரிவிச்சிருக்கார். பின்னர் தியேட்டர் மேனேஜர் தண்ணீர் தொட்டியில் ஆண் சடலம் இருப்பது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக தியேட்டருக்கு வந்த காவல் துறையினர் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்க, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சடலத்தினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சடலம் மீட்கப்பட்டதும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறிச்சு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில், தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டவர் ரோகிணி தியேட்டரில் ஒர்க் செஞ்சு வந்தவர் என்றும், அவர் பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேச பெருமாள் (42) என்பது தெரியவந்துருக்குது.

மேலும், ரோகிணி தியேட்டரில் பிளம்பராக வேலை பார்த்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. சடலமாக மீட்கப்பட்ட வெங்கடேச பெருமாள் கடந்த ஜனவரி 26-ம் தேதி மது போதையில் வேலைக்கு வந்ததுள்ளார். மறுநாளில் இருந்து வேலைக்கு வரவில்லை என்பதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல் துறையினர் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த வெங்கடேச பெருமாள் மது போதையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? தவறி விழுந்து இருந்தால் எப்படி தண்ணீர் தொட்டி மூடப்பட்டிருக்கும்? அல்லது யாராவது அவரை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி விட்டு கொலை செய்தார்களா? அல்லது, எதற்காக அவர் தண்ணீர் தொட்டிக்கு சென்றார்? என்பது குறித்து தியேட்டர் ஊழியர்களிடம் காவல்துறையினர் அடுத்தடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் காவல் துறையினரின் விசாரணை அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் மிகவும் பிரபலமான ரோகிணி தியேட்டரில், ஊழியர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தியேட்டருக்கு கடந்த ஒரு வாரமாக வந்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்குது