Tuesday, March 18
Shadow

அக்டோபர் 7 தசரா விடுமுறையில் திரைக்கு வருகிறது ‘தேவி’

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த ‘தேவி’ திரைப்படத்தை பிரபுதேவாவும், அவருடன் இணைந்து ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் டாக்டர். ஐசரி கே.கணேஷும் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பிரபு தேவா, தமன்னா, எமி ஜாக்சன், சோனு சூட், நாசர், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மனுஷ் நந்தன், படத் தொகுப்பு – ஆண்டனி, இசை – சஜித் வஜித், விஷால் மிஸ்ரா, பாடல்கள் – நா.முத்துக்குமார், தயாரிப்பு – டாக்டர் ஐசரி கே.கணேஷ், இயக்கம் – விஜய்

“ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில், பிரபு தேவா, தமன்னா, சோனு சூட் ஆகிய முக்கிய கதாபாத்திரங்களை தவிர்த்து, அந்தந்த மொழிகளில் பரிச்சயமான வெவ்வேறு நடிகர் நடிகைகளோடு மற்ற கதாபாத்திரங்களுக்காக பணியாற்றுவது எனக்கு சவாலாகத்தான் இருந்தது.

இப்படிப்பட்ட வலுவான கூட்டணியில் பணியாற்றுவது என்பது எனது நீண்ட நாள் கனவு. அந்த கனவை தற்போது இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிஜமாக்கி இருக்கின்றனர்.

பிரபு தேவா சார் ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிப்பில் களம் இறங்கி இருப்பது, எங்கள் ஒட்டுமொத்த படக் குழுவினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி. அவருடைய ஆற்றலும், வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் போகிறது.

‘தேவி’ படத்தின் டிரைலர் மூலம் எங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த உற்சாகமும், வரவேற்பும், எங்களின் வலுவான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. ‘தேவி’ படத்தின் ஒரு பாடலை நாங்கள் நாளை வெளியிட முடிவு செய்திருக்கிறோம். விரைவில் வெளியாக இருக்கும் எங்களின் ‘தேவி’ படத்திற்கு இந்த பாடல் பக்கபலமாய் விளங்கும் என பெரிதும் நம்புகிறோம்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் விஜய்.

சமீபத்தில் ‘இருமுகன்’ படத்தை வெளியிட்டு மாபெரும் வெற்றியினை பெற்று திரைப்பட விநியோகத் துறையில் மாபெரும் அடையாளமாக உருவாகியிருக்கும் ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம்தான், இந்த ‘தேவி’ திரைப்படத்தையும் வெளியிடவுள்ளது.

அக்டோபர் 7 தசரா விடுமுறையில் திரைக்கு வருகிறது

Leave a Reply