Friday, March 29
Shadow

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கொரோனா பாதிப்பால் தமிழ் சினிமா எந்த மாதிரியான விளைவுகளை எதிர்கொண்டு வருகிறது

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கொரோனா பாதிப்பால் தமிழ் சினிமா எந்த மாதிரியான விளைவுகளை எதிர்கொண்டு வருகிறது எதிர்கொள்ள போகிறது என்பதை பகிர்ந்துள்ளார்.

தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவின் இழப்பை பற்றி கவலை பட வேண்டாம் நமக்கு மக்கள் தான் முக்கியம் மக்கள் இல்லை என்றால் சினிமாவே எடுக்க முடியாது அதனால் இந்த இழப்பை நாம் ஒன்று சேர்ந்து ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என கூறியுள்ளார் .

தற்போது மார்ச் 17ல் இருந்து இந்தியா முழுக்க திரைப்பட சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் முடக்கிவிடபட்டுள்ளன. இதனால் திரையரங்குகள் முதலில் பாதிக்கும் என தயாரிப்பாளர் தனஜெயன் தெரிவித்து இருக்கிறார். ஏனெனில் சேட்டிலைட் என்று சொல்லபடும் தொலைகாட்சியும் டிஜிட்டல் என்று சொல்லப்படும் இணையமும் எந்த பாதிப்பையும் எதிர்கொள்ள போவதில்லை முதல் பாதிப்பது திரையரங்கு தான். இதனால் ஒரு மாதத்தில் 150 கோடி அளவிளான இழப்பை தமிழ் சினிமா சந்திக்க போகிறது என தனஜெயன் கூறியுள்ளார் .

மேலும் திரையரங்குகளை நம்பிய மற்ற தொழில்களும் பெரிய பாதிப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக பார்கிங், உணவு மற்றும் திரையரங்கிற்கு அருகில் உள்ள கடைகள் என்று மிக பெரிய பாதிப்பை மறைமுகமாக மற்ற தொழில்களும் சந்தித்து வருகிறது என்று கூறினார் தனஜெயன் .

2017ல் இவன் தந்திரன் படத்தின் வெளியீட்டின் போது ஐந்து நாட்கள் தடை வந்தது ஆனால் அந்த படம் அதிர்ஷ்ட வசமாக மீண்டும் திரையிடபட்டு தப்பியது ஆனால், கொரோனா பாதிப்பால் நின்ற படங்கள் மீண்டும் திரையரங்கிற்கு வந்தால் மீண்டும் ரசிகர்களை கவர்வது கடினம் என்று கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்புக்கு முன் தாராள பிரபு, வால்டர் மற்றும் அசுரகுரு படங்கள் வந்தன. மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படும் போது இந்த படத்திற்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும் அதுமட்டுமின்றி மார்ச்சில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த மற்ற படங்களும் வெளியாக, பெரிய படங்கள் வழிவிட வேண்டும் அப்போது தான் சிறிய படங்கள் பிழைக்க முடியும் என்று கூறியுள்ளார்.

சினிமா பழைய படி இயல்பு நிலைக்கு திரும்பினால் முதல் மூன்று மாததிற்கு சினிமா பெரிய சிக்கல்களை சந்திக்க போகிறது என்று கூறினார் தனஜெயன், ஏனெனில் நடிகர்கள் கால்ஷீட் மற்றும் பல படப்பிடிப்பு தேதிகள் என குழம்பி பல பேர் தலை சுத்தி நிக்க போகிறார்கள் இதனால் இந்த பிரச்சனை சரியாக குறைந்தது மூன்று மாத காலம் ஆகும் என தனஞ்ஜெயன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.