வைகறை பாலன் இயக்கத்தில் கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “சியான்கள்”.
இந்தப்படத்தை தனது கே.எல்.புரொடக்ஷன் மூலம் தயாரித்து நடித்துள்ளார் கரிகாலன். ஏழு வயதான கிராமத்து முதியவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சி, சோகம், ஏமாற்றம், வைராக்கியம், விரக்தி, அழுகை உள்ளிட்டவற்றை மண்மனம் மாறாமல் இயக்கியுள்ளார் இயக்குனர் வைகறை பாலன்.
ஏழு சியான்களாக நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், துரை சுந்தரம், சமுத்திரசீனி, சக்திவேல் மற்றும் நாராயணசாமி நடிக்கவில்லை வாழ்ந்துள்ளனர். வயதானவர்களின் ஆசைகளும் அது நிறைவேறியதா என்பதையும் சில உண்மை சம்பவங்களை கோர்த்து இயக்குனர் இயக்கியுள்ளார்.
நிர்வாக தயாரிப்பாளர் இமை ராஜ்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பாடலாசிரியர் முத்தமிழ் இந்த படத்தில் இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார். பாடல்களும் அதன் வரிகளும் இனிமை. பாபு குமாரின் ஒளிப்பதிவு தேனி மாவட்ட கிராமத்தின் அழகை நேரில் சென்று பார்த்தது போன்ற உணர்வை கொடுத்துள்ளது. மப்பு ஜோதி பிரகாஷின் எடிட்டிங் சில இடங்களில் நெருடல் இருந்தாலும் படத்தின் ஓட்டத்திற்கு பாதிப்பில்லை.
ஊரில் வருத்தப்படாத வாலிபர் சங்கமாக சுற்றிக்கொண்டு இருக்கும் ஏழு சியான்களின் கதையை நமது கண்கள் கலங்கும் அளவில் சொல்லிய விதத்தில் இயக்குனர் வைகறை பாலன் வெற்றி பெற்றுள்ளார்.