Friday, October 11
Shadow

கமர்ஷியல் மற்றும் காமெடி படமாக வருகிறது விக்ரம்பிரபு – ஷாம்லி நடிக்கும் “ வீரசிவாஜி

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தாயரிக்கும் படம் வீரசிவாஜி. கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.

மக்களில் ஒருவராக இருக்கும் விக்ரம் பிரபு, வில்லனின் பிரச்சனையில் தெரியாமல் போய் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து மீண்டு வெளியே வரும் விக்ரம்பிரபு, வில்லனால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனையை எப்படி தீர்த்தார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.
இது பக்கா கமர்ஷியல் படம். ஆக்ஷனும், காமெடியும் கலந்து இருக்கும்

Leave a Reply